கிழக்கு நுசா தெங்காரா
கிழக்கு நுசா தெங்காரா
Nusa Tenggara Timur | |
---|---|
Province of East Nusa Tenggara Provinsi Nusa Tenggara Timur | |
பிராய்ஜிங் கிராமம் சசாண்டோ இசைக்கருவி கெலிமுத்து மலை சச்சி நடனம் வாலகிரி கடற்கரை | |
அடைபெயர்(கள்): பூமி ராபிள்சியா (Bumi Rafflesia) (Land of Rafflesia) | |
ஆள்கூறுகள்: 10°11′S 123°35′E / 10.183°S 123.583°E | |
பகுதி | சுண்டா தீவுகள் |
மாநிலம் | கிழக்கு நுசா தெங்காரா |
தலைநகரம் | குப்பாங் |
பரப்பளவு | |
• மொத்தம் | 46,446.64 km2 (17,933.15 sq mi) |
உயர் புள்ளி | 2,427 m (7,963 ft) |
மக்கள்தொகை (2024)[1] | |
• மொத்தம் | 56,56,040 |
• அடர்த்தி | 120/km2 (320/sq mi) |
மக்கள் தொகை | |
• இனக்குழுக்கள்[2] | 22% அதோனி 15% மங்கரை 12% சும்பா 9% பெலு 8% லாமாகோலோட் 5% ரோட் 4% லியோ[3] |
• சமயம் (2023) [4] | 89.89% கிறிஸ்தவம் —53.73% கத்தோலிக்க திருச்சபை —36.16% சீர்திருத்தத் திருச்சபை 9.45% இசுலாம் 0.66% வேறு |
• மொழிகள் | இந்தோனேசிய மொழி; குப்பாங் மலாய்; புனாக், லாமாகோலோட், லரந்துகா மலாய், லி'ஓ மொழி, தேதுன மொழி, உவாப் மெட்டோ |
நேர வலயம் | இந்தோனேசிய நேரம் +7 |
HDI (2024) | ![]() |
இணையதளம் | nttprov |
கிழக்கு நுசா தெங்காரா; (ஆங்கிலம்: East Nusa Tenggara; இந்தோனேசியம்: Nusa Tenggara Timur) என்பது இந்தோனேசியா, சுண்டா தீவுகளில் உள்ள ஒரு மாநிலம்; இதன் தலைநகரம் குப்பாங். இந்த மாநிலம், தெற்கில் இந்தியப் பெருங்கடலையும்; வடக்கில் புளோரஸ் கடலையும் எதிர்கொள்ளும் சுந்தா தீவுகளின் கிழக்குப் பகுதியை உள்ளடக்கியது. இதன் மொத்த நிலப்பரப்பு 46,446.64 கிமீ2.
இந்த மாநிலம் 500-க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்டுள்ளது. அவற்றுள் மிகப்பெரியவை சும்பா தீவுகள், புளோரெஸ் மற்றும் மேற்கு தீமோரின் ஒரு பகுதி. இந்த மாநிலம் 21 ஆட்சிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது; மற்றும் ஆட்சிப் பகுதி அளவிலான குப்பாங் நகரம், இந்த மாநிலத்தின் தலைநகரமாகவும் உள்ளது.
