கீழாத்தூர் நாடியம்மன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஆலயத்தின் எழில்மிகு முன்புற தோற்றம்

அருள்மிகு ஸ்ரீ நாடியம்மன் திருக்கோவில் புதுக்கோட்டை மாவட்டம்ஆலங்குடி வட்டத்தில் புதுக்கோட்டைலிருந்து-பேராவூரணி,பட்டுக்கோட்டை-க்கான மாநில நெடுஞ்சாலையில் ஆலங்குடி அருகே சுமார் 5 கி.மீ தொலைவில் கிழக்கில் உள்ள கீழாத்தூர் என்னும் கிராமத்தில் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆடி மாதம் திருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

திருத்தல வரலாறு முதல் இன்றுவரை[தொகு]

இத்திருத்தலமானது சுமார் 150 வருடங்களுக்கு முற்பட்டது என்று தலவரலாறு தெரிவிக்கிறது.கடந்த 2008 வருடம் இக்கோவில் திருப்பணி செய்யப்பட்டு குடமுழுக்கு செய்யப்பட்டது.கோவில் முழுதும் கல்லால் ஆன மண்டபம் எழுப்பப்பட்டுள்ளது.இப்பகுதியில் மிகவும் தொன்மையும் பிரசித்தியும் பெற்ற தளங்களுல் இவ்வாலயமும் ஒன்று.

திருத்தலம் உருவான செய்மதி கதை[தொகு]

முன்னொரு காலத்தில் இப்பகுதி அடர்ந்த காட்டுப்பகுதியாகவும் மான்,முயல்கள் மற்றும் பல காட்டு உயிரினங்கள் அதிகமாக காணப்பட்டதாகவும் அப்போது அந்த பகுதியில் சிலர் வேட்டைக்கு சென்றனறாம்.அந்த காலகட்டத்தில் மன்னரால் இயற்றப்பட்ட சட்டமான மானை வேட்டையாடினால் மரண தண்டனை என்பது இவர்களுக்கு தெரிந்த விஷயம்.இருந்தும் இவர்கள் இப்பகுதிக்கு வேட்டைக்கு சென்று மானை வேட்டையாடி அதன் கறிகளை சேமித்து வைத்து(தற்போது திருத்தலம் உள்ள இடத்தில்) பகிரப்படும் வேளையில் மன்னரின் பாதுகாவலர்கள் இவர்களை நெருங்கினர்.உயிருக்கு பயந்த வேட்டைக்காரர்கள் இறைவனை நோக்கி வேண்டிக்கொண்டது.

"இறைவா இக்கறிகள் அனைத்தும் பன்றிக்கறியாக மாற்றி விடு உனக்கு இவ்விடத்தில் நாங்கள் ஆண்டுதோறும் இதே வேளையில் திருவிழா கொண்டாடுகிறோம்"

என்று வேண்டியதன் வாயிலாக அம்மன் தோன்றி அனைத்து கறிகளையும் பன்றிக்கறியாக மாற்றியது என்பது செய்மதி கதை.அந்த விஷயத்தை இன்றும் இக்கோவில் விழாக்காலத்தின் போது ஒருநாள் திருவிழாவாக "கொலைவெட்டு பூசை" எனற பெயரில் கொண்டாடுவதை காணமுடிகிறது.அவர்கள் கறியை சேமித்த மரத்தடியானது இன்றும் உள்ளது மிக பழமையான பெரிய மரம் ஆலயத்தில் முன்புறத்தில் உள்ளது.கோவில் செப்பனிட மற்ற எல்லா மரங்களையும் அகற்றிய போதும் இம்மரத்தை மட்டும் அப்படியே வைத்துள்ளார்கள்.

பிரத்தியேக விழாக்கள்[தொகு]

பாலை எடுத்தல்,பால்குடம் எடுத்தல் போன்ற நேர்த்திக்கடன் வழிபாடுகள் இத்திருத்தலத்தில் அதிகமாக காணப்படுகிறது.ஆலயத்தின் கிணற்றில் பால் போன்ற குடிநீர் ஆண்டு முழுதும் கையால் இறைத்து குடிக்கும் ஆழத்தில் காணப்படுவது இந்த ஆலயத்தில்தான்.

ஆலயத்தின் கிணறு

சில கட்டுப்பாடுகள்[தொகு]

கர்ப்பிணி பெண்கள் இவ்வாலயத்தின் திருவிழா காலத்தில் ஊருக்குள் இருப்பதில்லை இன்றும் இந்த விஷயம் பின்பற்றப்படுகிறது.

பனோரமா வடிவில் கிழக்கு பகுதி
பனோரமா வடிவில் மேற்கு பகுதி