கி. அமுதா செல்வி
தோற்றம்
கி. அமுதா செல்வி என்பவர் தமிழ் எழுத்தாளர் ஆவார். இவர் தமிழ்நாட்டு அரசின் பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.[1]
படைப்புகள்
[தொகு]வால் முளைத்த பட்டம் என்ற சிறார் கதைத் தொகுப்பு, புயலுக்குப் பின் என்ற சிறார் புதினம், பசி கொண்ட இரவு[2] என்ற சிறுகதைத் தொகுப்பு ஆகியவை இவரின் படைப்புகளாகும். இவர் இந்து தமிழ் திசை இதழில் சிறப்புப் பக்கத்தில் பல கட்டுரைகளை எழுதியுள்ளார். இவற்றில் பெரும்பான்மையானவை கல்வி தொடர்பான கட்டுரைகளாகும்.[3]
பெற்ற விருதுகள்
[தொகு]இவர் எழுதிய பசி கொண்ட இரவு என்ற சிறுகதைத் தொகுப்பிற்கு பால்வண்ணம் நினைவு இலக்கிய விருது, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான கலை இலக்கிய விருது,[4][5] திருப்பூர் சக்தி விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "கி.அமுதா செல்வி". Hindu Tamil Thisai. Retrieved 2025-05-05.
- ↑ Bookday (2025-04-17). "கி.அமுதா செல்வியின் *பசி கொண்ட இரவு* -நூல் அறிமுகம்". Book Day (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2025-05-05.
- ↑ "மதிப்பெண்ணும் மனனமும் மட்டும்தான் கல்வியா?". Hindu Tamil Thisai. 2024-05-07. Retrieved 2025-05-05.
- ↑ "ஈரோட்டில் படைப்பாளிகளுக்கு தமுஎகச கலை இலக்கிய விருதுகள் வழங்கும் விழா". theekkathir.in (in ஆங்கிலம்). Retrieved 2025-05-05.
- ↑ ஜீவகணேஷ்.ப,அ.பாலாஜி (2024-09-30). "`தமுஎகச'-வின் கலை இலக்கிய விருதுகள்! - யார் யாருக்கு என்னென்ன விருதுகள்?". vikatan.com. Retrieved 2025-05-05.