உள்ளடக்கத்துக்குச் செல்

கீசா நெக்ரோபொலிசு

ஆள்கூறுகள்: 29°58′34″N 31°7′58″E / 29.97611°N 31.13278°E / 29.97611; 31.13278
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கீசா நெக்ரோபொலிசு
أهرامات الجيزة
கீசா நெக்ரோபொலிசில் உள்ள ஆறு பிரமிடுகள்
கீசா நெக்ரோபொலிசு is located in Egypt
கீசா நெக்ரோபொலிசு
Shown within Egypt
இருப்பிடம்கீசா, கெய்ரோ மாநிலம், எகிப்து
பகுதிகீழ் எகிப்து
ஆயத்தொலைகள்29°58′34″N 31°7′58″E / 29.97611°N 31.13278°E / 29.97611; 31.13278
வகைநெக்ரோபொலிசு
வரலாறு
காலம்துவக்க பரம்பரைக் காலத்திலிருந்து தொன்மைய எகிப்தின் பிந்தையக் காலம் வரை
அதிகாரபூர்வ பெயர்: மெம்பிசும் அதன் நெக்ரோபொலிசும் – கீசாவிலிருந்து தாசுர் வரையிலான பிரமிடு களம்
வகைபண்பாடு
அளவுகோல்i, iii, vi
வரையறுப்பு1979 (3வது அமர்வு)
சுட்டெண்86
மண்டலம்அரபு நாடுகள்

கீசா நெக்ரோபொலிசு (Giza Necropolis, அரபு மொழி: أهرامات الجيزة‎, "கீசாவின் பிரமிடுகள்") எகிப்தின் தலைநகர் கெய்ரோவின் வெளியே கீசா மேட்டுநிலத்தில் அமைந்துள்ள தொல்லியல் களமாகும். இந்த வளாகத்தில் பெரும் பிரமிடுகள் எனப்படும் மூன்று பிரமிடுகளும் கீசாவின் பெரிய ஸ்பிங்ஸ் எனப்படும் பெரிய கல்லுருவும் பல கல்லறைகளும் தொழிலாளர் சிற்றூரும் தொழில் வளாகமும் அமைந்துள்ளன. நைல் ஆற்றங்கரையில் அமைந்துள்ள தொல்நகரம் கீசாவிலிருந்து இது 9 கிமீ (5 மைல்) தொலைவில் பாலைவனத்தில் உள்ளது; கெய்ரோவின் நகர மையத்திலிருந்து 25 கிமீ (15 மைல்) தென்மேற்கே உள்ளது. மேற்கத்திய பார்வையில் தொன்மையான எகிப்தின் சின்னங்களாக இந்த பிரமிடுகள் விளங்கின.[1][2] கிரேக்க எல்லெனிய நாகரிகத்தின்போது பெரும் பிரமிடுகள் உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக பட்டியலிடப்பட்டது. பண்டைக்கால உலக அதிசயங்களில் மிகவும் பழையதும் இன்னமும் இருப்பதுமான ஒரே களமாக இது உள்ளது.

பிரமிடுகள் மற்றும் இசுபிங்சு

[தொகு]
காட்சிகள், பொருள்கள்: எகிப்து. கிசா [தேர்ந்தெடுக்கப்பட்ட படங்கள்]. பார் 05: இசுபிங்சு மற்றும் பிரமிடுகள்., நியூயார்க். ப்ரூக்ளின் காப்பக அருங்காட்சியத்திலுள்ள புகைப்படம்
நியூ யோர்க்கிலுள்ள புரூக்ளின் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டள்ள கிசாவிலுள்ள பிரமிடுகள். 1893. (அசல் காட்சிகள்- நிழற்படமுறைச் செதுக்குமானம்)
நைல் பள்ளத்தாக்கின் வடக்கே இருந்து பின்னணியில் உள்ள பிரமிடுகளுடன் வான்வழி காட்சி
1867 மற்றும் 1899 ஆம் ஆண்டுக்கிடையில் எடுக்கப்பட்ட பாதி அகழ்வு செய்யப்பட்ட பெரும் இசுபிங்சு
1871 ஆம் ஆண்டின் இறுதியில் பிரேசில் மன்னர் இரண்டாம் பெட்ரோ (வலது பக்கம் அமர்ந்திருப்பவர்) கிசா நெக்ரோபோலிஸ் வருகையின் போது உடன் எகிப்திய அகழ்வாய்வு அறிஞர் ஆகஸ்டே மெரிட்டெ (இடது புறம் தொலைவில் அமர்ந்திருப்பவர்)

