கி. கிருஷ்ணமூர்த்தி
கி. கிருஷ்ணமூர்த்தி | |
---|---|
நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் | |
பிரதமர் | அடல் பிகாரி வாச்பாய் |
முன்னவர் | பி. வி. ராஜேந்திரன் |
பின்வந்தவர் | மணிசங்கர் அய்யர் |
தொகுதி | மயிலாடுதுறை |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | கும்பகோணம், இந்தியா | 1 சூலை 1944
இறப்பு | சனவரி 16, 2019 | (அகவை 74)
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | தமிழ் மாநில காங்கிரசு |
தொழில் | வழக்கறிஞர் |
சமயம் | இந்து |
கிருஷ்ணசாமி கிருஷ்ணமூர்த்தி (சூலை 1, 1944 - சனவரி 16, 2019) ஓர் இந்திய அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் மற்றும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார்.[1]
வாழ்க்கை வரலாறு[தொகு]
இவர் சூலை 1, 1944 ஆம் ஆண்டு தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில் கிருஷ்ணசாமி என்பவருக்கு மகனாகப் பிறந்தார். கும்பகோணம் அரசு கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த இவர், சென்னை சட்டக் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றார்.
அரசியல்[தொகு]
இவா் 1984 முதல் 1988 வரை தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினராக பணியாற்றினார். 1998 இல், மயிலாடுதுறை மக்களவை தொகுதியிலிருந்து, தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு, வெற்றிபெற்றார்.
குடும்பம்[தொகு]
இவா் மல்லிகா என்பவரை செப்டம்பர் 8, 1975 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர்.
ஆதாரங்கள்[தொகு]
- ↑ "Biographical Sketch Member of Parliament 12th Lok Sabha". Parliament of India. http://164.100.47.194/loksabha/writereaddata/biodata_1_12/3869.htm. பார்த்த நாள்: 18 December 2017.