கி. விட்டால் ராவ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கி. விட்டால் ராவ்
Vittal Rao, K.
Vittal Rao, K..jpg
விட்டால் கிருட்டிண ராவ்
பிறப்பு12 மே 1942 (1942-05-12) (அகவை 80)
ஒசூர், கிருட்டிணகிரி மாவட்டம், தமிழ்நாடு
இருப்பிடம்பெங்களூரு, கர்நாடகா, இந்தியா
வாழ்க்கைத்
துணை
கமலா விட்டல்
பிள்ளைகள்அரினி விட்டல் கார்த்திக்

கி. விட்டால் ராவ் (Vittal rao k பிறப்பு: மே 12, 1942) என்பவர் ஒரு தமிழ் எழுத்தாளர் ஆவார்.[1] இவர் 1942 ஆம் ஆண்டு மே மாதம் 12 ஆம் நாள், இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில், கிருட்டிணகிரி மாவட்டத்திலுள்ள, ஓசூர் நகரத்தில் பிறந்தார். பிறப்பால் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும், இவர் பள்ளிப்படிப்பை தமிழ்நாட்டில் பயின்றதால் இவருக்கு தமிழ்மொழி பயிற்று மொழியாக அமைந்தது. பல திறமைகளைக் கொண்ட இவர் தன்னுடைய இருபதாவது வயதுகளிலேயே எழுதத் தொடங்கிவிட்டார். ஆனால் 1967 ஆம் ஆண்டில் ஆனந்தவிகடன் போன்ற பிரபலமான வார இதழ்களில் இவருடைய சிறுகதைகள் வெளிவரத் தொடங்கியவுடன்தான் உள்ளுரில் இருந்த இலக்கிய குழுக்களில் இவருடைய முகம் அறிமுகமானது. நாற்பதாண்டு கால இலக்கிய வாழ்வில் விட்டால் ராவ் 9 நாவல்கள், 140 சிறுகதைகள் அடங்கிய 5 சிறுகதைத் தொகுதிகள், உலக சினிமா முதல் நுண்கலைகள் வரையிலான தலைப்புகளில் வரலாறு மற்றும் இலக்கியம் முதலானவற்றைப் படைத்தார்

வாழ்க்கை வரலாறு[தொகு]

வாழ்க்கை[தொகு]

இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்த பழைய சேலம் மாவட்டத்தில் உள்ள ஓசூர் நகரத்தில் விட்டல் ராவ் பிறந்தார். கிருட்டிண ராவ் சரசுவதி தம்பதியருக்குப் பிறந்த எட்டு குழந்தைகளில் விட்டால் ராவ் ஆறாவது குழந்தையாவார். 1960 ஆம் ஆண்டில் ஒரு கதிர்வீச்சு நிபுணராக இசுடான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பணியில் சேர்வதற்கு முன்பு வரை சேலத்தில் தனது குழந்தை பருவத்தையும் பதின்பருவ வயது நாட்களையும் கழித்தார். மருத்துவமனையில் பணியாற்றிய காலத்தில் அவர் கலை மற்றும் இலக்கியத்தில் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டார். இதனால் ஊக்கம்பெற்று அப்போது சென்னையிலிருந்த புகழ்பெற்ற அரசு நுண்கலைக் கல்லூரியில் (முன்னதாக இது மெட்ராசு கலைக்கல்லூரி என்று அழைக்கப்பட்டது) சேர்ந்து படித்தார். 1963 ஆம் ஆண்டு சென்னை தொலைபேசி அலுவலகத்தில் பணியில் சேர்ந்து 2002 ஆம் ஆண்டு மே மாதம் வரை தொடர்ந்து பணிபுரிந்து பணியிலிருந்து ஓய்வு பெற்றார். இங்கு பணியாற்றும்போது கிடைத்த ஓய்வு நேரத்தில் இலக்கியம் மற்றும் நுண்கலைகள் மீதிருந்த தனிப்பட்ட ஆர்வத்தை அவரால் தொடர முடிந்தது. சென்னை சென்ட்ரல் இரயில் நிலையத்திற்கு அருகேயிருந்த மூர் மார்கெட்டில் உலாவச் செல்வது அவருக்கு விருப்பமான பொழுது போக்காக மாறியது. இலக்கியம் மற்றும் கலை தொடர்பான பயன்படுத்தப்பட்ட புத்தகங்கள் உலகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கொண்டு வரப்பட்டு விற்பனைக்குக் கிடைத்தன. அவற்றின் மீதெல்லாம் ஆர்வம் கொண்ட ராவ் பேரம் பேசி வாங்கிச்சென்று படித்தார்.

எழுத்துப் பணி[தொகு]

இவருடைய முதல் சிறுகதை 1967 இல் புகழ் பெற்ற வார இதழான ஆனந்த விகடனில் பிரசுரமானது. அதன் பின்னர் இவருடைய இலக்கிய படைப்புகள் அனைத்து பிரபல இதழ்களிலும் இலக்கிய சிற்றிதழ்களிலும் வெளிவர ஆரம்பித்தன.

