உள்ளடக்கத்துக்குச் செல்

கிள்ளியாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிள்ளியாறு
കിള്ളിയാർ
பெயர்Error {{native name}}: an IETF language tag as parameter {{{1}}} is required (help)
அமைவு
நாடுஇந்தியா
மாநிலம்கேரளா
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுநெடுமாங்காடு வட்டம் கார்ப்பூர் அருகில்
முகத்துவாரம்காரமன்னா ஆறு
 ⁃ அமைவு
பள்ளத்துக்கடவு, இந்தியா
நீளம்22 கி. மீ.

கிள்ளியாறு (Killi River) என்பது தென்னிந்தியாவின் கேரளாவில் ஓடும் ஆறாகும். இது கிள்ளி ஆறுஎனவும் அழைக்கப்படுகிறது. காரமன்னா ஆற்றின் முக்கிய துணை ஆறான கிள்ளியாறு திருவனந்தபுரம் மாவட்டம் நெடுமங்காடு வட்டத்தில் உள்ள பனாவூருக்கு அருகில் தீர்த்தங்கரையில் உற்பத்தியாகிறது. இந்த ஆறு வாழையிலாவில் திருவனந்தபுரம் நகருக்குள் நுழைந்து மன்னம்மூலா, மருதன்குழி, இடைப்பழிஞ்சி, ஜகதி, கிள்ளிப்பாலம், ஆற்றுக்கால், காலடி தெற்கு வழியாகப் பாய்ந்து பள்ளத்துக்கடவில் கரமன்னாற்றில் கலக்கிறது. இந்த ஆற்றின் கரையில் ஆற்றுக்கால் பகவதி கோயில் உள்ளது.

சொற்பிறப்பியல்

[தொகு]

இது காரமன்னா ஆற்றை விட மிகவும் சிறிய ஆறாகும். இதன் நீளம் சுமார் 24 கி. மீ. ஆகும். கிள்ளி என்ற பெயர் பண்டைய திராவிட தெய்வத்தின் பெயரை நினைவூட்டுகிறது. மேலும் கிள்ளி என்பது சோழ வம்சங்களின் குடும்பப் பெயராகவும் உள்ளது (உ. ம். நெடுமுடி கிள்ளி என்பது சிலப்பதிகார காலத்தில் வாழ்ந்த ஒரு மன்னன்). கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகிய இரு மாநிலங்களிலும் கிள்ளி சொற்பிறப்பியல் தொடர்புடைய இடங்களின் பெயர்கள் கிள்ளிகுருச்சிமங்கலம், கிள்ளிக்குளம் முதலியன.[1]

தடுப்பணை

[தொகு]

கிள்ளி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட கேரள நீர்ப்பாசனத் துறை முடிவு செய்து பூர்வாங்கப் பணிகளைத் துவங்கியுள்ளது. இதன் மூலம் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டத்தை மேம்படுத்தவும், வறண்ட காலங்களில் தண்ணீர் பற்றாக்குறையை தீர்க்கவும், அருகிலுள்ள கிணறுகளில் நீர்மட்டத்தை மீட்டெடுக்கவும் முடியும். மேலும் இக்கட்டமைப்பின் மேல்புறத்தில் மணலைப் நிலைநிறுத்தி, ஆற்றின் புவியியல் அமைப்பை மீட்டெடுப்பதாகும்.[2]

கிள்ளியாறுத் திட்டம்

[தொகு]

பல ஆண்டுகளாக மாசடைந்து கிடக்கும் கிள்ளியாறு நீர்நிலையினைத் தூய்மைப்படுத்தி பாதுகாக்கும் பணி அண்மையில் திருவனந்தபுரம் மாநகராட்சி சார்பில் 25 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் துவங்கியது. முன்னதாக பிப்ரவரி 2019-ல் தொடங்கிய ஒரு நாள் முதல் கட்ட தூய்மைப்படுத்தும் திட்டத்தில் சுமார் 5,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.[3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. https://www.thehindu.com/sci-tech/energy-and-environment//article59825952.ece
  2. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  3. "Revival of Killi river by city corp enters second phase". The New Indian Express. பார்க்கப்பட்ட நாள் 2022-02-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிள்ளியாறு&oldid=3946093" இலிருந்து மீள்விக்கப்பட்டது