கிளைட்டெல்லம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Regenwurm1.jpg

கிளைட்டெல்லம்(புணர்வளைத் தடுப்பு) என்பது மண்புழுக்கள் மற்றும் அட்டைப்புழுக்களின் தலைக்கு அருகேயுள்ள உடல் சுவரில் கண்டங்கள் அற்ற ஓா் தடிமனான சுரப்பிப்பகுதியாகும்.  இது முட்டைகளை வைப்பதற்கான ஒரு பிசுபிசுப்புத் திரவத்தைச் சுரக்கிறது.

இது உடலின் ஆரம்பத்திலிருந்து (14, 15 மற்றும் 16 வது கண்டங்களில்) 2 செமீ (0.79 அங்குலம்) உள்ளது. அதன் முக்கிய செயல்பாடு புழு முட்டைகளை சேமிப்பதாகும்.

கிளைட்டெல்லம்  இனப்பெருக்க அமைப்பான கிளீடெல்லேட்ஸின் ஒரு பகுதியாகும்.  இது வளைத்தசைப் புழுக்களின் துணைத் தாெகுதிகளான oligochaetes (மண்புழுக்கள்) மற்றும் ஹிரூடினைன்ஸ் (அட்டைப்புழுக்கள்) ஆகியவற்றில் காணப்படும். கிளைட்டெல்லம் என்பது மேற்புறத்தோலில் காணப்படும் ஒரு தடிப்பான பகுதியாகும்.  இப்பகுதியில் நிறமிகள் மங்கிக் காணப்படும். முட்டைகளைப் பாதுகாக்கும் கூட்டை உருவாக்க காேழைத்திரவத்தை இது சுரக்கிறது. சில வளைத்தசைப்புழுக்களில் இந்த உறுப்பு  பால் இனப்பெருக்கத்திற்குப் பயன்படுகிறது. முதிா்ச்சியடைந்த புழுக்களில் தெளிவாகத் தொியும் கிளைட்டெல்லத்தை  இளம் புழுக்களில்  கண்டறிவது கடினம். அட்டைப்புழுக்களில், இது குறிப்பிட்ட ஒரு பருவகாலத்தில் தோன்றுகிறது. அதன் நிறம் வளைத்தசைப்புழுக்களில் உள்ளதை விட சற்றே மங்கிக் காணப்படும். உயிருள்ள கண்டங்கள் சில சமயங்களில் கிளைட்டெல்லத்தை மூடிப் பாதுகாக்கும்.

மேற்காேள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளைட்டெல்லம்&oldid=3025497" இருந்து மீள்விக்கப்பட்டது