கிளிசரிக் அமிலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளிசரிக் அமிலம்[1]
Glyceric acid.png
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,3-டையைதராக்சிபுரோப்பனாயிக் அமிலம்
வேறு பெயர்கள்
கிளிசரிக் அமிலம்
இனங்காட்டிகள்
473-81-4 Yes check.svgY
ChemSpider 732 N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 752
பண்புகள்
C3H6O4
வாய்ப்பாட்டு எடை 106.08 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுYes check.svgY/N?)
Infobox references

கிளிசரிக் அமிலம் (Glyceric acid) என்பது C3H6O4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கிளிசராலை ஆக்சிசனேற்றம் செய்து கார்பாக்சில் குழுவைக் கொண்டிருக்கும் இந்த ஒற்றைச் சர்க்கரை வகை சர்க்கரை அமிலத்தைத் தயாரிக்கிறார்கள்.

CH2OH-CHOH-CH2OH+[O]→CH2OH-CHOH-COOH+H2O

கிளிசரிக் அமிலத்தைக் கொண்டு தயாரிக்கப்படும் உப்புகளும் எசுத்தர்களும் கிளிசரேட்டுகள் எனப்படுகின்றன.

உயிர் வேதியியல்[தொகு]

2-பாசுப்போகிளிசரிக் அமிலம், 3-பாசுப்போகிளிசரிக் அமிலம், 1,3-பிசுபாசுப்போகிளிசரிக் அமிலம் உள்ளிட்ட பாசுப்பேட்டு உயிர்வேதியியல் இடைநிலைச் சேர்மங்கள் கிளைக்கலாற் பகுப்பு வினையில் தோன்றும் முக்கிய வேதிப் பொருட்களாகும் [2].

செரீன் போன்ற அமினோ அமிலங்களைத் தொகுக்கும் வினையில் 3-பாசுப்போ கிளிசரிக் அமிலம் ஒரு முக்கியமான மூலக்கூறாகத் திகழ்கிறது. சிசுடீன், கிளைசீன் போன்ற அமினோ அமிலங்கள் தயாரிப்பில் செரீன் பயன்படுத்தப்படுகிறது.


மேற்கோள்கள்[தொகு]

  1. Merck Index, 11th Edition, 4378.
  2. Reece, Jane B. (2009). Biology (8th ). San Francisco, CA: Pearson. பக். 168–169. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-8053-6844-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளிசரிக்_அமிலம்&oldid=2479570" இருந்து மீள்விக்கப்பட்டது