கிழக்கு பரே
யசோதரதடாகம் (Yashodharatataka) அல்லது கிழக்கு பரே ( East Baray ) என்பது தென்கிழக்கு ஆசியாவிலிருந்த கெமர் பேரரசின் கட்டிடக்கலை பாணியில் பொதுவாகக் கட்டப்பட்ட ஒரு செயற்கை நீர்தேக்கமாகும். இது, கம்போடியாவின், அங்கோர் பகுதியில் கிழக்கு-மேற்கு திசையில் அமைந்துள்ளது. சுவர் நகரமான அங்கோர் தோம் நகருக்கு கிழக்கே அமைந்துள்ளது. இது கி.பி 900 ஆம் ஆண்டு யசோவர்மனின் ஆட்சியின் போது கட்டப்பட்டது. :113,116 இதற்கு குலென் மலைகளில் இருந்து பாயும் சீயெம் ரீப் ஆற்றின் மூலம் நீர் ஆதாரம் கிடைகிறது, இது அங்கோர் பிராந்தியத்தில் ( மேற்கு பரேக்குப் அடுத்து) இரண்டாவது பெரிய பரே மற்றும் பூமியில் உள்ள மிகப்பெரிய கையால் வெட்டப்பட்ட நீர்த்தேக்கங்களில் ஒன்றாகும். [1] தோராயமாக 3.6 கிலோமீட்டர்கள் 870 மீ மற்றும் 50 மில்லியன் கனமீட்டர் தண்ணீரைக் கொண்டுள்ளது. பரேயின் கட்டுமானத்தைக் குறிக்கும் கல்வெட்டுகளைத் தாங்கிய கற்கள் அதன் நான்கு மூலைகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. [2] :65அதன் கட்டுமானத்திற்குத் தேவையான உழைப்பும், அமைப்பும் திகைப்பூட்டுவதாக இருந்தது: அதன் அணைகளில் சுமார் 8 மில்லியன் கன மீட்டர் நிரப்பு உள்ளது. [3] :68
இது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளது. அவர்கள் பாசனத்திற்காக தண்ணீரை வைத்திருந்தனர் என்றும் கருதப்படுகிறது. ஆனால் அத்தகைய செயல்பாட்டைக் குறிப்பிடும் கல்வெட்டு எதுவும் கிடைக்கவில்லை. இது இந்து தொன்மவியல் புராணங்களிலும், காவியங்களிலும் குறிப்பிடப்படும் ஒரு மலையான மேரு மலையைச் சுற்றியுள்ள படைப்புக் கடல்களைக் குறிக்கிறது. கெமர் மக்களின் மத வாழ்க்கையில் இவ்வகையான நீர்த்தேக்கங்கள் முதன்மையாக ஒரு அடையாள நோக்கத்திற்காக சேவை செய்ததாகக் கூறுகின்றன [3] :60
இந்த நீர்நிலையில் இன்று தண்ணீர் இல்லை; விவசாயிகள் பயிர்களை அதன் பாத்தியில் வளர்க்கிறார்கள். ஆனால் அதன் வெளிப்புறங்கள் செயற்கைக்கோள் புகைப்படங்களில் தெளிவாகத் தெரிகிறது. பரேயின் நடுவில் உயரமான தரையில் கிழக்கு மெபோன் கோயில் உள்ளது. இது பரேயில் தண்ணீர் இருந்த நாட்களில் ஒரு தீவாக இருந்தது.
சான்றுகள்
[தொகு]- ↑ "ANGKOR REVEALED: 1,000 Years Old, But Still the Largest Reservoir on Earth". Smithsonian Channel. Archived from the original on 21 July 2018. பார்க்கப்பட்ட நாள் 24 July 2018.
- ↑ Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847
- ↑ 3.0 3.1 Higham, C., 2001, The Civilization of Angkor, London: Weidenfeld & Nicolson, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781842125847ISBN 9781842125847