உள்ளடக்கத்துக்குச் செல்

கிளாந்தான் ஆறு

ஆள்கூறுகள்: 6°13′N 102°14′E / 6.217°N 102.233°E / 6.217; 102.233
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாந்தான் ஆறு
Kelantan River
Sungai Kelantan
கோலா கிராய் பகுதியில்
கிளாந்தான் ஆறு
அமைவு
நாடு மலேசியா
மாநிலம் கிளாந்தான் மாவட்டம்
சிறப்புக்கூறுகள்
மூலம் 
 ⁃ அமைவுஉலு செப்பாட் மலை
 ⁃ ஏற்றம்2,161 m (7,090 அடி)[1]
முகத்துவாரம் 
 ⁃ அமைவு
தென்சீனக் கடல்
 ⁃ உயர ஏற்றம்
0 m (0 அடி)
நீளம்248 km (154 mi)
வெளியேற்றம் 
 ⁃ சராசரி557.5 m3/s (19,690 cu ft/s)
கிளாந்தான் ஆறு - ’நாசா’ செயற்கைக் கோள் காட்சி

கிளாந்தான் ஆறு என்பது (மலாய்: Sungai Kelantan; ஆங்கிலம்: Kelantan River; கிளாந்தான் மலாய் மொழி: Sunga Kelate;) என்பது மலேசியா, கிளாந்தான் மாநிலத்தில் அமைந்துள்ள ஒரு முக்கியமான ஆறு. [1]

இந்த ஆறு தாமான் நெகாரா தேசிய பூங்காவின் (Taman Negara National Park) வடகிழக்கு பகுதியில் சுமார் 11,900 கி.மீ². நீர்ப்பிடிப்புப் பகுதியைக் கொண்டது. தன் இறுதிப் பயணத்தில் தென் சீனக் கடலில் கலக்கிறது.[2]

வழிப் பாதை

[தொகு]

ஓராங் அஸ்லி பழங்குடியினர் அதிகமாக வசிக்கும் தெற்கு கிளாந்தானில் உள்ள குவா மூசாங் மாவட்டப் பகுதியின் மலைக்காடுகளில் கிளாந்தான் ஆறு தொடங்குகிறது.

இந்தப் பகுதி அதன் சுண்ணாம்புக் குன்றுகள் மற்றும் சுண்ணாம்புக் குகைகளுக்கு பெயர் பெற்றது. நெங்கேரி ஆற்றின் (River Nenggeri) வழிப்பாதையில் சில குகைகள் உள்ளன. குவா சா (Gua Cha) போன்ற குகைகள். 9000 ஆண்டுகள் பழைமை வாய்ந்தவை.

இந்த ஆறு ஏழு முக்கிய நகரங்களைக் கடந்து ஆறு கடலில் பாய்கிறது: கோலா கிராய், தானா மேரா மாவட்டம், மாச்சாங், பாசீர் மாஸ், தும்பாட், கோத்தா பாரு, பெங்காலான் செப்பா. ஆற்றின் முகத்துவாரத்தில் பல தீவுகள் உள்ளன.

கோலா பெசார்

[தொகு]

கோலா பெசார் என்று அழைக்கப்படும் முகத்துவாரத்தைச் சுற்றிலும் ஏராளமான மீனவக் கிராமங்கள் உள்ளன. பிரபலமான பாத்தேக் தயாரிப்பிற்கு நன்கு அறியப்பட்ட கிராமங்கள்.

1941 டிசம்பர் மாதம், மலாயா மீதான ஜப்பானியப் படையெடுப்பு நடந்தது. அப்போது ஜப்பானியத் துருப்புக்கள் முதன்முதலில் இங்குதான் தரையிறங்கினர்.

வெள்ளப் பாதிப்புகள்

[தொகு]

வடகிழக்கு பருவமழை பருவத்தின் காரணமாக, நவம்பர் முதல் பிப்ரவரி வரையிலான மாதங்களில் கிளாந்தான் ஆறு வழக்கமாக அதன் கரைகளில் அதிகமாகப் பெருக்கெடுக்கும். 1926 மற்றும் 1967ஆம்- ஆண்டுகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது.

1967-ஆம் ஆண்டு வெள்ளத்தில் 84% கிளாந்தான் மக்கள் (537,000 மக்கள்) மோசமாகப் பாதிக்கப்பட்டனர். சுமார் 125,000 பேர் வெளியேற்றப்பட்டனர். மற்றும் 38 பேர் நீரில் மூழ்கி இறந்தனர்.[3]

தொலைவுக் கணிப்பியல் வெள்ள முன்னறிவிப்பு

[தொகு]

கிளாந்தான் ஆற்றுப் படுகையில், மிக அண்மைய காலத்தில், தொலைவுக் கணிப்பியல் வெள்ள முன்னறிவிப்பு (Telemetric Flood Forecasting System) அமைப்பு நிறுவப்பட்டது. ஆற்றின் நீர்மட்டம் அதிகமாகும் போது பொதுமக்கள் எச்சரிக்கப் படுகின்றனர்.

கிளாந்தானில் வெள்ள பாதிப்பு
ஆண்டு வெளியேற்றப்பட்டவர்கள் இறப்புகள் சேதம் (US$1000)
2004 10476 12 3767
2003 2228 2 1461
2001 5800 0 2227
1993 13587 0 398
1988 41059 0 ?
1986 7963 0 1603
1983 33815 0 ?

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 R. Ibbitt; K. Takara; Mohd. Nor bin Mohd. Desa; H. Pawitan, eds. (March 2002). "Kelantan River" (PDF). Catalogue of Rivers for Southeast Asia and the Pacific (Volume 4). Archived from the original (pdf) on 2011-07-22. பார்க்கப்பட்ட நாள் 2008-12-05.
  2. Environmental Software and Services GmbH AUSTRIA (1995–2006). "WaterWare: The Kelantan River Malaysian case study". Waterware Water Resources Information Management System. Archived from the original on 2018-10-13. பார்க்கப்பட்ட நாள் 2006-04-14.
  3. "Kelantan braces for next 'Bah Merah'". The Mail Archive. 2006. பார்க்கப்பட்ட நாள் 2008-02-26.

வெளி இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Kelantan River
என்பதில் ஊடகங்கள் உள்ளன.

மேலும் காண்க

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாந்தான்_ஆறு&oldid=3631343" இலிருந்து மீள்விக்கப்பட்டது