கிளாட்-லூயி நேவியர்
Jump to navigation
Jump to search
கிளாட்-லூயி நேவியர் (Claude Louis Marie Henri Navier; பிரெஞ்சு மொழி: [klod lwi maʁi ɑ̃ʁi navje]; பெப்ருவரி 10, 1785 - ஆகஸ்டு 21, 1836) என்பவர் பிரெஞ்சு பொறியாளரும் இயற்பியலாளரும் ஆவார். இவர் எந்திரவியலில் பெரும் பங்களிப்புகள் செய்திருக்கிறார். பாய்ம இயக்கவியலில் இவரது முக்கிய பங்களிப்பு நேவியர்-ஸ்டோக்சு சமன்பாடுகள் ஆகும்; அச்சமன்பாடுகள் இவரது பெயராலும், அயர்லாந்தின் ஜார்ஜ் கேப்ரியல் ஸ்டோக்ஸ் என்பவரின் பெயராலும் இணைத்து அறியப்படுகிறது. கட்டமைப்புப் பகுப்பாய்வுக்கு (Stuctural Analysis) இவரது பங்களிப்புகளின் காரணமாக கட்டமைப்புப் பகுப்பாய்வின் தந்தை என்றும் அறியப்படுகிறார். பாரீசின் புகழ்பெற்ற ஈபெல் கோபுரத்தில் பதியப்பெற்றிருக்கும் 72 பெயர்களில் இவரது பெயரும் ஒன்றாகும்.