பசலிப்பழம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிவி (பழம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பசலிப்பழம்

கிவி பழம் அல்லது பசலிப்பழம் (kiwifruit) என்பது தோல் பச்சையாகவும், உள்ளே சிறிய கருப்பு விதைகளுடன் பச்சை, மஞ்சள் கலந்த சதையுடனும் இருக்கும் பழம் ஆகும்.

பசலிப்பழத்தின் சுவையும் பயனும்[தொகு]

இதை நாம், கேக், பாஸ்ட்ரி ஆகியவற்றின் மீது அழகுக்காக வைத்திருப்பதைப் பார்த்திருக்கலாம். பழத்தின் சுவை புளிப்பு அல்லது துவர்ப்பாக இருக்கலாம். பசலிப்பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் ஒட்டுமொத்த உடல்நலனுக்கு நல்லது என்று ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

பசலிப்பழத்தில் உள்ள உயிர் சத்துக்கள்[தொகு]

அதில் உடல் நலனுக்குத் தேவையான சத்துக்கள் கொட்டிக் கிடப்பதாக அண்மைய ஆய்வு தெரிவிக்கிறது. ட்ரிவோலி கிராண்ட் ஓட்டல் நிபுணர் பாட் பசலிப்பழத்தில் ஏராளமான தாதுப்பொருட்கள், உயிர்ச்சத்துக்கள் உள்ளன என்று கூறியுள்ளார்.

"சிட்ரஸ்" ரக பழமான அதில் விட்டமின் "ஏ", "சி", "இ" அதிகம். தோல், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன் உட்பட்ட பல நோய்களிலிருந்து இருந்து விட்டமின் சி நம்மைக் காக்கிறது.

விட்டமின் "சி" யின் பணிகளை விட்டமின் "இ" அதிகரிக்கும். இந்த இரண்டும் பசலிப்பழத்தில் அதிகம். இவை நமது உடலை எல்லா நோய்களில் இருந்தும் காக்கும் எதிர்ப்பு சக்தியை அளிக்கின்றன.

பசலிப்பழத்தின் மருத்துவ குணங்கள்[தொகு]

பசலிப்பழத்தில் உள்ள நார்ச் சத்துக்கள் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துவதால் டயபடீஸ் குணமாகும். ரத்த அழுத்தத்துக்கு காரணமான கொலஸ்ட்ராலைக் குறைக்கும். குழந்தைகளுக்கு ஆஸ்துமா, மூச்சிழுப்பு, சளி ஆகியவை இருந்தால் கிவி ப்ரூட் குணப்படுத்தும் என்றார். முக்கிய பழச் சந்தைகள், மார்க்கெட்களில் கிடைக்கும் கிவி பழத்தை வாங்கி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் முழு ஆரோக்கியம் பெறலாம்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பசலிப்பழம்&oldid=3644584" இருந்து மீள்விக்கப்பட்டது