கீதா ராணி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கீதா ராணி (Geeta Rani ) என்பவர் ஓர் இந்திய பாரம் தூக்கும் பெண் விளையாட்டு வீராங்கனை ஆவார். இவர் 1981 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16 ஆம் நாள் பிறந்தார். 2006 ஆம் ஆண்டு ஆத்திரேலியாவில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளின் பெண்கள் +75 கிலோகிராம் எடைப் பிரிவில் போட்டியிட்ட இவர் தங்கப் பதக்கம் வென்றார்[1]. 2004 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன் பட்டப் போட்டியில் மூன்று வெள்ளி பதக்கங்களும் ஒரு வெண்கலப் பதக்கமும் கீதா வென்றார். 2003 ஆம் ஆண்டு ஐதராபாத்தில் நடைபெற்ற ஆப்ரோ-ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இவருக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. புது தில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பெண்கள் +75 கி.கி எடைப்பிரிவில் இவர் போட்டியிட்டு நான்காம் இடத்தைப் பிடித்தார்[2]. 2006 ஆம் ஆண்டு இந்திய அரசாங்கம் கீதா ராணிக்கு அருச்சுனா விருதை வழங்கி சிறப்பித்தது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_ராணி&oldid=2719468" இருந்து மீள்விக்கப்பட்டது