கிளிநொச்சி மாவடி மாரி அம்பாள் கோவில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
மாவடி ஸ்ரீமாரி அம்பாள் தேவஸ்தானம்

மாவடி ஸ்ரீமாரி அம்பாள் தேவஸ்தானம் இலங்கையில் கிளிநொச்சி மாவட்டம், கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இராமநாதபுரம் கிராமத்தில் அமைந்துள்ளது.

இவ்வாலயத்தின் மூலவராக ஸ்ரீமாரிஅம்பாள் விளங்குகிறார். விநாயகர், சுப்பிரமணியர், சந்தானகோபாலர், பைரவர், நவக்கிரக மூர்த்திகள், சண்டேஸ்வரி போன்ற தெய்வங்கள் பரிவார மூர்த்திகளாக உள்ளனர். கிழக்கு நோக்கியவாறு அமைந்துள்ள இவ்வாலயம் ஆகம முறையில் அமைந்த ஆலயமாகும். ஆலய உள்பிரகாரத்தில் பரிவார தெய்வங்களுக்கான சந்நிதிகள் அமைந்துள்ள அதே வேளை சனீஸ்வரருக்கு தனிச்சன்னதியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

மகோற்சவம்[தொகு]

இவ்வாலய மகோற்சவம் ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் வரும் பௌர்ணமி நாளைப் பத்தாவது நாள் தீர்த்த திருவிழாவாக கொண்ட பத்து நாட்களாகும். கொடியேற்றம், சப்பரம், தேர் மற்றும் தீர்த்த திருவிழாக்கள் இங்கு சிறப்பாக இடம்பெறும் திருவிழாக்களாகும். ஆலய வேட்டை திருவிழா அன்று வட்டக்கச்சி (சில்வா வீதி)ஐயனார் ஆலயத்திற்கு அம்பிகை எழுந்தருளி அங்கு வாழை வெட்டும் உற்சவம் இடம்பெறுவதும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை ஆனி உத்தரத்தன்று ஆலயத்தில் பொங்கல் உற்சவமும் சிறப்பாக இடம்பெறும். அன்றையதினம் வட்டக்கச்சி ஆறுமுகம் வீதி முருகன் ஆலயம் இராமநாதபுரம் வயலூர் முருகன் ஆலயம், புதுக்காடு ஐயனார் கோவில், போன்ற பல்வேறு ஆலயங்களிலிருந்து காவடிகள் (தூக்குக்காவடி,பால்க்காவடி, பன்னீர்க்காவடி,புஷ்பக்காவடி) எடுத்து வந்து பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றுவர்.

வெளி இணைப்புகள்[தொகு]