கிழக்கு கட்டளையகம், இந்தியத் தரைப்படை
| கிழக்கு கட்டளையகம் | |
|---|---|
கிழக்கு கட்டளையகத்தின் சின்னம் | |
| செயற் காலம் | 1920–தற்போது வரை |
| நாடு | |
| கிளை | |
| வகை | கட்டளையகம் |
| தலைமையிடம் | வில்லியம் கோட்டை, கொல்கத்தா, மேற்கு வங்காளம் |
| சண்டைகள் | இரண்டாம் உலகப் போர் 1962 இந்திய-சீனப் போர் 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் 2020–2021 இந்தியா–சீனா மோதல்கள் |
| தளபதிகள் | |
| தற்போதைய தளபதி | லெப்.ஜெனரல் இராம் சந்தர் திவாரி |
| படைத்துறைச் சின்னங்கள் | |
| கொடி | |
கிழக்கு கட்டளையகம் (Eastern Command), இந்தியத் தரைப்படையின் 7 கட்டளையகங்களில் ஒன்றாகும். இதன் தலைமையிடம் மேற்கு வங்காள மாநிலத்தின் தலைநகரான கொல்கத்தாவில் உள்ள வில்லியம் கோட்டையில் உள்ளது. பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் போது கிழக்கு கட்டளையகம் 1 நவம்பர் 1920 அன்று நிறுவப்பட்டது.[1]இக்கட்டளைகம் முத்த லெப். ஜெனரல் தலைமையிலான தலைமைக் கட்டளைத் தளபதியின் கீழ் இயங்குகிறது. இக்கட்டளையகத்தின் தற்போதைய தலைமைக் கட்டளை தளபதி லெப். ஜெனரல் இராம் சந்தர் திவாரி ஆவார்.
கிழக்கு கட்டளையகத்தின் படைகள் இரண்டாம் உலகப் போர்,1962 இந்திய-சீனப் போர், 1971 இந்தியா-பாக்கிஸ்தான் போர் மற்றும் 2020-21 இந்தியா-சீனா மோதல்களில் ஈடுபட்டுள்ளது.
அமைப்பு
[தொகு]கிழக்கு கட்டளையகத்தின் கீழ் கீழ்கண்ட இந்திய மாநிலங்கள் உள்ளது[2]
- மேற்கு வங்காளம்
- சிக்கிம்
- அசாம்
- அருணாச்சலப் பிரதேசம்
- நாகாலாந்து
- மணிப்பூர்
- மிசோரம்
- திரிபுரா
- மேகாலயா
- ஜார்க்கண்ட்
கிழக்கு கட்டளையகத்தின் கீழ் 3வது பெரும்படையணி (Corps), 4வது பெரும் படையணி, 7வது பெரும்படையணி 33வது பெரும்படையணி மற்றும் 23 தரைப்படை டிவிசன்கள் உள்ளது. [3][4]
| கிழக்கு கட்டளையகத்தின் அமைப்பு | |||||
|---|---|---|---|---|---|
| சின்னம் | பெரும்படையணி | தலைமையிடம் | பெரும்படையணியின் கட்டளைத் தலைவர் | ஒதுக்கப்பட்ட அலகுகள் | அலகின் தலைமையிடம் |
| 3வது பெரும் படையணி | திமாப்பூர், நாகாலாந்து | லெப். ஜெனரல். அபிஜித் எஸ். பண்டார்கர்[5] | 2வது தரைப்படை மலை டிவிசன் | திஞ்சான், அசாம் | |
| 56வது மலைப் படை டிவிசன் | லிகாபலி, அருணாச்சலப் பிரதேசம் | ||||
| 57 மலைப்படை டிவிசன் | லெய்மாகோங், மணிப்பூர் | ||||
| 4வது பெரும்படையணி | தேஜ்பூர், அசாம் | லெப். ஜெனரல். கம்பீர் சிங் [6] | 5வது மலைப்படை டிவிசன் | பொம்டிலா, அருணாச்சலப் பிரதேசம் | |
| 21வது மலைப்படை டிவிசன் | ரங்கியா, அசாம் | ||||
| 71வது மலைப்படை டிவிசன் | மிஸ்சா மாரி, அசாம் | ||||
| 17வது பெரும்படையணி | பனாகர், மேற்கு வங்காளம் | லெப். ஜெனரல். யாஷ் சிங் அக்லாவாத்[7] | 59 மலைப்படை டிவிசன் | பனாகர், மேற்கு வங்காளம் | |
| 23வது தரைப்படை டிவிசன் | ராஞ்சி, சார்க்கண்டு | ||||
| 17வது பீரங்கிப்படை பிரிகேட் | பனாகர், மேற்கு வங்காளம் | ||||
| 23வது பெரும்படையணி | சிலிகுரி, மேற்கு வங்காளம் | லெப். ஜெனரல் ஏ. மின்வல்லா[8] | 17வது மலைப்படை டிவிசன் | கேங்டாக், சிக்கிம் | |
| [20வது தரைப்படை டிவிசன் | பின்னகுரி, மேற்கு வங்காளம் | ||||
| 27வது தரைப்படை டிவிசன் | காளிம்பொங், மேற்கு வங்காளம் | ||||
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "The Official Home Page of the Indian Army". www.indianarmy.nic.in.
- ↑ "Eastern Command". Indian Army. Archived from the original on 2 மே 2014. Retrieved 25 சூன் 2012.
- ↑ "Eye on China, India to raise second division for mountain corps" (in en-US). The Indian Express. 2017-03-17 இம் மூலத்தில் இருந்து 17 March 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170317013100/http://indianexpress.com/article/india/indian-army-eye-on-china-india-to-raise-second-division-for-mountain-corps-4572493/.
- ↑ "The mountain is now a molehill" இம் மூலத்தில் இருந்து 19 November 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20161119181816/http://indiatoday.intoday.in/story/indian-army-mountain-chinese-territory-general-dalbir-singh-arun-jaitley-budget/1/604583.html.
- ↑ "Lt Gen Abhijit S Pendharkar took over command of the Spear Corps from Lt Gen HS Sahi". X (formerly twitter) (in ஆங்கிலம்). 2024-08-10.
- ↑ "Lt Gen Gambhir Singh takes over as GOC IV Corps - ADGPI Twitter". X (formerly twitter) (in ஆங்கிலம்). Retrieved 2024-08-01.
- ↑ "Lt General Yash Ahlawat Assumes Command of Brahmastra Corps" (in அமெரிக்க ஆங்கிலம்). 2024-11-20. Retrieved 2024-11-21.
- ↑ "GOC of Trishakti Corps inaugurates oxygen generation plant in Siliguri". www.telegraphindia.com. Retrieved 2022-06-08.
மேலும் படிக்க
[தொகு]- Richard A. Renaldi; Ravi Rikhe (2011), 'Indian Army Order of Battle', Orbat.com for Tiger Lily Books: A division of General Data LLC, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9820541-7-8.