கீழூர் நினைவு மண்டபம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீழூர் நினைவு மண்டபக் கல்வெட்டு

பிரெஞ்சு இந்தியா பகுதிகளான புதுச்சேரி, காரைக்கால், மாகே, யானம் இந்திய ஒன்றியத்துடன் இணைக்க வேண்டி 18 அக்டோபர் 1954-ஆம் ஆண்டு கீழூர் என்ற இடத்தில் வாக்கெடுப்பு நடைபெற்றது. வாக்கெடுப்பு நடை பெற்ற அந்த இடத்தில்தான் ஒரு நினைவு மண்டபம் கட்டப்பட்டு உள்ளது. சுமார் 178 மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டு வாக்களித்தனர். அதில் 170 பேர் இணைப்பு தேவை என்று வாக்கு அளித்தனர். 2012-ஆம் ஆண்டு புதுச்சேரி அரசு பிரெஞ்சு அரசாங்கத்திடம் விடுதலை பெற்ற புதுச்சேரியின் பொன்விழா ஆண்டில் இங்கு ஒரு ஓவிய கண்காட்சி நடத்தியது. கீழூர் வாக்கெடுப்பு நினனவு சின்னம் அமைக்க 1971 -ஆம் ஆண்டு அப்போதைய புதுவை துணைநிலை ஆளுநர் மாற்று முதல்வரால் அடிக்கல் நாட்டப்பட்டது

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீழூர்_நினைவு_மண்டபம்&oldid=3681703" இலிருந்து மீள்விக்கப்பட்டது