கிழக்கு கடலோர பூங்கா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிழக்கு கடலோர பூங்கா

கிழக்கு கடலோர பூங்கா, சிங்கப்பூரில் உள்ள கடலோர பூங்காவாகும். 185 ஹெக்டேர் நிலப்பரப்பில் அமைந்து உள்ள இந்த பூங்கா சிங்கப்பூரின் நீளமான கடற்கரை பகுதியாகும். சிங்கப்பூரில் செயற்கையாக உருவாக்கப்பட்ட பகுதிகளில் இதுவும் ஒன்றாகும். முன்னர் இருந்த கதொங் கடற்பகுதியில், சாங்கி தொடங்கி தஞ்சோங் ரூ வரை சுமார் 15 கிலோ மீட்டார் தொலைவிற்கு இந்த பூங்கா அமைந்து இருக்கிறது.

பொழுது போக்கு அம்சங்கள்[தொகு]

இங்கு மக்களை கவரும் பல வசதிகள் இருக்கின்றது. உள்ளரங்க விளையாட்டு அரங்கங்கள், சறுக்கு விளையாட்டு திடல்கள், பந்து வீசும் நிலையங்கள்(), நீர் விளையாட்டு நிலையங்கள், கடல் விளையாட்டு மையங்கள், போன்ற கேளிக்கை விடுதிகளும். பல கடல் உணவகங்களும் இங்கு உள்ளன. மீன் பிட்த்தலில் ஆர்வமுள்ளவர்கள் இங்குள்ள பெடோக் கப்பல் போக்குவரத்து தளத்திற்கு வருகிறார்கள்.வார இறுதியை கழிக்க பெரும்பாலும் சிங்கப்பூரர்கள் இந்த கடற்கரையை நாடுகிறார்கள்.

முதலாம் இளையர் ஒலிம்பிக் போட்டிகள்[தொகு]

2010 ஆம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற இளையர் ஒலிம்பிக் போட்டிகளில், முத்தொடர் போட்டிகள் () இங்கு நடைபெற்றன.

மண் அரிப்பு[தொகு]

2007 ஆம் ஆண்டு, சிங்கப்பூர் செய்திகளில் இந்த கடற்கரை உலக வெப்பமயமாதல் காரணமாக கடல் அரிப்பால் பாதிப்படைந்த்ததி. சில கட்டுமானங்கள் கடல் மட்ட உயர்வால் பாதிப்படைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.


மேலும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கு_கடலோர_பூங்கா&oldid=1363891" இருந்து மீள்விக்கப்பட்டது