கிழக்கு நுசா தெங்காராவில் உள்ள லியாங் புவா குகையில் Liang Bua, சுமார் 190,000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே மனிதர்கள் வசித்து வந்ததாக தொல்பொருள் ஆய்வுகள் காட்டுகின்றன. குகையின் உள்ளே உள்ள தொல்பொருள் மண் அடுக்குகளில் இருந்து புளோரெஸ் மனிதர்கள் உள்ளிட்ட தொடக்கக்கால மனிதர்களின் உறைவிடமாக இருந்து இருக்கலாம் என்பது தெரிய வருகிறது.[6]
பொது
[தொகு]கிழக்கு நுசா தெங்காரா மாநிலம், கொமோடோ தேசிய பூங்கா, லாபுவான் பாஜோ, கெலிமுட்டு ஏரி மற்றும் கவர்ச்சிகரமான கடற்கரைகள் போன்ற இயற்கை அழகு ஈர்ப்புகளுக்காக அறியப்படுகிறது.[7] பல்வேறு பழங்குடிகள்; பல்வேறு மொழிகள்; இகாட் நெசவு; சும்பா பசோலா விழா போன்ற பண்பாட்டுக் கூறுகளுக்கு இந்த மாநிலம் பெயர் பெற்றது.[8][9]
கிழக்கு நுசா தெங்காரா ஒரு வலுவான சமயப் பரப்புரை வரலாற்றையும் கொண்டுள்ளது. இங்கு பெரும்பான்மையானவர் கத்தோலிக்க சமயத்தைப் பின்பற்றுகின்றனர். இந்த மாநிலத்திற்கு அருகில் இருக்கும் தெற்கு பப்புவா மாநிலத்திலும் ரோமன் கத்தோலிக்கம் பிரதான மதமாக உள்ளது. அத்துடன், இந்த மாநிலத்தின் கடல் சுற்றுச்சூழல் அமைப்பும் மிகவும் வளமாக உள்ளது; கடலில் மூழ்கிக் குளிப்பவர்களுக்கு (divers) பிரபலமான இடமாகவும் அமைகிறது.[10]
வரலாறு
[தொகு]
1945-ஆம் ஆண்டு இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பிற்குப் பிறகு, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதியில் உள்ள நிலப்பகுதி; கிழக்கு இந்தோனேசியா மாநிலமாக அறிவிக்கப்பட்டது.[11] 1949-ஆம் ஆண்டு, இந்தோனேசியாவிற்கு இறையாண்மையை மாற்றுவதில் இடச்சுக்காரர்களுடன் செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இந்தோனேசியா அமெரிக்காவில் இந்தோனேசியா மேலும் சேர்க்கப்பட்டது.
1945-ஆம் ஆண்டு இந்தோனேசிய விடுதலை நாள் அறிவிப்பிற்குப் பிறகு, இந்தோனேசியாவின் கிழக்குப் பகுதி கிழக்கு இந்தோனேசிய மாநிலமாக அறிவிக்கப்பட்டது. 1949-ஆம் ஆண்டு இந்தோனேசிய தேசிய புரட்சிக்குப் பின்னர், இந்தோனேசிய ஐக்கிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டது. அப்போது இடச்சுக்காரர்களுடன் செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கையின் ஒரு பகுதியாக, ஐக்கிய இந்தோனேசியாவில், கிழக்கு நுசா தெங்காரா மாநிலம் சேர்க்கப்பட்டது.
1958-ஆம் ஆண்டில், இந்தோனேசியாவின் (UU) எண். 64/1958 சட்டம் இயற்றப்பட்டது. அதன்படி, சிறு சுண்டாத் தீவுகளில் மூன்று மாநிலங்கள் நிறுவப்பட்டன. அவை: பாலி, மேற்கு நுசா தெங்காரா மற்றும் கிழக்கு நுசா தெங்காரா.
புவியியல்
[தொகு]சிறு சுண்டா தீவுகளின் கிழக்கே அமைந்துள்ள கிழக்கு நுசா தெங்காரா மாநிலம்; தெற்கில் இந்தியப் பெருங்கடலையும்; வடக்கில் புளோரஸ் கடலையும் எதிர்கொள்கிறது. இந்த மாநிலம் திமோர் தீவின் மேற்குப் பகுதியில் கிழக்கு திமோர் (Timor-Leste) மாநிலத்தின் எல்லையைக் கொண்டுள்ளது. மேலும் மேற்கு நுசா தெங்காரா (Nusa Tenggara Barat) மாநிலத்திற்கும் மலுக்கு மாநிலத்திற்கும் அருகில் உள்ளது.
