கிழக்கிந்திய தீவுக்கூட்டம்

கிழக்கிந்திய தீவுக்கூட்டம் (ஆங்கிலம்: East Indian Archipelago) என்பது பன்னாட்டு நீராய்வியல் அமைப்பால் (International Hydrographic Organization) வரையறுக்கப்பட்ட ஒரு நீர்ப் பகுதியாகும். இது பன்னிரண்டு கடல்கள், இரண்டு வளைகுடாக்கள் மற்றும் கிழக்கிந்தியத் தீவுகளில் (தென்கிழக்காசியா) ஒரு நீரிணையை உள்ளடக்கியது.[1]
பன்னாட்டு நீராய்வியல் அமைப்பு என்பது பன்னாட்டு அரசுகளுக்கு இடையில் நீராய்வியல் துறையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஓர் அமைப்பாகும். உலகில் உள்ள கடல்கள், பெருங்கடல்கள் மற்றும் நீர்நிலைகள் போன்றவற்றை ஆய்வு செய்து உறுதி செய்வதே அந்த அமைப்பின் நோக்கமாகும்.[2]
கடல்கள்
[தொகு]பன்னாட்டு நீராய்வியல் அமைப்பின் 2002-ஆம் ஆண்டின் வரைவு 4; வெளியீடு S-23-இன் பெருங்கடல்கள் மற்றும் கடல்களின் வரம்புகள் (Limits of Oceans and Seas) எனும் பகுதியில்; தென் சீனா & கிழக்கு தீவுக்கூட்டக் கடல்கள் என்ற தலைப்பின் கீழ் பட்டியலிடப்பட்டு உள்ளது.
கிழக்கிந்திய தீவுக்கூட்டத்தின் நீர்நிலைகள்
[தொகு]- பண்டா கடல் - 695000 கிமீ2
- அரஃபூரா கடல் - 650000 கிமீ2
- திமோர் கடல் - 610000 கிமீ2
- சாவகக் கடல் - 320000 கிமீ2
- சுலாவெசி கடல் - 280000 கிமீ2
- சுலு கடல் - 260000 கிமீ2
- மலுக்கு கடல் - 200000 கிமீ2
- செராம் கடல் - 12000 கிமீ2
- புளோரஸ் கடல் - 240000 கிமீ2
- அல்மகிரா கடல் - 95000 கிமீ2
- பாலி கடல் - 45000 கிமீ2
- சாவு கடல் - 35000 கிமீ2
- போனி வளைகுடா கிமீ2
- தோமினி வளைகுடா கிமீ2
- மாக்காசார் நீரிணை கிமீ2
மேற்காணும் பட்டியலில்; 6 கடல்கள், 2 வளைகுடாக்கள், 1 நீரிணை ஆகியவை முழுமையாக இந்தோனேசியாவின் நீர்நிலைகளாகும். பிலிப்பீன்சுக்கும் சபாவிற்கும் (போர்னியோ தீவில் உள்ள மலேசியாவின் ஒரு மாநிலம்) இடையில் அமைந்துள்ள சுலு கடல், இந்தோனேசிய நீர்ப் பகுதியில் இல்லை; மற்ற ஐந்து கடல்களும் பகுதியளவு இந்தோனேசியாவைச் சேர்ந்தவை.
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Malay Archipelago, largest group of islands in the world, consisting of the more than 17,000 islands of Indonesia and the approximately 7,000 islands of the Philippines". www.britannica.com (in ஆங்கிலம்). Retrieved 13 March 2025.
- ↑ "First Assembly of the International Hydrographic Organization (IHO)". hydro-international.com (in ஆங்கிலம்). Retrieved 2019-04-17.
வெளி இணைப்புகள்
[தொகு]பொதுவகத்தில் கிழக்கிந்திய தீவுக்கூட்டம் தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- அதிகாரப்பூர்வ இணையதளம்