கீதா நாகபூசன்
கீதா நாகபூசன் | |
---|---|
பிறப்பு | சவலாகி, குல்பர்கா கலாபுர்கி), கருநாடகம் | 25 மார்ச்சு 1942
இறப்பு | 28 சூன் 2020 குல்பர்கா | (அகவை 78)
பணி | எழுத்தாளர் |
கீதா நாகபூசன் (Geetha Nagabhushan)(25 மார்ச் 1942 – 28 சூன் 2020) என்பவர் ஓர் இந்திய எழுத்தாளரும், நாவலாசிரியரும் கல்வியாளரும், கன்னடத்தில் தனது படைப்புகளுக்காக அறியப்பட்டவரும் ஆவார். 2004-ஆம் ஆண்டு தன்னுடைய "படுகு" நாவலுக்காக மாநிலச் சாகித்திய அகாதமி விருதைப் பெற்ற முதல் கன்னடப் பெண் எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றார்.[1]
இளமை
[தொகு]கீதா 1942-ஆம் ஆண்டு சவலகியில் சாந்தப்பா மற்றும் சரணம்மாவுக்கு மகளாகப் பிறந்தார். இவருக்கு 2 சகோதரிகளும் ஒரு சகோதரனும் இருந்தனர்.[2] சுதந்திரப் போராட்ட வீரரான இவரது தந்தை குல்பர்காவில் உள்ள ஒரு துணி தொழிற்சாலையில் பணிபுரிந்தார்.[3]
தனிப்பட்ட வாழ்க்கை
[தொகு]கீதா இரண்டு முறை திருமணம் செய்து கொண்டார். நாகபூசண் இவரது இரண்டாவது கணவர். இந்த இணையருக்கு இரண்டு குழந்தைகள் இருந்தனர். திருமணமான சில வருடங்களுக்குப் பிறகு, கீதா பிரிந்து குழந்தைகளுடன் வாழ்ந்தார்.[4]
இலக்கியப் படைப்புகள்
[தொகு]கீதாவின் மிகவும் பிரபலமான படைப்புகள் நாவல்கள் ஆகும். இவர் சிறுகதைகள், ஆராய்ச்சி புத்தகங்கள், கட்டுரைகளையும் வெளியிட்டுள்ளார்.[5]
நாவல்கள்
[தொகு]- தாவரேய ஹூவு
- சந்தனதா சிகுரு
- மகாமானே
- மராலி மானே
- சப்தவர்ணத ஸ்வப்னா
- மாபுர தாயியா மக்கள்
- ஹாசிமாம்ச மட்டு ஹட்டுகளு
- ஆகாதா
- அவந்தரா
- சக்கிய ஹரேயட தினங்கள்
- படலாகுவ பன்னகளு
- நீலகங்கா
- பிரீதிசித்து நின்னேன்
- மோஹ்வா
- நின்னா தொலுகலல்லி
- நின்னோலாவு நானகிரலி
- சவதி ஸ்ரீகந்தா
- நன்னா நின்னா நடுவே
- சித்ரதா ஹாடு
- தும்மாசு
- எரிலிதகலு
- அசாரேகலு
- நன்னா ஒலவு நின்னா செலுவு
- டாங்கே
- அபிமானா
- படுகு
- கேஜ் முட்டிடு
- பாக்கி
- காப்பு நெலா கெம்பு ஹூவு
- கட்டுமுச்சி
கதைத் தொகுப்புகள்
[தொகு]- ஜ்வலந்தா
- அவ்வ மட்டு இதாரா கதைகளு
- கியாதிகி பனடக கதேயாகி நிந்தவாரு
ஆராய்ச்சி பணிகள்
[தொகு]- துருக முருகியர சம்சுக்ருதி
கீதா நாகபூசனின் விருது பெற்ற நாவலான படுகு, இப்போது குசும் தந்திரியால் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, மாநில சாகித்திய அகாதமியால் வெளியிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Geeta Nagabhushan's essays portray plight of women - KARNATAKA - The Hindu". Thehindu.com. 7 January 2010. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-karnataka/geeta-nagabhushans-essays-portray-plight-of-women/article679258.ece. பார்த்த நாள்: June 24, 2016.
- ↑ "Ananya Mahila Chetana Malike: Geetha Nagabhushana" by L. V. Shanta Kumari, Sapna book house, p. 5
- ↑ "Ananya Mahila Chetana Malike: Geetha Nagabhushana" by L. V. Shanta Kumari, Sapna book house, p. 4
- ↑ "Ananya Mahila Chetana Malike: Geetha Nagabhushana" by L. V. Shanta Kumari, Sapna book house, p. 10, 11
- ↑ Kannada Sahitya Kosha, Rajappa Dalavayi (ed), (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-939213-0-2), ೨೦೧೮, p. ೯೪೭