உள்ளடக்கத்துக்குச் செல்

கிளார்க்கைட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளார்க்கைட்டு
Clarkeite
பொதுவானாவை
வகைகனிமம்
வேதி வாய்பாடு(Na,Ca,Pb)
2
(UO
2
)
2
(O,OH)
3
or (Na,Ca,Pb)(UO
2
)O(OH)•0-1H
2
O
இனங்காணல்
படிக அமைப்புமுக்கோணம்
பிளப்புஏதுமில்லை
முறிவுசங்குருவம், துணை சங்குருவம்
மோவின் அளவுகோல் வலிமை4–4.5
மிளிர்வுபிசின், மெழுகு, உயவுத்தன்மை
கீற்றுவண்ணம்மஞ்சள் பழுப்பு
ஒளிஊடுருவும் தன்மைஒளி கசியும்
ஒப்படர்த்தி6.39
அடர்த்தி6.39 கி/செ.மீ3 (அளவிடப்பட்டது)
இரட்டை ஒளிவிலகல்0.111
பலதிசை வண்ணப்படிகமைபலவீனம்
2V கோணம்அளவிடப்பட்டது 30° முதல் 50°, கணக்கிடப்பட்டது 32°
நிறப்பிரிகைபலவீனமானது
பிற சிறப்பியல்புகள் Radioactive

கிளார்க்கைட்டு (Clarkeite) என்பது (Na,Ca,Pb)2(UO2)2(O,OH)3என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிமம் ஆகும். Na,Ca,Pb)(UO2)O(OH)•0-1H2O என்ற வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். இது ஒரு யுரேனியம் ஆக்சைடு கனிமமாகும்.

பன்னாட்டு கனிமவியல் சங்கம் கிளார்க்கைட்டு கனிமத்தை Cke[1]என்ற குறியீட்டால் அடையாளப்படுத்துகிறது.

கிளார்க்கைட்டின் நிறம் அடர் பழுப்பு நிறத்தில் இருந்து சிவப்பு கலந்த ஆரஞ்சு நிறம் வரை மாறுபடும். பெக்மாடைட்டு படிகமயமாக்கலின் போது, ​​யுரேனைட்டை ஆக்சிசனேற்றம் செய்து மாற்றுவதன் மூலம் கிளார்க்கைட்டு உருவாகிறது. யுரேனைட்டு தாங்கும் கிரானைட்டு பெக்மாடைட்டுகள் பொதுவானவை என்றாலும், கிளார்கைட்டு அரிதானது மற்றும் பிற யுரேனியம் தாதுக்களுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்து காணப்படுகிறது.

இக்கனிமம் இரண்டு இடங்களில் மட்டுமே அறியப்படுகிறது. அமெரிக்காவின் மேற்கு வட கரோலினாவில் உள்ள சுப்ரூசு பைன் பெக்மாடைட்டு மாவட்டம் மற்றும் இந்தியாவின் அச்மீர் மாவட்டத்தில் உள்ள இராச்புதானா ஆகியன இவ்விரண்டு இடங்களாகும். கிளார்கைட்டு கனிமம் மட்டுமே இயற்கையாகத் தோன்றும் உயர் வெப்பநிலை யுரேனேட்டு ஆகும். சிறந்த கிளார்கைட்டுக்கான பொதுவான வாய்ப்பாடு Na[(UO2)O(OH)](H2O)0–1 ஆகும்.

அமெரிக்க கனிம வேதியியலாளரும், அமெரிக்க புவியியல் ஆய்வின் முன்னாள் தலைமை வேதியியலாளருமான பிராங்க் விக்கிள்சுவொர்த் கிளார்க்கின் (1847-1931) நினைவாகப் இக்கனிமத்திற்கு கிளார்க்கைட்டு எனப் பெயரிடப்பட்டது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Warr, L.N. (2021). "IMA–CNMNC approved mineral symbols". Mineralogical Magazine 85 (3): 291–320. doi:10.1180/mgm.2021.43. Bibcode: 2021MinM...85..291W.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளார்க்கைட்டு&oldid=4407588" இலிருந்து மீள்விக்கப்பட்டது