கீசாவிலுள்ள பிரமிடுகளில் ஒன்று கிசா பெரும் பிரமிடு மற்றொன்று காப்ரா பிரமிடு ஆகும். மேலும் கி.மு 2560-2540 ல் கட்டப்பட்ட இந்த பிரமிடு செப்ஸ் பிரமிடு அல்லது கூஃபு பிரமிடு என்றும் அறியப்படுகிறது. பெரும் பிரமிடை விட சற்று சிறிய காப்ரெ (அல்லது செப்ரென்) பிரமிடு சில நூறு மீட்டர் தொலைவில் தென் மேற்கில் அமைந்துள்ளது. இந்த வளாகத்தின் கிழக்குப் பக்கத்தில் கீசாவின் பெரிய இசுபிங்சு அமைந்துள்ளது. இந்த இசுப்பிங்சு பண்டைய எகிப்திய மன்னரான காஃப்ராவின் தலை என்பதில் எகிப்து வரலாற்று அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன. இந்த முக்கிய நினைவுச்சின்னங்களுடன் பல சிறிய அயல் தொலைவு தொன்மையிடங்கள் "ராணிகள்" பிரமிடுகள், ஆற்றிடைப் பாதை மற்றும் பள்ளத்தாக்குகள் கானப்படுகின்றன.[3]

கிசாவின் பெரிய பிரமிடு

[தொகு]

கூபுவின் பிரமிடே கிசாவின் பெரிய பிரமிடு என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரமிடு அமைந்திருக்கும் வளாகத்தில் ஒரு பள்ளத்தாக்கு கோவில் ஒன்று உள்ளது. இப்போது நஸ்லெட் எல்-சம்மான் என்ற கிராமத்திற்கு கீழே புதையுண்டு உள்ளது.[4][5] அக்கோவிலின் சுண்ணாம்பு சுவர்கள் வெளியே தெரிகின்றன இருப்பினும் இவை தோண்டியெடுக்கப்பட்டு அகழ்வாய்வு செய்யப்படவில்லை. இப்பள்ளத்தாக்கு கோவில் ஒரு தரைப்பாலத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. ஆனால் நஸ்லெட் எல்-சம்மான் கிராமம் கட்டப்பட்ட போது இது பெரும்பாலும் அழிக்கப்பட்டுள்ளது. இந்த பாதையானது கூபுவின் கல்லறைக் கோவிலுக்கு இட்டுச் செல்கிறது. இந்தக் கோவிலில் பாசாற்றுக்கல்லால் ஆன நடைபாதை மட்டுமே தற்போது கானப்படுகிறது. இந்த கல்லறைக் கோவில் ராஜாவின் கல்லறை பிரமிடுடன் இணைக்கப்பட்டுள்ளது.ராஜாவின் பிரமிடு மூன்று சிறிய ராணி பிரமிடுகளுடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனருகில் ஐந்து படகுத்துறை குழிகள் உள்ளன.[6]:11–19 இந்தப் படகுத்துறைகள் கப்பல்களை கொண்டிருந்ததற்கான தடயங்கள் கானப்படுகின்றன. பிரமிடின் தெற்குப் புறத்தில் கானப்படும் இரண்டு படகுத்துறையில் சிதிலமடையாத கப்பல்கள் இன்றும் கானப்படுகின்றன. இதில் ஒரு கப்பல் மீட்டெடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. கூபுவின் பிரமிடு இன்னும் அதன் அடிவாரத்தில் கானப்படும் பூச்சுக்கற்களைக் கொண்டெ வரையறுக்கப்பட்டுள்ளது. இந்த உறை கற்கள் அருகாமையிலிருந்த மலைத்தொடரின் கல் குவாரிகளில் காணப்பட்ட வெள்ளை சுண்ணாம்பு கற்களால் செய்யப்பட்டுள்ளன.[3]

காப்ரா பிரமிடு

[தொகு]

