கிழக்கே போகும் ரெயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கிழக்கே போகும் ரயில்
இயக்குனர் பாரதிராஜா
கதை செல்வராஜ்
நடிப்பு சுதாகர்
ராதிகா
உஷா
இசையமைப்பு இளையராஜா
வெளியீடு 1978
நாடு இந்தியா
மொழி தமிழ்

பதினாறு வயதினிலே என்ற தனது முதல் படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் ஒரு புரட்சியைத் தோற்றுவித்த இயக்குனர் பாரதிராஜா இயக்கிய இரண்டாவது திரைப்படம் "கிழக்கே போகும் ரயில்".

அவரது முதற்படத்தைப் போலவே, கிராமியச் சூழலில் அநேகமாக வெளிப்புறப் படப்பிடிப்பாகவே தயாரிக்கப்பட்ட இப்படத்தில்தான் பின்னர் முன்னணிக் கதாநாயகியாகப் பல வருடங்களுக்கு விளங்கி, இன்றளவும் வெற்றிகரமான தொலைக்காட்சித் தொடர் தயாரிப்பாளராக விளங்கி வரும் ராதிகா அறிமுகமானார். நாவிதன் ஒருவரின் மகனான ஒரு ஏழைக் கிராமக் கவிஞன் மற்றும் அந்தக் கிராமத்திலேயே அடைக்கலம் புகும் கள்ளமற்ற பெண் ஒருத்தி ஆகியோரின் இடையிலான காதலை சுவைபடவும் இயற்கையாகவும் சித்தரித்த இப்படம் வர்த்தக ரீதியாகவும் பெரும் வெற்றி அடைந்தது.

இளையராஜா இசையில் இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே பெரும் அளவு பிரபலமாயின. குறிப்பாக, கருநாடக இசை அடிப்படையில் அமைந்த "மாஞ்சோலைக் கிளிதானோ" என்னும் பாடல் பின்னணிப் பாடகர் ஜெயசந்திரனுக்குப் பெரும் புகழை ஈட்டித் தந்தது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கே_போகும்_ரெயில்&oldid=1648520" இருந்து மீள்விக்கப்பட்டது