உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கு சமர், பிலிப்பீன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கு சமர்
மாகாணம்
மாகாண வரைபடம்
மாகாண வரைபடம்
நாடுபிலிப்பீன்சு
பிராந்தியம்கிழக்கு விசயாசு
நேர வலயம்ஒசநே+8 (பிசீநே)

கிழக்கு சமர் (Eastern Samar) என்பது பிலிப்பீன்சின் விசயாசின், கிழக்கு விசயாசுப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஆறு மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் பொரொங்கன் ஆகும். இம்மாகாணம் 1965 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்டது. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் கொன்ராடோ பி. நிகார்ட்ஜே, ஆர். (Conrado B. Nicart, Jr. ) ஆவார். இதன் மொத்த நிலப்பரப்பளவு 4,660.47 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக கிழக்கு சமர் மாகாணத்தின் சனத்தொகை 467,160 ஆகும்.[2] மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 24ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 58ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. இம்மாகாணத்தில் 132 கிராமங்களும், 22 மாநகராட்சிகளும் உள்ளன. அத்துடன் இம்மாகாணத்தில் தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக நான்கு பிரதான மொழிகள் பேசப்படுகின்றன. மார்ச் 12, 1521 அன்று மகலன் வந்து இறங்கிய பிலிப்பீன்சின் முதலாவது இடம் இது என வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.[3][4][5]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-04.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. Lancion, Jr., Conrado M.; cartography by de Guzman, Rey (1995). "The Provinces; Eastern Samar". Fast Facts about Philippine Provinces (The 2000 Millenium ed.). Makati, Metro Manila, Philippines: Tahanan Books. p. 72. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 971-630-037-9. பார்க்கப்பட்ட நாள் 4 December 2015.{{cite book}}: CS1 maint: multiple names: authors list (link)
  4. Labro, Vicente S. (11 June 2011). "Guiuan’s treasure chest of history, natural wonders". Philippine Daily Inquirer. http://newsinfo.inquirer.net/13922/guiuan%E2%80%99s-treasure-chest-of-history-natural-wonders. பார்த்த நாள்: 24 April 2016. 
  5. "The Province of Eastern Samar". National Statistical Coordination Board. Archived from the original on 6 டிசம்பர் 2014. பார்க்கப்பட்ட நாள் 24 April 2016. {{cite web}}: Check date values in: |archive-date= (help)