காப்ரா பிரமிடு வளாகமானது பள்ளத்தாக்கு கோவில், இசுபிங்சு கோவில், தரைப்பாலம், கல்லறைக் கோவில் மற்றும் ராஜவின் பிரமிடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. பள்ளத்தாக்கு கோவிலில் இருந்து காப்ரேவின் பல சிலைகளைக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 1860 ஆம் ஆண்டில் மரிட்டே ஆலயத்தின் தரைப்பகுதியில் கானப்பட்ட ஒரு கிணற்றில் பல சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டன.[7][8] சீக்லின் (1909-10), ஜங்கர், ரைஸ்னர் மற்றும் ஹாசன் ஆகியோரால் அடுத்தடுத்த அகழ்வின் போது மற்றவை கண்டெடுக்கப்பட்டது. காப்ரா வளாகமானது ஐந்து படகுத்துறை குழிகள் மற்றும் கரடுமுரடான அறைகளைக் கொண்ட துணை பிரமிடுகள் கானப்படுகின்றன. காப்ரா பிரமிடு, அதன் உயர்ந்த இடம் மற்றும் அதன் கட்டுமானத்தின் செங்குத்தான கோணத்தின் காரணமாக அருகில் உள்ள கூபு பிரமிடை விட பெரியதாக தோன்றுகிறது. ஆனால் உண்மையில் காப்ரா உயரத்திலும் அளவிலும் சிறிய பிரமிடு ஆகும். காப்ரா பிரமிடின் உச்சியில் உறை கற்கள் கொண்டு கட்டப்பட்டள்ளது முக்கிய காட்சியாக கானப்படுகிறது.[9]

மென்காரே பிரமிடு

[தொகு]

மென்காரே பிரமிடு வளாகமானது பள்ளத்தாக்கு கோவில், சுரங்கப்பாதை, கல்லறைக் கோவில் மற்றும் ராஜவின் பிரமிடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த பள்ளத்தாக்கு கோவிலில் மென்காரே மன்னரின் பல சிலைகள் கானப்படுகின்றன. 5 வது வம்சத்தின்போது, ​​பள்ளத்தாக்கு கோயிலுக்கு முன்புறம் ஒரு சிறிய கோயில் கட்டப்பட்டது. கல்லறைக் கோவிலில் மென்காரே மன்னரின் பல சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. ராஜாவின் பிரமிடு துணை ராணி பிரமிடுகளுடன் வழிகள் மூலம் பிணைக்கப்பட்டள்ளது.[6]:26–35 நான்கு பெரிய நினைவுச்சின்னங்களில், மென்காரேயின் பிரமிடு அதன் உண்மையான பளபளப்பான சுண்ணாம்பு உறைகளில் இல்லாமல் காணப்படுகிறது.[3][10][11]

இசுபிங்சு

[தொகு]

மன்னர் காப்ரெவின் ஆட்சிக்காலத்தில் இசுபிங்சு கட்டப்பட்டதாக அறியப்படுகிறது.[12] புதிய இராச்சியத்தின்போது, இரண்டாம் ​​அமெனோடெப் ஒரு புதிய ஆலயத்தை ஹொரன்-ஹரேமாகெட்டிற்கு அர்ப்பணம் செய்தார் .[13]

கட்டுமானம்

[தொகு]

பெரும்பாலான கட்டுமானக் கோட்பாடுகள் இந்த பிரமிடுகளை கட்டுவதற்கு அருகிலுள்ள கல குவாரிகளைில் இருந்து எடுத்து வரப்பட்டிருக்கலாம் என நம்பபடுகிறது. இத்தகைய பெருங்கற்களை நகர்த்திக் கொண்டு வந்த முறைகள் குறித்து கருத்து வேறுபாடுகள் நிலவுகின்றன. பிரமிடுகளை கட்டமைப்பதில் கட்டடக் கலைஞர்கள் காலப்போக்கில் தங்களே நுட்பங்களை உருவாக்கியிருக்கலாம் என நம்பப்படுகிறது. மணல் இல்லாத நிலப்பரப்பில் ஒப்பீட்டளவில் ஒரு தளத்தை அவர்கள் தேர்ந்தெடுத்து அதில் ஒரு நிலையான அடித்தளத்தை உருவாக்கி தளத்தை கவனமாக ஆய்வு செய்த பின்னர் முதல் நிலை கற்கள் கீழே போடப்பட்ட பிறகு ஒன்றன் மீது ஒன்றான பெருங்கற்களை அடுக்கி இத்தகைய பிரமிடு உருவங்களை கொண்டு வந்திருக்கக்கூடும்.

