கீதா போகாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கீதா போகத் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கீதா போகத்
தனிநபர் தகவல்
தேசியம்இந்தியா இந்தியர்
பிறப்பு15 திசம்பர் 1988 (1988-12-15) (அகவை 35)
பிவானி, அரியானா, இந்தியா[1]
வசிப்பிடம்அரியானா
எடை55 கிலோ
துணைவர்(கள்)பவண் குமார்
விளையாட்டு
நாடுஇந்தியா
விளையாட்டுமற்போர்
நிகழ்வு(கள்)கட்டற்றவகை மற்போர்
பயிற்றுவித்ததுமகாவீர் சிங் போகத்
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
உலக மற்போர் வாகையர் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2012 ஸ்டிராத்கோனா கவுண்டி 55 கிலோ]]
பொதுநலவாய விளையாட்டுகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2010 , புதுதில்லி
ஆசிய மற்போர் வாகையர் போட்டிகள்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2012 குமி (Gumi) 55 கிலோ
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2015, தோகா 58 கிலோ
பொதுநலவாய மற்போர் வாகையர் போட்டிகள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2009 ஜலந்தர்[2] 55 kg
தங்கப் பதக்கம் – முதலிடம் 2011 மெல்பர்ன்[3] 55 kg
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2013 ஜோகன்ஸ்பர்க்[4] 59 kg
FILA ஆசிய ஒலிம்பிக் தகுதிப் போட்டி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2012 Astana[5] 55 kg
செப்டம்பர் 15, 2015 இற்றைப்படுத்தியது.

கீதா போகட் (Geeta Phogat 15 டிசம்பர், 1988)[1] இந்திய பெண் மல்யுத்த வீராங்கனையாவார். இவர் பெண்களுக்கான மற்போரில் 51 கிலோ வகுப்பில் 2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். இவர் பொதுநலவாய விளையாட்டுக்களில் மல்யுத்த பாேட்டியில் தங்க பதக்கம் வென்ற முதல் இந்திய வீராங்கனையாவார். ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்குபெறுவதற்கு தகுதிபெற்ற முதல் இந்தியப் பெண் மல்யுத்த வீரருமாவார்.[5]

தனிவாழ்வும் குடும்பமும்[தொகு]

பொதுநலவாய விளையாட்டுக்களில் மற்போரில் வெள்ளி பதக்கம் பெற்ற பபிதா குமாரியின் உடன்பிறப்பாவார். இவர் மற்போர் விளையாட்டாளர் மகாவீர் சிங் போகத்தின் மகளாவார். மகாவீர் சிங் போகத் துரோணாச்சார்யா விருது பெற்ற மற்போர் விளையாட்டு வீரராவார். இவரே கீதா போகத்தின் பயிற்சியாளருமாவார்.[6][7] இவரது உடன்பிறப்பு வினேசு போகத்தும் கிளாசுகோ பொதுநலவாய விளையாட்டுக்களில் தங்கப் பதக்கம் வென்றுள்ளார். கீதா பாேகத்தும் அவரது சகோதரியும் அரியானாவில் தங்கள் சிற்றூரில் பெண்களைக் குறித்த பார்வையையும் மனப்பாங்கையும் மாற்றியுள்ளனர்.

சாதனைகள்[தொகு]

2009 பொதுநலவாய மல்யுத்தப் போட்டி[தொகு]

2009 ஆண்டு ஜலந்தர், பஞ்சாப்பில் நடைபெற்ற பொதுநலவாய மல்யுத்தப் போட்டியில் (19 - 21 டிசம்பர் 2009) தங்கப் பதக்கம் வென்றார்.[8]

2010 பொதுநலவாய விளையாட்டு[தொகு]

2010 ஆண்டு இந்தியாவில் புது தில்லியில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு பாேட்டியில் மல்யுத்தப் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.[9][10]

2012 உலக மல்யுத்த வாகையாளர் போட்டி[தொகு]

2012 ஆண்டு கனடாவில் நடைபெற்ற உலக மல்யுத்த வாகையாளர் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[11]

