உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கத்திய நேர வலயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிழக்கத்திய நேர வலயம்
   (வலதுகோடியில் உள்ள மஞ்சள்)
ஒ.அ.நே தள்ளிவைப்பு
ESTUTC−5:00
EDTUTC−4:00
தற்போதைய நேரம் (Refresh the clock.)
EDT8:29 pm on ஓக 18, 2024
பகல்சேமிப்பு நேரப் பயன்பாடு
பகல்சேமிப்பு நேரம் இந்த நேரவலயத்தின் அனைத்துப்பகுதிகளிலும் மார்ச்சு மாத இரண்டாம் ஞாயிறு முதல் நவம்பர் மாத முதல் ஞாயிறு வரை பாவிக்கப்படுகிறது.
பசேநே துவக்கம்மார்ச்சு 10, 2024
பசேநே முடிவுநவம்பர் 3, 2024

கிழக்கத்திய நேர வலயம் (Eastern Time Zone, ET, கி.நே.வ) ஐக்கிய அமெரிக்காவின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள 17 மாநிலங்களிலும் கனடாவின் சில பகுதிகளிலும் தென் அமெரிக்காவில் மூன்று நாடுகளிலும் பயன்படுத்தப்படுகிறது.

கிழக்கத்திய சீர்தர நேரம் (EST) பாவிக்கும் இடங்கள் முன்குளிர்/குளிர் காலங்களில் சீர்தர நேரத்தைப் பேணும்போது ஒருங்கிணைந்த பன்னாட்டு நேரத்திலிருந்து ஐந்து மணி நேரம் பின்தங்கி உள்ளனர் (ஒஅநே−05:00).

கோடை அல்லது இளவேனில் காலத்தில் பகல்பொழுதை சேமிக்கும் வண்ணம் கிழக்கத்திய பகல்சேமிப்பு நேரம் (EDT) பாவிக்கப்படும்போது ஒருங்கிணைந்த பன்னாட்டு நேரத்திலிருந்து நான்கு மணி நேரம் பின்தங்கி உள்ளனர் (ஒஅநே−04:00).

இந்த நேர வலயத்தின் வடக்குப் பகுதிகளில் மார்ச்சு மாதத்தின் இரண்டாம் ஞாயிறன்று விடிகாலை 2:00 மணிக்கு சீர்தர நேர கடிகாரங்கள் பகல்சேமிப்பு நேரம் 3:00 மணிக்கு முன்தள்ளப்படுகின்றன. இதேபோன்று நவம்பர் மாதத்தின் முதல் ஞாயிறன்று விடிகாலை 2:00 மணிக்கு பகல்சேமிப்பு கடிகாரங்கள் 1:00 மணி சீர்தர நேரத்திற்கு பின்தள்ளப்படுகின்றன. தென்பகுதிகளில் உள்ள பனாமா மற்றும் கரீபிய நாடுகளில் இத்தகைய பகல்சேமிப்பு நேரங்கள் பாவிக்கப்படுவதில்லை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிழக்கத்திய_நேர_வலயம்&oldid=1403686" இலிருந்து மீள்விக்கப்பட்டது