உள்ளடக்கத்துக்குச் செல்

கிளீவ்லாண்டு திறந்த கோப்பை முறை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கிளீவ்லாண்டு திறந்த கோப்பை முறை (Cleveland open-cup method) என்பது பெட்ரோலியப் பொருளின் உடனே தீப்பற்றிக்கொள்ளக்கூடிய நீர்மத்தின் வெப்பநிலையை தீர்மானிக்க வேதியியலில் உள்ள மூன்று முக்கிய முறைகளில் ஒன்றாகும். இது கிளீவ்லேண்டு திறந்த கோப்பை ஆய்வி என்றும் அழைக்கப்படுகிறது.[1]முதலில், கருவியின் சோதனைக் கோப்பையில் (பொதுவாக பித்தளை) பரிசோதனை செய்ய வேண்டிய திரவம் ஒரு குறிப்பிட்ட அளவிற்கு நிரப்பப்படுகிறது. பின்னர், இந்த வேதிப்பொருளின் வெப்பநிலை விரைவாகவும், பின்னர் கோட்பாட்டு தீப்பற்றும் புள்ளியை நெருங்கும்வரை மெதுவாகவும், நிலையான விகிதத்திலும் வெப்பம் அதிகரிக்கப்படுகிறது. வெப்பநிலை அதிகரிப்பதால், வேதிப்பொருள் எரியக்கூடிய ஆவியை அதிக அளவிலும் அடர்த்தியாகவும் உற்பத்தி செய்யத் தொடங்கும். ஒரு தீப்பொறி கோப்பையின் மேல் பகுதியிலே சிறிது இடைவெளியில் கொண்டு வரப்படுகிறது. எந்த வெப்பநிலையில் அந்த வாயு தீப்பற்றுகிறதோ அந்த வெப்பநிலையை தீப்பற்றும் புள்ளி என குறிப்பிடுகின்றனர். இந்த ஆய்வுக் கருவி, சோதனைச் சுடரைப் பயன்படுத்தும்போது குறைந்தது ஐந்து தொடர்ச்சியான வினாடிகள் பற்றவைப்பு ஏற்படும் போது, இரசாயனத்தின் தீப்பற்றும் புள்ளியை அடையும் என்று கருதப்படும். அதைத் தீர்மானிக்கவும் பயன்படுத்தப்படும். கருவியின் வெப்பநிலை வரம்பு 120 முதல் 250 பாகை செல்சியசு ஆகும்.[2]

வேதியியல் தீப்பற்றும் புள்ளிகளை நிறுவுவதற்கான பிற முக்கிய முறைகள் பென்சுகி-மார்டென்சு மூடிய-கப் சோதனை மற்றும் தாக்லியாபு கோப்பை முறை போன்றவையாகும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Standard Test Method for Flash and Fire Points by Cleveland Open Cup Tester", ASTM.org
  2. Wray, Harry A., ed. (September 1992). Manual on flash point standards and their use: methods and regulations. Baltimore, MD: ASTM International. ISBN 0-8031-1410-9.