2013 பொதுநலவாய விளையாட்டு[தொகு]

2013 ஆண்டு ஜோகன்னஸ்பர்க்கில் நடைபெற்ற பொதுநலவாய விளையாட்டு பாேட்டியில் மல்யுத்தப் பிரிவில் வெள்ளி பதக்கம் வென்றார்.[12]

2015 ஆசிய மற்போர் வாகையாளர் போட்டி[தொகு]

2015 இல் தோகாவில் நடந்த ஆசிய மற்போர் வாகையாளர் போட்டியில் 58 கிலோ கட்டற்ற பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றார்.[13]

திரைப்படம்[தொகு]

இவரது வாழ்வை மையமாகக் கொண்டு ஆமிர் கான் நடித்த தங்கல் என்ற திரைப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டு, வெற்றிகரமாக ஓடியது.[14][15][16]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Geeta Phogat பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம். sports-reference.com
  2. {{cite news|title=Indian women win three gold in Commonwealth Wrestling |url=http://zeenews.india.com/home/indian-women-win-three-gold-in-commonwealth-wrestling_588887.html |accessdate=27 November 2016 |work=Zee News |agency=[[பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியா|PTI |date=19 December 2009 |archiveurl=https://archive.today/20161127143308/http://zeenews.india.com/home/indian-women-win-three-gold-in-commonwealth-wrestling_588887.html |archivedate=27 November 2016 |dead-url=no |df=dmy }}
  3. "RESULTS – 2011 Championships". commonwealthwrestling.sharepoint.com. Commonwealth Amateur Wrestling Association (CAWA). Archived from the original on 13 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "2013 – COMMONWEALTH WRESTLING CHAMPIONSHIPS". commonwealthwrestling.sharepoint.com. Commonwealth Amateur Wrestling Association (CAWA). Archived from the original on 21 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 14 September 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  5. 5.0 5.1 "Geeta clinches gold to qualify for Olympics". இந்தியா டுடே. 2 April 2012. http://indiatoday.intoday.in/story/geeta-clinches-gold-to-qualify-for-olympics/1/182719.html. பார்த்த நாள்: 7 March 2016. 
  6. The hero behind 'Dangal' - Times of India. Timesofindia.indiatimes.com (14 June 2015). Retrieved on 2016-11-21.
  7. Wrestling coach Mahavir Phogat overlooked for Dronacharya Award - Sports. Mid-day.com. Retrieved on 21 November 2016.
  8. "2009 Championships". commonwealthwrestling.sharepoint.com. Archived from the original on 22 அக்டோபர் 2013. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015.
  9. Barua, Suhrid (19 August 2015). "Interview with Geeta Phogat: "I am determined to go beyond my World Championships bronze medal finish"". www.sportskeeda.com.
  10. "International Wrestling Database". www.iat.uni-leipzig.de. Archived from the original on 5 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  11. "Fédération Internationale des Luttes Associées". Fila-wrestling.com. Archived from the original on 14 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 13 October 2012. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  12. "International Wrestling Database". www.iat.uni-leipzig.de. Archived from the original on 4 மார்ச் 2016. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  13. "International Wrestling Database". www.iat.uni-leipzig.de. Archived from the original on 29 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 2 November 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  14. "Aamir Khan to play Mahavir Phogat in Dangal, meets his wrestler daughters Geeta and Babita". Indian Express. 30 July 2015.
  15. Mangaokar, Shalvi (30 July 2015). "This is how Aamir is preparing for his role in Dangal". Hindustan Times, New Delhi. Archived from the original on 1 செப்டம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 5 ஜூலை 2017. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  16. "‘Dangal’ experience changed my life: Kashmiri actor Zaira Wasim". The Indian Express. 13 December 2015. http://indianexpress.com/article/entertainment/bollywood/dangal-experience-changed-my-life-kashmiri-actor-zaira-wasim/. பார்த்த நாள்: 16 March 2016. 

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_போகாட்&oldid=3791628" இலிருந்து மீள்விக்கப்பட்டது