உள்ளடக்கத்துக்குச் செல்

கிளெப் வாடாகின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளெப் வாடாகின்
Gleb Wataghin
பிறப்புகிளிப் வாசிலோவிச்சு வாடாகின்.
(1899-11-03)நவம்பர் 3, 1899
பிர்சுலா, உருசியப் பேரரசு
இறப்புஅக்டோபர் 10, 1986(1986-10-10) (அகவை 86)
துரின், இத்தாலி
கல்வி கற்ற இடங்கள்துரின் பல்கலைக்கழகம், துரின்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
கியன்-கார்லோ விக்
செர்கியோ பியுபினி

கிளெப் வசிலீவிச் வாடாகின் (Gleb Vassielievich Wataghin) உருசிய-இத்தாலிய பரிசோதனை இயற்பியலாளராவார். உருசியப் பேரரசுவிற்கு உட்பட்ட பிர்சுலா நகரில் 1899 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். இரண்டு கண்டங்களில் இயற்பியல் பற்றிய கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு பெரும் உத்வேகமும் ஊக்கமும் அளித்த ஒரு சிறந்த அறிவியல் தலைவராக இவர் கருதப்படுகிறார். பிரேசில் நாட்டின் சாவோ பாவ்லோ நகரிலுள்ள சாவோ பாவ்லோ பல்கலைக்கழகத்திலும் இத்தாலியின் துரின் நகரிலுள்ள துரின் பல்கலைக்கழகத்திலும் வாடாகின் பணியாற்றினார்.

புதியதாக நிறுவப்பட்ட சாவோ பாவ்லோ பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையில் பிற ஐரோப்பிய இயற்பியலாளர்களுடன் ஆராய்ச்சியாளராக வாடகின் 1934 ஆம் ஆண்டு பணியமர்த்தப்பட்டார். அங்கு, சீசர் இலேட்சு, ஆசுகார் சாலா, மரியோ சென்பெர்க், ராபர்டோ சால்மெரோன், மார்செலோ டாமி டி சோவ்சா சாண்டோசு மற்றும் செயம் டியோம்னோ போன்ற இளம் இயற்பியலாளர்கள் குழுவின் ஆசிரியராக இருந்தார்.

பிரேசில் நாட்டு சாவோ பாவ்லோ மாநிலத்தின் காம்பினாசில் உள்ள மாநில பல்கலைக்கழகத்தின் இயற்பியல் நிறுவனத்திற்கு வாடாகின் நினைவாக இவரது பெயரிடப்பட்டுள்ளது. மாநிலப் பல்கலைக்கழகம் இயற்பியலில் ஒரு பரிசையும் இவருக்கு வழங்கியது. 1955 ஆம் ஆண்டு சாவோ பாவ்லோ பல்கலைக்கழகம் கிளெப் வாடாகின்னுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தது. [1]

1951 ஆம் ஆண்டில் இத்தாலி நாட்டில் வழங்கப்படும் பெல்ட்ரினெல்லி பரிசு வழங்கப்பட்டது. 1960 ஆம் ஆண்டு முதல் லின்சி தேசிய அகாதமியின் உறுப்பினராக இருந்தார். [2]

1986 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியன்று இத்தாலியின் டுரின் நகரில் வாடாகின் காலமானார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட நூலியல்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Doutores Honoris Causa pela USP - Décadas de 40 e 50 do séc. XX" (PDF). biton.uspnet.usp.br (in போர்ச்சுகீஸ்). University of São Paulo. பார்க்கப்பட்ட நாள் 2019-04-26.
  2. "Wataghin, Gleb". Treccani. அணுகப்பட்டது 2019-04-26. 

புற இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளெப்_வாடாகின்&oldid=3521181" இலிருந்து மீள்விக்கப்பட்டது