கீதாஞ்சலி லால்
கீதாஞ்சலி லால் | |
|---|---|
| பிறப்பு | கீதாஞ்சலி தேசாய் 5 நவம்பர் 1948 வடோதரா, குசராத்து, இந்தியா |
| தேசியம் | |
| பணி | கலை இயக்குனர், தேவி-துர்கா கதக் சன்ஸ்தான்[1] |
| அறியப்படுவது | கதக் நடனக் கலைஞர், நடன இயக்குநர் |
| வாழ்க்கைத் துணை | பண்டிட் தேவ் லால் |
| பிள்ளைகள் | அபிமன்யு லால் |
| வலைத்தளம் | |
| http://kathakresonance.com/ | |
கீதாஞ்சலி லால் (Geetanjali Lal) (பிறப்பு: கீதாஞ்சலி தேசாய்) (நவம்பர் 5,1948) ஒரு இந்திய கதக் நடனக் கலைஞரும், நடன இயக்குனரும் ஆவார்.
இளமை வாழ்க்கை
[தொகு]கீதாஞ்சலி லால், பாரம்பரிய இந்துத்தானி இசையில் முறையான பயிற்சியை தனது தந்தை ரஜினிகாந்த் தேசாயிடமிருந்து பெற்றார். இவரின் தந்தை பாடகரும், இசைப் பேராசிரியரும், ஆக்ரா கரானாவின் அஃப்தாப்-இ-மோசிக்கி உஸ்தாத் ஃபயாஸ் கானின் சீடரும் ஆவார்.[2] கீதாஞ்சலி புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர் ரோசன் குமாரியின் கீழ் தனது 6 வயதில் கதக் நடனத்தில் முறையான பயிற்சியைத் தொடங்கினார்.[3][4]
பின்னர்,கோபி கிருட்டிணா, ஜெய்ப்பூர் கரானாவின் மோகன்ராவ் கல்லியன் புர்கர் மற்றும் பண்டிட் தேவி லால் ஆகியோரின் கீழும் பயிற்சியினைத் தொடர்ந்தார்.[5][6][7]
தொழில் வாழ்க்கை
[தொகு]கீதாஞ்சலி, புது தில்லியில் அமைந்துள்ள கதக் நடனத்தின் தேசிய நிறுவனத்தின் இயக்குனர் பதவியை 2009-2012 இலிருந்து வகித்தார்.[8][9]தூர்தர்ஷன் மற்றும் புதுதில்லியில் உள்ள இந்தியக் கலாச்சார உறவுக் குழுவின் சிறந்த தரக் கலைஞர் ஆவார்.[9]
கீதாஞ்சலி தனது சிக்கலான அபிநயம்,ஜெய்ப்பூர் கரானாவின் பிற அம்சங்களான லேகாரி, போன்றவற்றுக்காக நன்கு அறியப்பட்டவர். 2001 ஆம் ஆண்டு குஜராத் நிலநடுக்கம், நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மீதான தாக்குதல்கள் மற்றும் அமிதாப் பச்சன் நடித்த பிரபலமான தொலைக்காட்சி வினாடி வினா நிகழ்ச்சியான 'கோன் பனேகா குரோர்பதி' ஆகியவற்றைப் பற்றிய தனது கற்பனையான நடனக் கலையால் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.[10]
கீதாஞ்சலி, பிரபாத் முகர்ஜி இயக்கத்தில் வெளியான ஷாயர்-இ-காஷ்மீர் மஹ்ஜூர் (1972) என்ற காஷ்மீரி திரைப்படத்தில் நடிகர்கள் பல்ராஜ் சாஹனீ, பரிசத் சகானி, பிரான் ஆகியோருடன் சேர்ந்து ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்தார்.[11][12]
சொந்த வாழ்க்கை
[தொகு]கீதாஞ்சலி ஜெய்ப்பூர் கரானாவைச் சேர்ந்த பண்டிட் தேவ் லால் என்பவரை மணந்தார்.[13][14]
புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞர்களான அபிமன்யு லால் (இவரின் மகன்) விதாலால் மற்றும் அவினவ் முகர்ஜி ஆகியோர் இவரது சீடர்கள் ஆவர்.[15]
விருதுகளும் கௌரவங்களும்
[தொகு]- 2007 ஆம் ஆண்டில் சங்கீத நாடக அகாதமி தனது சங்கீத நாடக அகாதமி விருதினை வழங்கியது.[9]
மேலும், "நிருத்ய சாரதா", "நாட்டிய கலா ஸ்ரீ", "பாரத் கௌரவ்", "கலா சிரோமணி" "இந்திரா காந்தி பிரியதர்சினி விருது" மற்றும் "கல்பனா சாவ்லா விருது", "ஜிஜாபாய் மகளிர் சாதனையாளர் விருது", "ஆச்சார்யா கலா விபாஞ்சி" ஆகிய பட்டங்களையும் பெற்றுள்ளார்.[9]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Devi Durga Kathak Sansthan presented two day Aavaratan Dance Festival". classicalclaps. 10 September 2020.
