உள்ளடக்கத்துக்குச் செல்

கீதா கோபி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீதா கோபி
Geetha Gopi
சட்டமன்ற ய்றுப்பினர்
பதவியில் உள்ளார்
பதவியில்
1 சூன் 2011
தொகுதிநாட்டிக்கா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு30 மே 1973 (1973-05-30) (அகவை 51)
புன்னையூர்குளம்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிஇந்தியப் பொதுவுடைமைக் கட்சி
துணைவர்கே. கோபி
பிள்ளைகள்ஒரு மகன், ஒரு மகள்

கீதா கோபி (Geetha Gopi) இந்தியாவின் கேரள மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். கீதா கோபி புன்னையர்குளத்தில் 1973 ஆம் ஆண்டு மே மாதம் 30 ஆம் தேதியன்று பிறந்தார். திருச்சூரைச் சேர்ந்த இவர் நாட்டிகா தொகுதியிலிருந்து இந்திய பொதுவுடமைக் கட்சியின் சார்பாக  தேர்ந்தெடுக்கப்பட்டார். [1][2] தனது அரசியல் பயணத்தை 1995 ஆம் ஆண்டு முதல் கீதா கோபி தொடங்கினார்.[2] 2004 ஆம் ஆண்டில் குருவாயூர் பேரூராட்சியின் தலைவராகவும் இவர் இருந்தார். பின்னர் 2009 ஆம் ஆண்டிலும், 2011 ஆம் ஆண்டிலும் இதே பேரூராட்சியில் துணைத் தலைமைப் பொறுப்பில் இருந்தார்.[2]

2017 ஆம் ஆண்டு சூன் மாதம் 15 ஆம் தேதியன்று தனது மகளின் ஆடம்பர திருமணத்தில் கலந்து கொண்டதற்காக கட்சி கோபிக்கு எச்சரிக்கை விடுத்தது.[3]

மேற்கோள்கள்[தொகு]

  1. Niyamasabha MLA list
  2. 2.0 2.1 2.2 Geethe Gopi MLA Official Web Portal Gov of Kerala
  3. "CPI warns MLA for lavish wedding | Kochi News - Times of India".
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதா_கோபி&oldid=3213503" இலிருந்து மீள்விக்கப்பட்டது