கிஷோரி சக்தி யோஜனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிஷோரி சக்தி யோஜனா
Founderமகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், இந்தியா
நாடுஇந்தியா
Ministryமகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்
துவங்கியது31 ஆகஸ்ட் 2007
இணையத்தளம்இணையதளம்

கிஷோரி சக்தி யோஜனா ( மொ.'இளம்பெண்களுக்கு அதிகாரமளிக்கும் திட்டம்') என்பது இந்தியாவில் உள்ள பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் பருவப் பெண்களின் வாழ்க்கையில் ஒரு மாற்றத்தைக் கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்ட திட்டமாகும்,[1]


11 முதல் 18 வயதுடைய இளம் பெண்களுக்காக ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் (ICDS) எனப்படும் இந்திய அரசாங்கத் திட்டத்தின் கீழ் இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. [2]

இலக்கு[தொகு]

  • முறைசாரா கல்வியின் மூலம் பருவப் பெண்களுக்கு தேவையான கல்வியறிவு மற்றும் வாழ் திறன்களை வழங்குதல்.
  • சமூக வெளிப்பாடு மற்றும் அறிவுக்கான விருப்பத்தைத் தூண்டுவதற்கும் அவர்களின் முடிவெடுக்கும் திறன்களை மேம்படுத்துவதற்கு உதவுதல்.
  • பருவப் பெண்களின் ஊட்டச்சத்து, ஆரோக்கியம் மற்றும் வளர்ச்சி நிலையை மேம்படுத்த, உடல்நலம், சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குடும்பப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துதல்,
  • வாழ்க்கைத் திறன்களைக் கற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகளை அளிப்பதோடு வீடுகளிலேயே செய்யப்படும் மற்றும் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதற்கு இந்த பருவப் பெண்களைப் பயிற்றுவித்தல்
  • அவர்களின் சமூகச் சூழலைப் பற்றிய புரிதலைப் பெறுவதற்கும், சமூகத்தின் உற்பத்தி உறுப்பினர்களாக ஆவதற்கு முன்முயற்சிகளை எடுப்பதற்கும் அவர்களுக்கு உதவுதல்.
  • பொறுப்புள்ள குடிமக்களாக வளரக்கூடிய அறிவைப் பெறுவதற்கான சமூகத்தை வெளிப்படுத்துதல்

ஆகியவைகளை இத்திட்டம் தனது இலக்குகளாகக் கொண்டுள்ளது.

வரலாறு[தொகு]

கிஷோரி சக்தி யோஜனா என்பது ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் கீழ் ஏற்கனவே இயங்கிவந்த பருவப் பெண்கள் (AG) திட்டத்தின் மறுவடிவமைப்பு ஆகும். இத்திட்டம், அதனை உள்ளடக்கியதோடு மேலும் பல மேம்படுத்தப்பட்ட திட்டங்களையும் குறிப்பாக திறன் மேம்பாட்டில், அதிகாரமளித்தல் மற்றும் மேம்பட்ட சுய-உணர்வை நோக்கமாகக் கொண்ட அம்சங்களை இணைத்து வடிவமைக்கப்பட்டுள்ளது. [3]

குறிக்கோள்கள்[தொகு]

  • 11 முதல் 18 வயதுக்குட்பட்ட சிறுமிகளின் படிப்பு மற்றும் தொழிலில் அவர்களுக்கு உதவுதல்,
  • ஆரம்ப சுகாதாரம் மற்றும் மகளிர் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்,
  • பரந்த அறிவையும் சமூகத்தின் வெளிப்பாட்டையும் பெற வழிவகுத்தல் மற்றும்
  • தன்னிறைவாக இருக்க அவர்களைத் தயார்படுத்துதல்

ஆகியவை இத்திட்டத்தின் நோக்கங்களாகும். [4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "கிஷோரி சக்தி யோஜனா". மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம்.
  2. "Kishori Shakti Yojana" (PDF). wecd.uk.gov.in (in ஆங்கிலம்). Uttarakhand, India: Women Empowerment & Child Development, Government of Uttarakhand. பார்க்கப்பட்ட நாள் 2018-12-21.
  3. "Kishori Shakti Yojana". wcdodisha.gov.in (in ஆங்கிலம்). Odisha: Department of Women & Child Development and Mission Shakti, Government of Odisha. Archived from the original on 2018-12-21. பார்க்கப்பட்ட நாள் 2018-12-21.
  4. "Kishori Shakti Yojana". National Portal of India. Ministry of Women and Child Development.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிஷோரி_சக்தி_யோஜனா&oldid=3891607" இலிருந்து மீள்விக்கப்பட்டது