கிளீவைட்டு

கிளீவைட்டு (Cleveite) என்பது நார்வேயில் காணப்படும் யுரேனியம் கொண்ட ஒரு தூய்மையற்ற கதிரியக்க வகை யுரேனிணைட்டு ஆகும். இது UO2 கலவையைக் கொண்டுள்ளது. சுமார் 10% யுரேனியம் அருமண் தனிமங்களால் மாற்றப்படுகிறது.[2] சுவீடிய வேதியியலாளர் பெர் தியோடர் கிளீவ் என்பவர் நினைவாகப் பெயரிடப்பட்டது.
கிளீவைட்டு கனிமம் தான் முதன்முதலில் அறியப்பட்ட நிலப்பரப்பு ஈலியத்தின் மூலமாகும். இது காலப்போக்கில் யுரேனியத்தின் ஆல்பா சிதைவால் உருவாக்கப்பட்டு கனிமத்திற்குள் சிக்கி (அடைக்கப்பட்டு) குவிகிறது. 1895 ஆம் ஆண்டில் வில்லியம் ராம்சே கனிமத்தின் மாதிரியை அமிலத்துடன் சேர்த்து சூடாக்கியபோது ஈலியத்தின் முதல் மாதிரியைப் பெற்றார்.[3] கிளீவ் மற்றும் ஆபிரகாம் லாங்லெட்டு ஆகியோர் ஒரே நேரத்தில் கிளீவைட்டிலிருந்து ஈலியத்தை தனிமைப்படுத்துவதில் வெற்றி பெற்றனர்.
இட்ரோகும்மைட்டு கனிமம் கிளீவைட்டு கனிமத்தின் ஒரு மாறுபட்ட வடிவமாகும். இதுவும் நார்வேயில் கிடைக்கிறது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Kirk, Wendy L. "Cleveite [not Clevite] and helium". Museums & Collections Blog. University College London. Retrieved 18 August 2017.
- ↑ http://www.mindat.org/min-29957.html Mindat.
- ↑ https://archive.org/details/becquerelraysthe00raylrich Rayleigh, Robert and John Strutt, 1904, The Becquerel rays and the properties of radium, London, E. Arnold.