கிசாவின் பெரிய பிரமிடின் உட்புறக் கட்டுமான பெருங்கற்கள் அதன் தெற்குப் புறம் அமைந்துள்ள கல்குவாரியிலிருந்து வெட்டி எடுக்கப்பட்டதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. பிரமிடின் வெளிப்புறமுள்ள தரமான வளவளப்பு மிக்க வெள்ள சுண்ணாம்புக் கற்கள் நைல் நதியைக் கடந்து அப்பாலுள்ள கல் குவாரிகளிலிருந்து கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த வெளிப்புற கற்களானது கவனமாக வெட்டியெடுக்கப்பட்டு நைல் நதி மூலம் கொண்டு செல்லப்பட்டு சாரங்கள் மூலம் கட்டுமானப் பகுதிக்கு எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சில வெளிப்புற கட்டுமான கற்கள் கிசா பிரமிடின் அடிவாரத்தில் விடப்பட்டுள்ளன. மத்திய காலப்பகுதியில் ( 5 ம் நூற்றாண்டு முதல் 15 ம் நூற்றாண்டு வரை) மக்களால் இக்கற்கள் கெய்ரோ நகருக்கு எடுத்துச்செல்லப்பட்டு கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பட்டன.[14] and is mentioned in the Closing Remarks section of Parry's book. Vitruvius in De architectura[15]

பிரமிடு சமச்சீர் நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, வெளிப்புற உறை கற்கள் அனைத்தும் உயரத்திலும் அகலத்திலும் சமமாக இருக்கும் வகையில் அமைக்கப்பட்டள்ளது. தொழிலாளர்களுக்கு பிரமிடு சுவரின் கோணத்தை அறிந்து கொள்ள அனைத்து தொகுப்பு கற்களும் குறிக்கப்பட்டிருந்தன மேலும் மேற்பரப்புகளை கவனமாகக் கண்காணித்து கல் தொகுதிகள் ஒன்றாக பொருத்தப்பட்டன. கட்டுமானத்தின் போது ​மேற்பரப்பு கற்கள் மென்மையான சுண்ணாம்பு கற்களால் கட்டப்பட்டன. காலம் செல்லச் செல்ல காற்று அரிப்பினால் கற்கள் பாதிக்கப்பட்டுள்ளன.

மேற்சான்றுகள்

[தொகு]
  1. Pedro Tafur, Andanças e viajes.
  2. Medieval visitors, like the Spanish traveller Pedro Tafur in 1436, viewed them however as "the Granaries of Joseph" (Pedro Tafur, Andanças e viajes).
  3. 3.0 3.1 3.2 Verner, Miroslav. The Pyramids: The Mystery, Culture, and Science of Egypt's Great Monuments. Grove Press. 2001 (1997). பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-8021-3935-3
  4. Shafer, Byron E.; Dieter Arnold (2005). Temples of Ancient Egypt. I.B. Tauris. pp. 51–52. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-85043-945-5.
  5. Arnold, Dieter; Nigel Strudwick; Helen Strudwick (2002). The encyclopaedia of ancient Egyptian architecture. I.B. Tauris. p. 126. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-86064-465-8.
  6. 6.0 6.1 Porter, Bertha and Moss, Rosalind L. B.. Topographical Bibliography of Ancient Egyptian Hieroglyphic Texts, Reliefs, and Paintings. Volume III. Memphis. Part I. Abû Rawâsh to Abûṣîr. 2nd edition, revised and augmented by Jaromír Málek, The Clarendon Press, Oxford 1974. PDF from The Giza Archives, 29,5 MB Retrieved February 10, 2017.
  7. Lehner, Mark, "The Complete Pyramids – Solving the Ancient Mysteries", 1997 p.38
  8. Dunn, Jimmy. "The Great Pyramid of Khafre at Giza in Egypt". Tour Egypt. பார்க்கப்பட்ட நாள் 1 May 2014.
  9. "Giza Sphinx & Temples - Page 1 - Spirit & Stone". Global Education Project. பார்க்கப்பட்ட நாள் 1 May 2014.
  10. Janosi, Peter. "Das Pyramidion der Pyramide G III-a" (PDF).
  11. Edwards, Dr. I.E.S.: The Pyramids of Egypt 1986/1947 p. 147-163
  12. Riddle of the Sphinx Retrieved 6 November 2010.
  13. "The Great Sphinx of Giza". Ancient History Encyclopedia. http://www.ancient.eu/The_Great_Sphinx_of_Giza/. 
  14. Bush, John D. (1977). "The Rolling Stones" (PDF). Engineering and Science. பார்க்கப்பட்ட நாள் 11 June 2016.
  15. "LacusCurtius • Vitruvius on Architecture — Book X". பார்க்கப்பட்ட நாள் 9 November 2015.

மேலும் காண்க

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Giza pyramid complex
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கீசா_நெக்ரோபொலிசு&oldid=3582282" இலிருந்து மீள்விக்கப்பட்டது