கிளைச்சாலை

கிளைச்சாலை (Spur route) என்பது ஒரு நீண்ட, மிக முக்கியமான சாலையான நெடுஞ்சாலை, மாநிலங்களுக்கு இடையேயான நெடுஞ்சாலை அல்லது எந்திரப் பாதையின் ஒரு கிளைச் சாலையாகும். ஒரு புறவழிச்சாலை அல்லது சுற்றுவழி கிளைப் பாதையாகக் கருதப்படுவதில்லை. ஏனெனில் இது பொதுவாக மற்றொரு அல்லது அதே பெரிய சாலையுடன் மீண்டும் இணைகிறது.[1][2]
இந்தியத் தேசிய நெடுஞ்சாலைகள் முக்கிய தேசிய நெடுஞ்சாலைகளின் கிளைச்சாலை வழித்தடங்களை எழுத்து பின்னொட்டுகளுடன் குறிப்பிடுகிறது. எடுத்துக்காட்டாக, தேசிய நெடுஞ்சாலை 1 பல வழித்தடங்களைக் கொண்டுள்ளது. இதனைத் தேசிய நெடுஞ்சாலை 1அ, தேசிய நெடுஞ்சாலை 1ஆ, தேசிய நெடுஞ்சாலை 1இ, தேசிய நெடுஞ்சாலை 1ஈ எனப்படுறது. இதில் குறுகிய பாதை வெறும் 6 கிலோமீட்டர் (3.7 mi) நீளமுடையது (தே. நெ. 1இ). தேசிய நெடுஞ்சாலை கிளைச்சாலையில் மிக நீளமானது 663 கிலோமீட்டர் (412 mi) தூரமுடையது தே. நெ. 1அ. இந்த உந்துவிசை வழித்தடங்கள் அடிப்படையில் தாய் தேசிய நெடுஞ்சாலையிலிருந்து உருவாகினாலும். இவை இரண்டாம் நிலை நிலையில் மட்டுமல்ல, சில உந்துவிழி வழித்தடங்களையும் இந்தியாவின் முக்கிய நகரங்களையும் இணைக்கின்றன. உதாரணமாக, சம்மு காசுமீர் மாநிலத்தின் தலைநகரான சிறீ நகரினை தே. நெ. 1அ என்ற விரைவுச் சாலை பிற நகரங்களுடன் இணைக்கின்றது. இந்தியாவில் துறைமுகங்களை இணைக்க சில கிளைச்சாலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பாராதீப், இதன் முதன்மைச் சாலை, தேசிய நெடுஞ்சாலை 5 உடன் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 5அ-வினையும், தூத்துக்குடியினைத் தேசிய நெடுஞ்சாலை 7 உடன் இணைக்கும் தே. நெ. 7அ ஆகும்.[3]
மேலும் காண்க
[தொகு]- வட்டச் சாலை