கீசெர் மாவட்டம்
கீசெர் மாவட்டம்
ضلع غیزر | |
---|---|
மாவட்டம் | |
இஷ்கோமன் சமவெளி | |
![]() பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் பகுதியின் கீசெர் மாவட்டம் உள்ளிட்ட 14 மாவட்டங்களின் வரைபடம் | |
நாடு | ![]() |
பிரதேசம் | பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு கில்ஜித்-பல்டிஸ்தான் |
தலைமையிடம் | காக்குச் |
அரசு | |
• வகை | மாவட்ட நிர்வாகம் |
தாலுகாக்கள் | 2 |
கீசெர் மாவட்டம் (Ghizer District), இந்தியாவின் காஷ்மீர் பகுதியின் வடக்கில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதியில் உள்ள 14 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் காக்குச் நகரம் ஆகும். 2019-ஆம் ஆண்டில் இம்மாவட்டத்தின் கிழக்கில் உள்ள பெரும்பகுதிகளைக் கொண்டு குபிஸ்-யாசின் மாவட்டம் நிறுவப்பட்டது.[1] கீசெர் பழங்குடி மக்கள் அதிகம் வாழ்ந்ததால் இம்மாவட்டத்திற்கு கீசெர் மாவட்டம் எனப்பெயராயிற்று. இம்மாவட்டத்தில் புனியால், குபிஸ், யாசின், பாந்தர் மற்றும் இஷ்கோமென் சமவெளிகள் உள்ளது.
புவியியல்
[தொகு]
கீசெர் மாவட்டத்தின் வடக்கில் பாகிஸதானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் மேல் சித்ரால் மாவட்டம் மற்றும் ஆப்கானிஸ்தானின் வக்கான் மாவட்டம், கிழக்கில் ஹன்சா மாவட்டம், நாகர் மாவட்டம் மற்றும் கில்ஜித் மாவட்டம், தெற்கில் தாங்கிர் மாவட்டம், தென்மேற்கில் தாரெல் மாவட்டம், மேற்கில் குபிஸ்-யாசின் மாவட்டம் எல்லைகளாக உள்ளது. கீசெர் மாவட்டம்-மேல் சித்ரால் மாவட்ட எல்லையில் அமைந்த காரகோரம் மலைத்தொடரில் உள்ள உயரமான கொடுமுடி 6,871 மீட்டர் உயரத்தில் உள்ளது. இங்கு கில்ஜித் ஆறு பாய்கிறது.
மாவட்ட நிர்வாகம்
[தொகு]கீசெர் மாவட்டம் இரண்டு தாலுகாக்கள் கொண்டது. அவைகள்:
- இஷ்கோமன் தாலுகா
- புனியால் தாலுகா
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "GB cabinet decides to upgrade Dareal, Tangir,Gupis Yasin and Roundu as districts" (in ஆங்கிலம்). Radio Pakistan. 20 April 2019. Archived from the original on 19 ஜூன் 2019. Retrieved 19 June 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)