கிளைமொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேச்சு மொழியின் வகையைக் குறிப்பதாகும் . இதனை வட்டார வழக்குகள் எனலாம். மனிதன் பேச்சாலும் எழுத்தாலும் தனது கருத்தைப் பிறருக்குத் தெரியப்படுத்தும் கருவி[1]யாகிய மொழியில் பேச்சு வழக்கில் மட்டும் ஏற்படும் மாற்றங்களைக் கிளைமொழியாக கொள்ளலாம் .ஒரு மொழி பரந்த பரப்பில் பேசப்படும்பொழுது அம்மொழியில் ஏற்படும் மாற்றங்களாக இது அமைகிறது. இதனை தனி மனித பேச்சு வழக்கு எனவும் அழைக்கப்படுகிறது .இந்த தனி மனித பேச்சு வழக்குகள் பல நபர்களால் பேசப்படும்போது ஒரு கிளை மொழியாகவும் பல கிளைமொழிகள் சேர்ந்து ஒரு பொதுமொழியையும் தோற்றுவிக்கிறது.

கிளைமொழி வகைகள்[தொகு]

கிளைமொழியை வழங்கும் இடம் சார்ந்து வட்டாரக்கிளைமொழி என்றும் பேசுகின்ற மக்களின் சமூக நிலையைக்கொண்டு சமூகக் கிளைமொழி என்றும் வகைப்படுத்தப்படுகிறது.

கோட்பாடு[தொகு]

கிளைமொழியைக் கண்டறிய மொழியியல் அறிஞர்கள் மொழி பாகுபாட்டுக் கோடு(Isologoss) என்ற கருத்தை வலியுறுத்துகின்றனர் .

தன்மை[தொகு]

கிளைமொழிகளில் பெரும்பான்மை ஒற்றுமையும் சிறுபான்மை வேறுபட்டும் அமைகிறது.

இலக்கியச் சான்றுகள்[தொகு]

சங்க கால இலக்கிய இலக்கண நூல்களில் கிளைமொழி பற்றிய சிந்தனைகள் பல உள்ளன. திருக்குறளில் 'பசு' என்பதற்கு 'பெற்றம்' என்பதும் சிலப்பதிகார அடியார்க்கு நல்லார் உரையில் சிறுபெண்களைச் 'சிறுமியர்' என்பதும் தொல்காப்பியர் கூறும் திசைச்சொற்களும் நோக்கத்தக்கது.

தமிழகக் கிளைமொழிகள்[தொகு]

1.வடக்குக் கிளைமொழி - 'ய' கரக் கிளைமொழி

2.மத்தியக் கிளைமொழி - 'ழ' கரக் கிளைமொழி

3.மேற்குக் கிளைமொழி - 'ல' கரக் கிளைமொழி

4.கிழக்குக் கிளைமொழி - 'ற' கரக் கிளைமொழி

மேற்கோள்கள்[தொகு]

1.மொழி நூல்,ச.அகத்தியலிங்கம்

2.தமிழண்ணல், இனிய தமிழ் மொழியின் இருவகை வழக்குகள், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், 2008.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைமொழிகள்&oldid=3436725" இலிருந்து மீள்விக்கப்பட்டது