கிள்ளான் பள்ளத்தாக்கு தெற்கு விரைவுச்சாலை
|
கிள்ளான் பள்ளத்தாக்கு தெற்கு விரைவுச்சாலை | |
|---|---|
| South Klang Valley Expressway Lebuhraya SKVE | |
கிள்ளான் பள்ளத்தாக்கு தெற்கு விரைவுச்சாலை | |
| வழித்தடத் தகவல்கள் | |
| பராமரிப்பு SKVE நிறுவனம் | |
| நீளம்: | 51.7 km (32.1 mi) பிரிவு 1: 19.99 km பிரிவு 2: 12.96 km பிரிவு 3: 18.81 km |
| பயன்பாட்டு காலம்: | 1998 – |
| வரலாறு: | கட்டுமான தொடக்கம்: 2000 இரண்டாம் கட்டம் 2007–2011 மூன்றாம் கட்டம் 2010–2013 |
| முக்கிய சந்திப்புகள் | |
| கிழக்கு முடிவு: | தெனாகா நேசனல் பல்கலைக்கழகம் மாற்றுச் சாலை |
|
| |
| மேற்கு முடிவு: | இண்டா தீவு, கிள்ளான் |
| அமைவிடம் | |
| முதன்மை இலக்குகள்: | காஜாங், புத்ராஜெயா, சைபர்ஜெயா, சௌஜானா புத்ரா, தெலுக் பாங்லிமா காராங், பந்திங், கேரி தீவு இண்டா தீவு |
| நெடுஞ்சாலை அமைப்பு | |
கிள்ளான் பள்ளத்தாக்கு தெற்கு விரைவுச்சாலை
(ஆங்கிலம்; South Klang Valley Expressway (SKVE); மலாய்: Lebuhraya Lembah Klang Selatan) என்பது மலேசியா, சிலாங்கூர் மாநிலத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட கிள்ளான் பள்ளத்தாக்கின் தெற்குப் பகுதியில் உள்ள ஒரு விரைவுச் சாலையாகும்.[1]
இந்த இரட்டை வழிச் சாலை 51.7 கிமீ (32.1 மைல்) நீளம் கொண்டது. மலேசிய நாட்டின் நிர்வாகத் தலைநகரான புத்ராஜெயா உட்பட தெற்கு கிள்ளான் பள்ளத்தாக்கின் முக்கியமான நகரங்களுடன் இணைப்புகளை வழங்குகிறது.[1] கிள்ளான் பள்ளத்தாக்கு தெற்கு விரைவுச்சாலை, கிள்ளான் பள்ளத்தாக்கில் கிழக்கு-மேற்கு நோக்கிய ஐந்தாவது விரைவுச்சாலையாகும்.[2]
கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை,
கிள்ளான் பள்ளத்தாக்கு புதிய விரைவுச்சாலை (NKVE),
கோலாலம்பூர்–கோலா சிலாங்கூர் விரைவுச்சாலை (LATAR)
சா ஆலாம் விரைவுச்சாலை (KESAS) ஆகியவை கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள மற்ற விரைவுச்சாலைகள் ஆகும்.
வழிப் பின்னணி
[தொகு]
காஜாங் பரவல் இணைப்பு விரைவுச்சாலையில் (Kajang Dispersal Link Expressway) உள்ள யூனிடென் (Uniten Interchange) மாற்றுச்சாலைக்குப் பின்னர், இந்த விரைவுச் சாலையின் சுழிய கிலோமீட்டர் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]பாங்கி நகரில் உள்ள தெனாகா நேசனல் பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள யூனிடென் (Uniten Interchange) மாற்றுச்சாலையின் முதல் 7.95 கிமீ (பிரிவு 1A) சாலை, பல ஆண்டுகளாக சுங்கத் தீர்வை இல்லாத பகுதியாகச் செயல்படுகிறது. இந்தச் சாலை மலேசிய பொதுப்பணித் துறையால் (JKR) கட்டப்பட்டது.
கிள்ளான் பள்ளத்தாக்கு தெற்கு விரைவுச்சாலையின் சாலை 1B, 2 மற்றும் 3 சாலைப் பிரிவுகள் எஸ்கேவிஇ நிறுவனத்தால் (SKVE Holdings Sdn Bhd) கட்டப்பட்டன. சைபர்ஜெயா முதல் பந்தர் சௌஜானா புத்ரா வரையிலான விரைவுச் சாலையின் பிரிவு 1B சாலைப் பகுதியின் கட்டுமானம் சூன் 2010-இல் நிறைவடைந்தது.
இண்டா தீவு
[தொகு]சௌஜானா புத்ராவில் இருந்து தெலுக் பாங்லிமா காராங் நோக்கி செல்லும் 12.96 கிமீ நீளம் கொண்ட விரைவுச் சாலையின் 2-ஆம் சாலைப் பிரிவு 2011-இல் நிறைவடைந்தது. எஸ்கேவிஇ நிறுவனத்தின் கடைசி பகுதியான 3-ஆம் சாலைப் பிரிவு 18.81 கிமீ நீளம் கொண்டது.
இந்த 3-ஆம் சாலைப் பிரிவு, கேரி தீவில் இணைந்து, பின்னர் இண்டா தீவு சாலைப் பரிமாற்றத்தில் முடிவடைகிறது. இந்த விரைவுச் சாலை புத்ராஜெயா மற்றும் கிள்ளான் துறைமுகத்தில் உள்ள மலேசிய மேற்கு துறைமுகத்திற்கு நேரடி இணைப்பாகச் செயல்படுகிறது.[3]
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ 1.0 1.1 "SKVE plays a bold and strategic role in shaping the country's transport and logistics landscape". Welcome to SKVE Holdings Sdn Bhd. Retrieved 31 October 2025.
- ↑ "This 51.7 km dual-carriageway provides links to the booming towns in southern Klang Valley, including the country's administrative capital, Putrajaya". klia2.info. 21 October 2017. Retrieved 31 October 2025.
- ↑ Kaur, Sharen (16 January 2020). "Growth in Pulau Indah". New Straits Times இம் மூலத்தில் இருந்து 28 April 2023 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20230428191426/https://www.nst.com.my/property/2020/01/557017/growth-pulau-indah.
