கிளினோயெத்ரைட்டு
| கிளினோயெத்ரைட்டு Clinohedrite | |
|---|---|
நியூஜெர்சியில் கிடைத்த கிளினோயெத்ரைட்டு. புற ஊதா ஒளியில் ஆரஞ்சு நிற ஒளிர்வு. | |
| பொதுவானாவை | |
| வகை | சிலிக்கேட்டு கனிமம் |
| வேதி வாய்பாடு | CaZn(SiO4)·H2O |
| இனங்காணல் | |
| நிறம் | நிறமற்றது முதல் பழுப்பு நிற மேற்பரப்பு பூச்சு, தெளிவானது முதல் வெளிர் இளஞ்சிவப்பு முதல் செவ்வந்திக்கல் நிறப் படிகங்கள் வரை |
| படிக இயல்பு | மெல்லியதாகவோ அல்லது தட்டையாகவோ இருக்கும். மேற்பரப்பு முறிவு பூச்சுகள், குழிகள் அல்லது குழிகளில், அரிதாக படிகங்களின் மேலோடு போல - பட்டகம் முதல் தகடு வரை, ஆப்பு வடிவமாக இருக்கலாம். |
| படிக அமைப்பு | ஒற்றைச்சரிவச்சு |
| பிளப்பு | சரிபிளவு {010} |
| மோவின் அளவுகோல் வலிமை | 5.5 |
| மிளிர்வு | {010} இல் பளபளப்பானது, கண்ணாடி போன்றது; முத்து போன்றது |
| கீற்றுவண்ணம் | வெண்மை |
| ஒளிஊடுருவும் தன்மை | ஒளி புகும் மற்றும் ஒளி கசியும் |
| ஒப்படர்த்தி | 3.28–3.33 |
| ஒளியியல் பண்புகள் | ஈரச்சு (−) |
| ஒளிவிலகல் எண் | nα = 1.662 nβ = 1.667 nγ = 1.669 |
| புறவூதா ஒளிர்தல் | UV=ஆரஞ்சு |
| பிற சிறப்பியல்புகள் | வலிமையான வெப்ப மின்விளைவு |
| மேற்கோள்கள் | [1][2][3][4] |
கிளினோயெத்ரைட்டு (Clinohedrite) CaZn(SiO4)•H2O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். ஓர் அரிய சிலிக்கேட்டு கனிமமான இது நீரிய கால்சியம்-துத்தநாக சிலிக்கேட்டு கனிமமாக வகைப்படுத்தப்படுகிறது. ஒற்றைச்சரிவச்சு படிக அமைப்பில் இக்கனிமம் படிகமாகிறது. பொதுவாக நரம்புகள் மற்றும் முறிவுகள் மேற்பூச்சுகளாகக் காணப்படுகிறது. நிறமற்றும் , வெள்ளை முதல் வெளிர் செவ்வந்திக்கல் நிறத்திலும் இருக்கும். சரியான பிளவுகளுடன் அற்புதமான பளபளப்பைக் கொண்டுள்ளது. 5.5 என்ற மோவின் கடினத்தன்மை மதிப்பும் 3.28–3.33 என்ற ஒப்படர்த்தியையும் கொண்டுள்ளது.[2][3]
பன்னாட்டு கனிமவியல் சங்கம் கிளினோயெத்ரைட்டு கனிமத்தை Cnh[5]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.
குறுகிய அலை புற ஊதா ஒளியின் கீழ் கிளினோயெத்ரைட்டு அடர் ஆரஞ்சு நிறத்தை ஒளிரச் செய்கிறது. பெரும்பாலும் ஆர்டிசுட்டோனைட்டு (ஊதா நீலத்தை ஒளிரச் செய்கிறது), எசுப்பெரைட்டு (பிரகாசமான மஞ்சள் நிறத்தை ஒளிரச் செய்கிறது), கால்சைட்டு (ஆரஞ்சு-சிவப்பு நிறத்தை ஒளிரச் செய்கிறது), பிராங்க்ளினைட்டு (ஒளிரச் செய்யாதது) மற்றும் வில்லெமைட்டு (பச்சை நிறத்தை ஒளிரச் செய்கிறது) போன்ற கனிமங்களுடன் சேர்ந்து காணப்படுகிறது.[6]
கிளினோயெத்ரைட்டு முதன்மையாக நியூ செர்சியில் உள்ள பிராங்க்ளின் துத்தநாக சுரங்கங்களில் காணப்பட்டது. ஆனால் அரிசோனாவின் கிலா மாகாணத்தில் உள்ள கிறித்துமசு சுரங்கம், [2] மற்றும் சீனாவின் கான்சு மாகாணத்தில் உள்ள மேற்கு குயின்லிங்கு தங்கச் சுரங்கம் ஆகிய பகுதிகளிலும் கிடைப்பதாகப் பதிவாகியுள்ளது.[3]
கிளினோயெத்ரைட்டு முதன்முதலில் 1898 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டு விவரிக்கப்பட்டது. சாய்வைக் குறிக்கும் கிரேக்கச் சொல்லான கிளினோவிலிருந்தும், முகத்தைக் குறிக்கும் ஈட்ராவிலிருந்தும் இதன் படிக உருவவியலுக்காக கிளினோயெத்ரைட்டு எனப் பெயரிடப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Mineralienatlas
- 1 2 3 http://www.handbookofmineralogy.org/pdfs/clinohedrite.pdf Handbook of Mineralogy
- 1 2 3 http://www.mindat.org/min-1075.html Mindat
- ↑ "Webmineral data". Webmineral.com. Retrieved 2012-01-26.
- ↑ Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
- ↑ "Mineral Galleries". Galleries.com. Retrieved 2012-01-26.