1976 ஆம் ஆண்டில் வெளிவந்த போக்கிடம் என்ற இவருடைய நாவலுக்கு இலக்கிய சிந்தனை அமைப்பு சிறந்த நாவல் என்ற பரிசை வழங்கியது. இதைத்தொடர்ந்து இலக்கிய உலகம் ராவை கவனிக்கத் தொடங்கியது. இதுவரை ஒன்பது நாவல்கள் , நூறு பெரிய மற்றும் சிறிய என நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் அடங்கிய நான்கு தொகுப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் சிலவற்றைப் பற்றி பேசுவதென்றால் 1981 ஆம் ஆண்டில் வெளிவந்த நதிமூலம் பற்றி கூறியாக வேண்டும். மாதவன் என்ற பிராமண குடும்பத்தின் மூன்று தலைமுறை வாழ்க்கையை இக்கதை விவரிக்கிறது. சமுதாயத்திற்கு வெளியே நடக்கும் நிகழ்வுகள் மற்றும் இயக்கங்களை இணைத்து இக்கதை எழுதப்பட்டுள்ளது. இக்கதை தனி மனித வாழ்க்கையில் தொடர்புடைய சமூக சக்திகள் உண்டாக்கும் பல்வேறு வகையான மாற்றங்களை உள்ளடக்கிய பெரிய மற்றும் சிக்கலான ஒரு திரைக்கதையாகும். இக்கதையில் பிண்ணப்பட்டுள்ள சம்பவங்கள் பலவும் சமுதாயத்தில் நடக்கும் நிகழ்வுகளின் உண்மையான வரலாற்று செய்திகளாக இருக்கின்றன. தமிழில் உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான கதையாக இது கருதப்படுகிறது. தனிமனித வாழ்க்கையைப் படிக்கின்ற அதே வேளையில் சமுதாயத்தில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களையும் இக்கதையிலிருந்து அறியமுடிகிறது.

1993 ஆம் ஆண்டு வெளிவந்த காலவெளி என்ற நாவல், ஒரு கலைப் பள்ளியில் சில மாணவர்கள் வாழ்வில் நிகழ்ந்த ஒரு பகுதியை அவர்களின் விருப்பங்கள், ஏமாற்றங்கள், ஒருவருக்கொருவரிடையில் இருந்த பொறாமை மற்றும் வாழ்க்கை சமரசங்கள் ஆகியவற்றைக் கொண்டிருந்தது. எழுபதுகளில் சென்னை நகரின் கலைஞர்கள் மற்றும் எழுத்தாளர்கள் இருந்த சூழலை விளக்கும் கிட்டத்தட்ட ஓர் ஆவணப்படமாக இந்நாவல் விளங்கியது. உண்மையில், அவரது படைப்புகள் அனைத்துமே உண்மையான வரலாற்று பின்ணணியில், தேர்ந்தெடுத்த வாழ்க்கைச் சிக்கலை அவிழ்க்கின்ற ஆவணப் பரிமாணத்தைக் கொண்டவையாக விளங்குகின்றன.

இவரது நாவல்கள் சமூக வரலாற்றின் துல்லியமான கவனிப்பையும் மற்றும் அவற்றை விவரிப்பதுமான கண்ணோட்டத்துடன் பரிமாறப்படுகின்றன. இந்த குணங்கள்தான் இருபதாம் நூற்றாண்டின் சமகாலத்திய தமிழ் இலக்கியங்களுக்கான சில முக்கியமான நாவலாசிரியர்களில் ஒருவராக இவரைக் குறிக்கிறது.

நூற்பட்டியல்[தொகு]

நாவல்கள்[தொகு]

•இன்னொரு தாஜ்மகால் -1974
•போக்கிடம் - 1976[2][3]
•தூறல் - 1976
•நதிமூலம்[4] - 1981
•மற்றவர்கள் - 1992
•மீண்டும் அவளுக்காக - 1993
•காலவெளி[5] - 1993
•வண்ண முகங்கள்[6] - 1994
•காம்ரேடுகள் – 1996

விருது[தொகு]

  • இலக்கிய சிந்தனை

மேற்கோள்கள்[தொகு]

  1. The Encyclopaedia Of Indian Literature (Volume Five (Sasay To Zorgot), Volume 5. https://books.google.com/books?id=KnPoYxrRfc0C&lpg=PA4595&dq=Vittal%20Rao%2C%20K.&pg=PA4595#v=onepage&q=Vittal%20Rao,%20K.&f=false. 
  2. "புதிய வாசகருக்கு". ஜெயமோகன். https://www.jeyamohan.in/94477/. பார்த்த நாள்: 20 October 2021. 
  3. "வாசிப்பு வழிகாட்டி". Hindu Tamil Thisai. 2021-10-20 அன்று பார்க்கப்பட்டது. Text "புனைகதை: ஜெயமோகன்" ignored (உதவி)
  4. "ஒரு துளி நீர் விட்டல் ராவின் நதிமூலம்". திண்ணை. https://puthu.thinnai.com/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5/. பார்த்த நாள்: 20 October 2021. 
  5. "காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்". திண்ணை. http://puthu.thinnai.com/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AE%BF/. பார்த்த நாள்: 20 October 2021. 
  6. "விட்டல்ராவின் கலைப் பார்வைகள் இலக்கியம்". https://www.sramakrishnan.com/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D/. பார்த்த நாள்: 20 October 2021. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கி._விட்டால்_ராவ்&oldid=3301549" இருந்து மீள்விக்கப்பட்டது