இந்த மாநிலம் சுமார் 566 தீவுகளைக் கொண்டுள்ளது. அவற்றில் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆதிக்கம் செலுத்தும் தீவுகள் புளோரெஸ், சும்பா தீவுகள் மற்றும் திமோரின் மேற்குப் பகுதி தீவுகள் ஆகும். சிறிய தீவுகளில் அடோனாரா, அலோர், கொமோடோ, லெம்பாட்டா, மெனிபோ, இரைஜுவா, இரிஞ்சா, ரோட் தீவு, சவு, செமாவ் தீவு மற்றும் சோலோர் ஆகியவை அடங்கும். மாநிலத்தின் மிக உயரமான இடம் கடல் மட்டத்திலிருந்து 2,427 மீட்டர் உயரத்தில் உள்ள முத்திசு மலை; இந்த மலை தென் மத்திய திமோர் பிராந்தியத்தில் உள்ளது.[12]
- கிழக்கு நுசா தெங்காராவின் நிலப்பரப்புகள்
-
பாடார் தீவு
-
தெர்னாத்தே தீவு
-
புரா தீவு
காலநிலை
[தொகு]கிழக்கு நுசா தெங்காரா காலநிலை வெப்பமண்டல காலநிலையாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு நுசா தெங்காராவில் ஆண்டு முழுவதும் அதிக அளவு மழைப்பொழிவு உள்ளது. இங்குள்ள காலநிலை கோப்பன்-கீகர் அமைப்பின்படி Af என வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஆண்டு சராசரி வெப்பநிலை 24 °C ஆகும்; சராசரி ஆண்டு மழைப்பொழிவு 4420 மிமீ ஆகும்.
மேலும் காண்க
[தொகு]- கொமோடோ (தீவு)
- கொமோடோ தேசியப் பூங்கா
- கொமோடோ டிராகன்
- கொமோடோ அருங்காட்சியகம் ஊர்வன பூங்கா
- சாவா உருசா
- வாலேசியன் கரிச்சான்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Badan Pusat Statistik, Jakarta, 28 February 2025, Provinsi Nusa Tenggara Timur Dalam Angka 2025 (Katalog-BPS 1102001.53)
- ↑ Indonesia's Population: Ethnicity and Religion in a Changing Political Landscape, Institute of Southeast Asian Studies, 2003
- ↑ Bengkulu Lumbung Nasionalis yang Cair. February 11, 2009.
- ↑ "Visualisasi Data Kependuduakan - Kementerian Dalam Negeri 2020". www.dukcapil.kemendagri.go.id. Retrieved 14 August 2021.
- ↑ "Indeks Pembangunan Manusia 2024" (in இந்தோனேஷியன்). Statistics Indonesia. 2024. Retrieved 15 November 2024.
- ↑ "Examining the Traces of Indonesian Little People in Liang Bua Cave". indonesia.go.id. Retrieved 2024-10-12.
- ↑ "Indonesia, Flores, Labuan Bajo - Wet Frog Divers". www.wetfrogdivers.com. Retrieved 2024-11-11.
- ↑ "Kain Tenun Nusa Tenggara Timur – Geonusantara" (in அமெரிக்க ஆங்கிலம்). Retrieved 2024-08-30.
- ↑ DKIPS (2024-11-02). "PASOLA WANUKAKA". Website Resmi Pemerintah Kabupaten Sumba Barat (in இந்தோனேஷியன்). Retrieved 2024-11-11.
- ↑ "The Indonesian province of East Nusa Tenggara". Travelfish (in ஆங்கிலம்). Retrieved 2024-08-30.
- ↑ Statute of Staatsblad No. 143, 1946.
- ↑ "The Meto People on Mutis Mountain". Travel Destination Indonesia. Archived from the original on 7 July 2011. Retrieved 3 July 2010.
சான்றுகள்
[தொகு]- Reid, Anthony (ed.). 1995. Witnesses to Sumatra: A traveller's anthology. Kuala Lumpur: Oxford University Press. pp. 125–133.
- Reprints of British-era primary source material
- Wilkinson, R.J. 1938. Bencoolen. Journal of the Malayan Branch Royal Asiatic Society. 16(1): 127–133.
- Overview of the British experience in Bencoolen
வெளி இணைப்புகள்
[தொகு]விக்கிச்செலவில் செலவு வழிகாட்டி: கிழக்கு நுசா தெங்காரா
பொதுவகத்தில் East Nusa Tenggara தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்
- Official website of the NTT Tourist Office
- The NTT website of the Indonesian Central Statistics Bureau (Badan Pusat Statistik or BPS) which provides data on a range of matters in the province. Especially helpful is the annual publication NTT dalam Angka [NTT in Figures] which provides very extensive statistics about a wide range of issues.
- The quarterly reports of economic conditions in NTT issued by the provincial branch of Bank Indonesia.
- The local Kupang newspaper Pos Kupang provides local news coverage of many provincial events.
- Website on music from the islands of Roti and Lombok.