உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கு நட்சத்திரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
{{{awardname}}}
கிழக்கு நட்சத்திரம்
விருது குறித்தத் தகவல்
நாடு
வகை சேவை விருது
தகுதி

கிழக்கு நட்சத்திரம் (Poorvi Star) என்பது இந்தியப் படைவீரர்களுக்கு வழங்கப்பட்ட சேவை விருதாகும். இந்த பதக்கம் 1971-ல் இந்தியா-பாக்கித்தான் போரின் போது வங்காளதேசத்தில் பணியாற்றிய இந்தியத் தரைப்படை வீரர்களுக்கு வழங்கப்பட்டது.[1]

பதக்கம்[தொகு]

கிழக்கு நட்சத்திரப் பதக்கம் ஐந்து புள்ளிகள் கொண்ட நட்சத்திர வடிவில் வளைந்த கதிர்கள் கொண்டது. இதன் குறுக்கு விட்டம் 40 மி.மீ. இது தோம்பாக் வெண்கலத்தால் ஆனது. இதன் மேல் ஒரு புள்ளி கொண்ட பட்டையுடன் வளையம் ஒன்று பொருத்தப்பட்டிருக்கும். மையத்தில், இதன் குறிக்கோளுடன் கூடிய மாநிலச் சின்னமும், இதன் மேல்புறம் மற்றும் வட்டப் பட்டையின் (2 மில்லிமீட்டர்) வெளிப்புற விளிம்புகளில் (20 மில்லிமீட்டர் விட்டம்) மாநிலச் சின்னத்தைச் சுற்றிலும் சிங்கங்களின் தலைகளுடன் காணப்படும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Poorvi Star".
  2. "Poorvi Star". www.indiannavy.nic.in. பார்க்கப்பட்ட நாள் 2022-10-02. {{cite web}}: Text "Indian Navy" ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_நட்சத்திரம்&oldid=3528412" இலிருந்து மீள்விக்கப்பட்டது