கீரனூர் (இராமனாதபுரம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராமநாதபுர மாவட்டத்தில் உள்ள கீரனூர் கிராமம், முதுகுளத்தூரிலிருந்து சுமார் ஏழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு பல்வேறு இன, மதத்தைச் சார்ந்தவர்கள் வாழ்ந்து வருகிறார்கள். சமத்துவ கிராமமாகத் திகழ்கிறது. இங்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியும், அரசு உயர்நிலைப்பள்ளியும் செயல்பட்டு வருகிறது. இரு பள்ளியிலும் சேர்த்து சுமார் 150 மாணவ, மாணவியர் பயின்று வருகிறார்கள்.

மக்கள் பரம்பல்[தொகு]

முதுகுளத்தூர் பஞ்சாயத்து ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராமத்தின் மொத்த மக்கட்தொகை 1,905ஆகும். அதில் ஆண்கள் 975 ஆகவும், பெண்கள் 930 ஆகவும உள்ளனர். தலித்துகள் தொகை 383 ஆக உள்ளது. [1]

மேற்கோள்கள்[தொகு]

  1. MUDUKULATHUR PANCHAYAT UNION