உள்ளடக்கத்துக்குச் செல்

கீர்த்தி சிறீ இராஜசிங்கன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்கன்
Kirti Sri Rajasinha
கண்டி இராச்சியத்தின் மன்னன்
ஆட்சி11 ஆகத்து 1747 – 2 சனவரி 1782
முடிசூட்டு விழா1750
முன்னிருந்தவர்விஜய இராஜசிங்கன்
பின்வந்தவர்ஸ்ரீ ராஜாதி ராஜசிங்கன்
துணைவர்நடுக்காட்டு சாமி நாயக்கரின் மகள், மேலும் மூன்று நாயக்க மறுமணங்கள், யக்கட டொலி
வாரிசு(கள்)ஆறு பெண்கள், இரண்டு ஆண்கள் (யக்கட டொலியுடன்)
மரபுகண்டி நாயக்கர்
தந்தைநரனப்ப நாயக்கர்
பிறப்பு1734
இறப்பு2 சனவரி 1782
கண்டி

கீர்த்தி ஶ்ரீ இராஜசிங்கன் (Kirti Sri Raja Singha, சிங்களம்: ශ්‍රී කීර්ති ශ්‍රී රාජසිංහ, 1734 - 2 ஜனவரி 1782) என்பவன் கண்டி இராச்சியத்தின் இரண்டாவது நாயக்க வம்ச மன்னன் ஆவான். இவன் மதுரை நாயக்க இளவரசனும், ஶ்ரீ விஜய இராஜசிங்கனின் மனைவியின் சகோதரனும் ஆவான்.

ஶ்ரீ விஜய இராஜசிங்கன் 1747 ஆம் ஆண்டில் இறந்த பின்னர், நாயக்க வம்ச மரபுப்படி அவனது மனைவியின் சகோதரன் கீர்த்தி ஸ்ரீ இராஜசிங்கன் கண்டியின் மன்னன் ஆனான். அப்போது அவனுக்கு பதினாறு வயது. எனவே அவன் முடிசூடி ஆட்சியை பொறுப்பேற்றது 1751 ஆம் ஆண்டிலாகும். அதுவரையிலும் அவனது தந்தை நரனப்பா நாயக்க ஆட்சியை கவனித்தார். நாயக்கர்களது செயல்களை விரும்பாத பிரதானிகள் அவனுக்கு எதிராகச் சூழ்ச்சி செய்தனர். இவனது காலம் பிரதானிகளுக்கும் மன்னனுக்கும் இடையில் குழப்பம் நிறைந்ததாக இருந்தது.

அரசியல் பணிகள்

[தொகு]

இவன் கி.பி 1760ம் ஆண்டு ஒல்லாந்தருக்கு எதிராக மக்களை கிளர்ச்சி அடைய செய்தான். பிரித்தானியரின் உதவிபெற பிரித்தானியத் தூதுவான் ஜான் பைபசை 1762ல் சந்தித்துப் பேசினான். கி.பி.1765 சனவரியில் ஒல்லாந்தர் கண்டியை ஆக்கிரமிப்புச் செய்தபோது ஒல்லாந்தருடன் உடன்படிக்கை ஒன்றை செய்து கொள்கிறான்.

சமய நடவடிக்கைகள்

[தொகு]

இவன் தலதா பெரகராவுடன் தேவாலயப் பெரகராவையும் இணைத்து எசல பெரகராவை நடத்தினான். பழைய இராசதானிகளில் சிதைவுற்றிருந்த விகாரைகளை புனர்நிர்மானம் செய்தான். வெலிவிட்ட சரணங்கர தேரர் என்ற பௌத்த பிக்குவின் சமய பணிகளிக்கு ஆதரவு வழங்கினான். விகாரைகளை கொண்டு நடத்த அதற்கு நிலபுலன்களை வழங்கினான்.

உபசம்பதா அந்தஸ்தைப் பெற்றிருந்த குருமாரை நாட்டில் காண்பதே அரிதாக இருந்தது. இதனால் சரணங்கர தேரரின் ஆலோசனைப்படி மன்னன் ஒல்லாந்தரிடம் கப்பலைப் பெற்று சீயம் நாட்டிற்குத் தூதுக் குழு ஒன்றை அனுப்பி உபாலி தேரர் உட்பட சமய குருமாரை வரவழைத்து 1753 ஆம் ஆண்டு உபசம்பதா வைபவத்தை நடத்து வித்தான்.

இவர் வெலிவிட்ட ஸ்ரீ சரணங்கர தேரருக்கு ' சங்கராஜா' பதவியை வழங்கினார்.

இவற்றையும் பார்க்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
கீர்த்தி சிறீ இராஜசிங்கன்
பிறப்பு: ? ? இறப்பு: 2 சனவரி 1782
ஆட்சியின் போது இருந்த பட்டம்
முன்னர் கண்டி இராச்சியத்தின் மன்னன்
11 ஆகத்து 1747–2 சனவரி 1782
பின்னர்