கிள்ளான் கேட் அணை
| கிள்ளான் கேட் அணை Klang Gates Dam | |
|---|---|
கிள்ளான் கேட் அணை | |
| அதிகாரபூர்வ பெயர் | Empangan Klang Gates |
| நாடு | |
| அமைவிடம் | உலு கிள்ளான், கோம்பாக் |
| புவியியல் ஆள்கூற்று | 3°14′7.44″N 101°45′1.08″E / 3.2354000°N 101.7503000°E |
| நோக்கம் | நீர்த்தேக்கம் |
| நிலை | செயல்பாட்டில் உள்ளது |
| திறந்தது | 1958 |
கிள்ளான் கேட் அணை (மலாய்: Empangan Klang Gates; ஆங்கிலம்: Klang Gates Dam); என்பது மலேசியா, சிலாங்கூர், உலு கிள்ளான், கோம்பாக் மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் அணையாகும். இந்த அணை புக்கிட் தபூர் அணை (Bukit Tabur Dam) என்றும் அழைக்கப்படுகிறது.
1958-ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்ட இந்த அணை, மலேசியாவின் நீர் விநியோகத்திற்கான முதல் அணை என அறியப்படுகிறது; மற்றும் இந்த அனை கான்கிரீட் வளைவு அணையாகும். இதன் மையத்தில் ஒரு நீர்க் கசிவுப் பாதையும் உள்ளது.[1][2]
கூறுகள்
[தொகு]கிள்ளான் கேட் அணையால் உருவாக்கப்பட்டுள்ள கிள்ளான் கேட் நீர்த்தேக்கம்; கிள்ளான் பள்ளத்தாக்குப் பகுதிகளில் வசிககும் மக்களுக்கும்; கோலாலம்பூர் வாழ் மக்களுக்கும்; குடிநீருக்கான முக்கிய உயிர்நாடியாக விளங்குகிறது. இந்த அணையின் நீர் சேமிப்புத் திறன் 25,104 மில்லியன் லிட்டர்கள் ஆகும்.
புக்கிட் நானாஸ் நீர் சுத்திகரிப்பு நிலையம், இந்த நீர்த்தேக்கத்தில் இருந்து மூல நீரை எடுத்து; ஒரு நாளைக்கு 145 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை உற்பத்தி செய்கிறது.[3] 2014-ஆம் ஆண்டு, கிள்ளான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட நீர் நெருக்கடியினால், இந்த அணையின் கொள்ளளவு 54% வரை குறைந்தது; அதன் காரணமாக 80 நாட்களுக்கு மட்டுமே நீர் விநியோகம் செயல்பாட்டில் இருந்தது.[4]
கிள்ளான் ஆறு
[தொகு]கிள்ளான் ஆறு (Klang River) மலேசியாவின் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் பாயும் ஒரு முக்கிய ஆறு ஆகும். இதன் ஆற்றுப் படுகையில்தான் கிள்ளான் கேட் அணை உருவாக்கப்பட்டு உள்ளது. மலாக்கா நீரிணையில் கலக்கும் இந்த ஆற்றின் நீளம் 120 கி.மீ.; ஆற்றுப்படுகை 1288 சதுர கி,மீ. கொண்டது; மற்றும் இந்த ஆற்றின் வழித்தடத்தில் 11 கிளையாறுகள் அதனுடன் இணைகின்றன.[5]
கிள்ளான் ஆற்றுப் படுகையில் உள்ள இடங்கள்
[தொகு]
- அம்பாங் ஜெயா
- கோலாலம்பூர்–காராக் விரைவுச்சாலை
- ஜாமிஃ பள்ளிவாசல்
- பிரிக்பீல்ட்ஸ்
- பங்சார்
- லெம்பா பந்தாய்
- கிள்ளான் லாமா சாலை
- பூச்சோங்
- பெட்டாலிங் ஜெயா
- சுபாங் ஜெயா
- சா ஆலாம்
- கிள்ளான்
- கிள்ளான் துறைமுகம்
மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Klang Gate Dam". www.instagram.com. Retrieved 30 October 2025.
- ↑ "Klang Gate Dam is located at the foot of Bukit Tabur, Taman Melawati". Warga Taman Keramat. Retrieved 30 October 2025.
- ↑ "UCSI River Watch - The Klang Gates Dam produces 145mil litres of clean water every day". UCSI University (in ஆங்கிலம்). 14 June 2024. Retrieved 30 October 2025.
- ↑ "Only 80 days of water supply left in Malaysia's Klang Valley". The Straits Times. 10 April 2014. https://www.straitstimes.com/asia/se-asia/only-80-days-of-water-supply-left-in-malaysias-klang-valley.
- ↑ "The Klang River winds through Malaysia's capital city of Kuala Lumpur and flows through the most densely populated area of the Southeast Asian country". AECOM. Retrieved 28 March 2022.
