உள்ளடக்கத்துக்குச் செல்

கிஷ்த்வார் இமயமலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிசுத்வார் இமயமலை (Kishtwar Himalaya) என்பது வடமேற்கு இந்தியாவில் சம்மு காசுமீர், இமாச்சலப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள, இமயமலை அமைப்பின் ஒரு சிறிய துணை மலைத்தொடர் ஆகும் .

புவியியல்

[தொகு]

இது சிறந்த உள்ளூர் நிலப்பரப்புடன் கூடிய செங்குத்தான பாறை, பனி சிகரங்களின் வியத்தகு மலைத்தொடராகும். இருப்பினும், இமயமலையின் மற்ற பகுதிகளைப் போல இது அவ்வளவு பிரபலமாக அறியப்படவில்லை; ஏனெனில் இதன் மிக உயரமான சிகரமான பரன்சார், அல்லது சிக்கிள் மூன், 6,574 மீ (21,568 அடி) உயரத்தில் மட்டுமே உள்ளது.[1] இதன் மிகவும் நன்கறிந்த சிகரங்களில் ஒன்று பிரம்மா. இதன் உயரம் I,6,416 மீ (21,050 அடி). இது 1973இல் கிறிசு போனிங்டன், நிக் எசுட்கோர்ட் ஆகியோரால் ஏறப்பட்டது.

பெரும் இமயமலைத் தொடரில் உள்ள கிசுவார் மலைத்தொடருக்கு வடக்கே படார் பள்ளத்தாக்கு அமைந்துள்ளது. முன்னர் இந்தப் பள்ளத்தாக்கு இமாச்சல மன்னர்களின் ஆட்சியின் கீழ் இருந்தது. ஜம்மு மன்னருக்கு இந்தப் பள்ளத்தாக்கு வரதட்சணையாக வழங்கப்பட்டதாக ஒரு வரலாற்றுச் செய்தி உள்ளது. இங்கு இந்து, பௌத்த மதத்தினர் கலந்து வாழ்கின்றனர்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Schweizer Alpen-Club (1971). Alpes (in ஜெர்மன்). Schweizer Alpen-Club. p. 230. Retrieved 28 June 2018. Im Herbst 1969 machte eine kleine britisch-indische Gruppe im Kishtwar Himal eine ... Tohokeiryu-kai hatte im Panjab Himalaya kein Glück. Ihr Ziel war der von Fritz Kolb 1946 "Mondsichelberg" getaufte Bharanzar (6575 m) südlich des Prul-Gletschers.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஷ்த்வார்_இமயமலை&oldid=4599168" இலிருந்து மீள்விக்கப்பட்டது