- ↑ "India is immensely rich in heritage classical art forms: Kathak dancer Geetanjali Lal" (in en). www.mid-day.com. 11 September 2020. https://www.mid-day.com/lifestyle/culture/article/india-is-immensely-rich-in-heritage-classical-art-forms--kathak-dancer-geetanjali-lal-22984206.
- ↑ "Where words fall short" (in en). Tribuneindia News Service. https://www.tribuneindia.com/news/archive/lifestyle/where-words-fall-short-56699.
- ↑ "TV channels reluctant to promote Kathak, say artists" (in en). Tribuneindia News Service. https://www.tribuneindia.com/news/archive/jalandhar/add-covid-2-58750.
- ↑ Sahai, Shrinkhla (31 March 2022). "How gharanas shaped modern Kathak" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/dance/how-gharanas-shaped-modern-kathak/article65277766.ece.
- ↑ "Children must be aware of classical art forms: Kathak dancer Geetanjali Lal - Times of India". The Times of India. https://timesofindia.indiatimes.com/home/education/news/children-must-be-aware-of-classical-art-forms-kathak-dancer-geetanjali-lal/articleshow/78062296.cms.
- ↑ "India is immensely rich in heritage classical art forms: Kathak dancer Geetanjali Lal" (in en). www.mid-day.com. 11 September 2020. https://www.mid-day.com/lifestyle/culture/article/india-is-immensely-rich-in-heritage-classical-art-forms--kathak-dancer-geetanjali-lal-22984206."India is immensely rich in heritage classical art forms: Kathak dancer Geetanjali Lal".
- ↑ "Welcome to High Commission of India, Colombo, Sri Lanka". hcicolombo.gov.in.
- ↑ 9.0 9.1 9.2 9.3 "Kathak Guru Vidushi Smt. Geetanjali Lal - Apni Maati: Personality". spicmacay.apnimaati.com.
- ↑ "Welcome to High Commission of India, Colombo, Sri Lanka". hcicolombo.gov.in."Welcome to High Commission of India, Colombo, Sri Lanka".
- ↑ "Shair-E-Kashmir Mahjoor (1972) Cast - Actor, Actress, Director, Producer, Music Director". Cinestaan. Archived from the original on 18 December 2021.
- ↑ Naidu, Jaywant (12 March 2017). "Dance helps the mind and body". www.thehansindia.com (in ஆங்கிலம்).
- ↑ "Where words fall short". https://www.tribuneindia.com/news/archive/lifestyle/where-words-fall-short-56699."Where words fall short".
- ↑ "India is immensely rich in heritage classical art forms: Kathak dancer Geetanjali Lal". https://www.mid-day.com/lifestyle/culture/article/india-is-immensely-rich-in-heritage-classical-art-forms--kathak-dancer-geetanjali-lal-22984206."India is immensely rich in heritage classical art forms: Kathak dancer Geetanjali Lal".
- ↑ "Dance bonds this saas, bahu". www.tribuneindia.com. The Tribune, Chandigarh, India - Ludhiana Stories.