கிழக்கு மாகாண சபையின் கொடி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிழக்கு மாகாண சபை
பயன்பாட்டு முறை Civil and state கொடி Small vexillological symbol or pictogram in black and white showing the different uses of the flag
அளவு 2:3
ஏற்கப்பட்டது 22 மே, 2007
வடிவம் வட்டப் பின்னணிகளில் கழுகு, மீன் சிங்கம் ஆகியவையும், விளிம்பைச் சுற்றிலும் நீலம், மஞ்சள் நிறக் கோடுகளும், கொடியின் நான்கு மூலைகளிலும் சூரியன் சின்னங்களும் காணப்படுகின்றன.

கிழக்கு மாகாண சபையின் கொடி என்பது, இலங்கையின் ஒன்பது மாகாண சபைகளுள் ஒன்றான கிழக்கு மாகாண சபைக்கான கொடி ஆகும். இது 2007ம் ஆண்டு மே 22ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட்டது.[1][2]

வரலாறு[தொகு]

1987ம் ஆண்டு, இந்திய-இலங்கை ஒப்பந்தப்படி, இலங்கையில் மாகாண சபைகள் உருவாக்கப்பட்டன. தமிழ் பேசும் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட கிழக்கு மாகாணமும், வட மாகாணமும் தற்காலிகமாக இணைக்கப்பட்டு வடக்கு கிழக்கு மாகாண சபை என்ற பெயரில் ஒரு மாகாண சபை அமைக்கப்பட்டது. இதற்கு ஒரு கொடி இருந்தது. 2007 ஆம் ஆண்டில் இலங்கை நீதிமன்றம் ஒன்று வடக்கு, கிழக்கு மாகாண இணைப்புச் சட்டத்துக்குப் புறம்பானது எனத் தீர்ப்பளித்ததால், வடக்கு கிழக்கு மாகாண சபை, வட மாகாண சபை, கிழக்கு மாகாண சபை என இரண்டு மாகாண சபைகளாக ஆனது.[3]

இதனால் இரண்டு மாகாணங்களுக்கும் தனித்தனியான கொடிகளின் தேவை ஏற்பட்து. இதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டில் கிழக்கு மாகாண சபைக்கும், வட மாகாண சபைக்குமாக இரண்டு கொடிகள் வெளியிடப்பட்டன. அக்காலத்தில், கிழக்கு மாகாணத்தின் ஆளுனராகவும், வட மாகாணத்தின் பதில் ஆளுனராகவும் நியமிக்கப்பட்டிருந்த ரியர் அட்மிரல் மொகான் விஜேவிக்கிரம திருகோணமலையில் இந்தக் கொடிகளை 2007 மே மாதம் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்ற விழாவொன்றில் இரண்டு மாகாண சபைகளினதும் முதன்மைச் செயலாளர்களிடம் கையளித்தார்.[1]

அமைப்பு[தொகு]

கொடி பொதுவான மண்ணிறப் பின்னணி கொண்டது. இதில், "ஃ" வடிவில் அமைந்த மூன்று வட்டங்களுக்குள் கழுகு, மீன், சிங்கம் ஆகியவற்றை உட்படுத்திய சின்னங்கள் உள்ளன. இச்சின்னங்கள் கிழக்கு மாகாணத்தின் மூன்று மாவட்டங்களான திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை ஆகியவற்றுக்கான குறியீடுகளாக அமைந்துள்ளன. இக்கொடியின் விளிம்பை அண்டி நாற்புறமும் ஒன்றைச் சுற்றி மற்றொன்றாக பல நிறக் கோடுகள் உள்ளன. இவை உட்புறமிருந்து வெளிப்புறமாக இலம் நீலம், நீலம், கடும் நீலம், மஞ்சள் என்பனவாகும். இங்கு இளம் நீலம், மாகாணத்தின் நன்நீர் வளங்களையும், நீல, கடும்நீல நிறங்கள் மூன்று மாவட்டங்களினதும் எல்லைகளாக அமைந்த கடலையும் குறிக்கின்றன. இக்கோடுகளுக்கு உட்புறம் நான்கு மூலைகளிலும் காணப்படும் சூரியன்கள் கிழக்குமாகாத்தின் நிலப்பகுதி முழுவதற்கும் ஒளிவீசும் ஆற்றலைக் குறிப்பதாக அமைக்கப்பட்டுள்ளன.[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Gunananda, A.T.M. "North and East get separate flags". Sunday Times. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.
  2. "Separate flags for North and East Provincial Councils". TamilNet. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011.
  3. "Two separate flags for de-merged NPCand EPC". The Island. Archived from the original on 3 ஜனவரி 2018. பார்க்கப்பட்ட நாள் 9 December 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "கிழக்கு மாகாணக் கொடி பற்றிய அறிமுகம்" (PDF). Archived from the original (PDF) on 2016-03-28. பார்க்கப்பட்ட நாள் 2015-09-18.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]