உள்ளடக்கத்துக்குச் செல்

கிளாடியா செய்ன்பாம் பார்டோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கிளாடியா செய்ன்பாம்
2024-ஆம் ