கிழக்கு லண்டன் மசூதி
கிழக்கு லண்டன் மசூதி | |
---|---|
கிழக்கு லண்டன் மசூதி மேலிருந்து எடுத்த படம் | |
அடிப்படைத் தகவல்கள் | |
அமைவிடம் | லண்டன், இங்கிலாந்து |
புவியியல் ஆள்கூறுகள் | 51°31′03″N 0°03′56″W / 51.5176°N 0.0656°W |
சமயம் | சுன்னி இசுலாம் |
மாநிலம் | இங்கிலாந்து |
நேர்ந்தளிக்கப்பட்ட ஆண்டு | 1985 |
தலைமை | தலைமை இமாம்:கதீப் இமாம்:அப்துல் கையும் தலைவர்: ஹபீப் ரஹ்மான். |
இணையத் தளம் | www |
கிழக்கு லண்டன் மசூதி (East London Mosque ) இங்கிலாந்தின் லண்டன் நகரில் ஒயிட்சேப்பல் சாலையில் அமைந்துள்ள பள்ளிவாசல் ஆகும். இங்கிலாந்தில் அமைந்துள்ள மிகப்பெரிய பள்ளிவாசலாக இது விளங்குகின்றது.இந்தப் பள்ளிவாசலும் லண்டன் முசுலிம் மையமும் இப்பகுதியில் இசுலாமிய சமயத்திற்கும் பண்பாட்டிற்கும் மையங்களாக விளங்குகின்றன. இந்தப் பள்ளிவாசல் 1985 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது.[1] இங்கு 7,000 நபர்கள் தொழ முடியும். [2] இந்த மசூதி இங்கிலாந்து நாட்டிலேயே முதன்முதலில் 1986 ல் ஒலிப்பெருக்கி பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மசூதி ஆகும்.[3]
அமைப்பு
[தொகு]இம்மசூதியில் 7,000 நபர்கள் தொழலாம்.உள்ளே நூலகம்,பல பயன்பாட்டு அறை,வானொலி நிலையம்,கருத்தரங்கு அறை ஆகியவை உள்ளன.[4].இந்த கருத்தரங்கு அறை நோன்புக்காலங்களில் நோன்பு முடிகின்ற நேரத்தில் சந்திக்கின்ற இடமாகவும் இது உள்ளது.கட்டிடத்தின் மேற்பகுதியை 3 மினார் கோபுரங்கள் சீர் செய்கின்றன.தகருத்தரங்கு அறை ங்க நிற குவிமாடம் மேற்பகுதியில் உள்ளது.
லண்டன் முசுலிம் கலாச்சார மையம்
[தொகு]கிழக்கு லண்டன் மசூதியும் லண்டன் முசுலிம் கலாச்சார மையமும் இப்பகுதியில் இசுலாமிய சமயத்திற்கும் பண்பாட்டிற்கும் மையங்களாக விளங்குகின்றன.லண்டன் முசுலிம் கலாச்சார மையம் 2001 ல் இளவரசர் சார்லசால் தொடங்கிவைக்கப்பட்டது.[5] தொடக்க விழாவில் 15,000 நபர்கள் கலந்து கொண்டனர்.
விருது
[தொகு]2008 ஆம் ஆண்டு அக்டோபரில் கிழக்கு லண்டன் மசூதி மற்றும் லண்டன் முஸ்லீம் மையம் ஆகியவற்றிற்கு "உலக அமைதி மற்றும் ஒற்றுமைக்காக" இஸ்லாமிய சேனல் மையம் சார்பாக சிறந்த மசூதி விருது வரங்கப்பட்டது.[6][7]
இதனையும் காண்க
[தொகு]- அல் அக்சா பள்ளிவாசல்-- யெருசலம்
- ஜாமா பள்ளி- டெல்லி
- மஸ்ஜிதுல் ஹராம் -- மக்கா
- அல்-மஸ்ஜித் அந்-நபவி -- மதினா
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ Religion in England and Wales 2011 Office for National Statistics
- ↑ How the East London mosque is fighting Islamic State, discouraging muslims from joining it பரணிடப்பட்டது 2015-02-18 at the வந்தவழி இயந்திரம் Gold Coast Bulletin
- ↑ Eade, John (1996). Metcalf, Barbara Daly (ed.). Making Muslim Space in North America and Europe. Berkeley: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0520204042. பார்க்கப்பட்ட நாள் 19 April 2015.
- ↑ Project page for the London Muslim Centre Markland Klaschka Limited
- ↑ Prince joins Ramadan ceremony BBC website
- ↑ Model Mosque Competition Global Peace and Unity
- ↑ Britain's Muslims Vote their Best Mosques IslamOnline (5 Nov. 2008), by Emdad Rahman.