கீதாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

‘கீதாரி” 2003ல் வெளிவந்த எழுத்தாளர் சு. தமிழ்ச்செல்வியின் நாவல் ஆகும்.

சிறப்பு[தொகு]

திருச்சி ஈ. வே. ரா. கல்லூரியில் முதுகலைத் தமிழ்ப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

பொருள்:[தொகு]

‘கீதாரி” என்பது இடையரைக் குறிக்கும்.இந் நாவலில் இடையர்களின் தலைவன் 'கீதாரி' என்னும் சொல்லால் அழைக்கப்படுகிறார்.

இந்நாவல் இடையர் வாழ்வைச் சித்தரிக்கிறது.

தங்குமிடம்:[தொகு]

இடையர்கள் ஆட்டுக் கிடை போடும் இடத்தில் கூண்டு அமைத்து தங்குவர். மேய்ச்சல் தேடி ஆடுகளுடன், தங்கும் கூண்டு, ஆடுகள் அடைக்கும் பட்டிகளையும் உடன் எடுத்துக் கொண்டு செல்வது வழக்கம்;

உணவு:[தொகு]

ஆட்டுக்கிடையில் இறக்கும் ஆட்டு இறைச்சியைக் காய வைத்து உப்புக்கண்டமாக்கிப் பயன்படுத்துவர்.

திருமணம்:[தொகு]

திருமண நாளன்று மணமகன் ஆடு மேய்க்கச் சென்று விட்டால் அவன் ஆடு மேய்க்கும் கம்பை அவனிடத்தில் வைத்து மணம் முடிப்பர். பெண்களுக்குச் சிறிய தந்தை உறவு முறையில் உள்ளவரும் திருமணம் செய்து வைக்கும் பழக்கம் உடையவர். நகையுடன் வசதிக்கேற்ப ஓராண்டு முதல் மூன்று ஆண்டுகளுக்குத் தேவையான மளிகைப் பொருள்களை வரதட்சணையாய் வாங்கிக் கொடுப்பர் அண்ணன் இறந்தால் அண்ணன் மனைவியைத் தம்பி மறுமணம் செய்து கொள்வது வழக்கம் மற்றும் ஆடுகளும் சீதனமாக வழங்கப்பட்டது.

இறப்பு:[தொகு]

மேய்ச்சலுக்காக வெளியிடம் சொல்லும் இடையர் வழியில் இறந்துவிட்டால் ஆடுகளை விற்றாவது சொந்த ஊரில் கொண்டு புதைப்பர்.

பிரச்சனைகள்:[தொகு]

ஆடுகளுக்கு எளிதில் நோய் தொற்றும் மழைகாலம், ஆடுகள் திருடு போதல், தூக்கமின்மை ஆகியவை இடையர் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கீதாரி&oldid=3502383" இருந்து மீள்விக்கப்பட்டது