கி. இராசன்பாபு என்கிற தணிகை பாபு
தோற்றம்
கி. இராசன்பாபு என்கிற தணிகை பாபு | |
|---|---|
| சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றம் | |
| பதவியில் 1991–1996 | |
| முன்னையவர் | பொ. நடராசன் |
| பின்னவர் | ஈ. ஏ. பி. சிவாசி |
| தொகுதி | திருத்தணி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 3 ஏப்ரல் 1953 திருத்தணி |
| தேசியம் | |
| அரசியல் கட்சி | அஇஅதிமுக |
| தொழில் | வணிகம் |
கி. இராசன்பாபு என்கிற தணிகை பாபு (K. Rasanbabu) என்பவர் இந்திய அரசியல்வாதியும் தமிழ்நாடு சட்டமன்ற மேனாள் உறுப்பினரும் ஆவார். இவர் திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியைச் சேர்ந்தவர். இளங்கலை பட்டப்படிப்பினை முடித்துள்ள தணிகை பாபு, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினைச் சார்ந்தவர். இவர், 1991ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு நடைபெற்ற தேர்தலில் திருத்தணி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினர் ஆனார்.[1]