உள்ளடக்கத்துக்குச் செல்

கீமா மட்டார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீமா மட்டார்
கீமா மட்டார்
மாற்றுப் பெயர்கள்பட்டாணியுடன் அரைத்த மாட்டிறைச்சி கறி
வகைவீட்டு உணவு
தொடங்கிய இடம்இந்தியத் துணைக்கண்டம்
பகுதிஇந்தியத் துணைக்கண்டம்
தொடர்புடைய சமையல் வகைகள்இந்தியா, பாக்கித்தான், வங்காளதேசம்
முக்கிய சேர்பொருட்கள்அரைத்த இறைச்சி, பட்டாணி
பொதுவாக பயன்படுத்தப்படும் பொருட்கள்இந்திய மசலா
இதே போன்ற உணவுகள்ஆலூ கீமா
பிற தகவல்கள்ஆலு மட்டர்

 

கீமா மட்டார் (ஆங்கிலம் Keema matar; மொ.பெ.: "நறுக்கு மற்றும் பட்டாணி"),[1] என்பது முகலாயர்களுடன் தொடர்புடைய இந்தியத் துணைக் கண்டத்தைச் சேர்ந்த ஓர் உணவாகும். இந்தச் சொல்லானது சகதாயி துருக்கிய قیمه (துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட இறைச்சி) என்பதிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் துண்டுத் துண்டாக வெட்டப்பட்ட அல்லது அரைத்த இறைச்சி என்பதாகும்.

வரலாறு

[தொகு]

"கீமா மட்டார்" முகலாய இந்தியாவின் அரசவைகளில் பிரபலமாக உண்ணப்பட்ட உணவாகும்.

பெயர்

[தொகு]

இந்த உணவு முதலில் "கீமா மட்டார்" என்று அழைக்கப்பட்டது. ஆனால் இப்போதெல்லாம் "மட்டார் கீமா" என்று குறிப்பிடப்படுகிறது. பாக்கித்தானில், ق என்ற எழுத்து உச்சரிக்கப்படும் விதம் காரணமாக, இந்த உணவு "q" (குயுமாவுடன்) உடன் எழுதப்படுகிறது. ஆனால் இந்தியாவிலும் வங்காளதேசத்திலும், இது "k" (கீமா) உடன் எழுதப்படுகிறது.

மாறுபாடுகள்

[தொகு]

இந்த உணவின் பிரபலமான மாறுபாடு ஆலு கீமா (உருளைக்கிழங்கு மற்றும் துண்டு துண்தாக வெட்டப்பட்ட இறைச்சி) ஆகும்.[2] இது பொதுவாக வட இந்திய, பாக்கித்தானிய வீடுகளில் சமைக்கப்படுகிறது.

கீமா சமோசாக்களுக்கு நிரப்பியாகவும் பயன்படுத்தப்படுகிறது. [3]

தேவையான பொருட்கள்

[தொகு]
இந்திய மசாலாப் பொருட்களுடன் கீமா மட்டார்

இந்த உணவின் பொருட்கள் ஏற்கனவே அதன் பெயரில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதாவது " மட்டார் " (பட்டாணி) மற்றும் " கீமா " (நறுக்கு) ஆகும். இதற்குப் பயன்படுத்தப்படும் இறைச்சிகளில் அரைத்த ஆட்டின் இறைச்சி, மாட்டிறைச்சி ஆகியவை அடங்கும்.[4] பிற பொருட்களில் இந்திய மசாலா பொருட்கள் மற்றும் வனஸ்பதி நெய்யுடன் தண்ணீர் ஆகியவை அடங்கும்.

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Narain, P. (2000). The Essential Delhi Cookbook. Penguin Books Limited. p. pt54. ISBN 978-93-5118-114-9.
  2. Jamil, Tressa (2021-12-20). "Aloo Keema (Ground Beef and Potato Curry)". Jamil Ghar (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2022-11-04.
  3. "Keema Samosa Recipe: How to Make Keema Samosa Recipe | Homemade Keema Samosa Recipe". recipes.timesofindia.com (in ஆங்கிலம்). Retrieved 2022-11-04.
  4. Goor, R.; Goor, N. (1999). Eater's Choice Low-Fat Cookbook: Eat Your Way to Thinness and Good Health. Houghton Mifflin Company. p. 23. ISBN 978-0-395-97104-8.

வார்ப்புரு:Bangladeshi dishes

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீமா_மட்டார்&oldid=4213038" இலிருந்து மீள்விக்கப்பட்டது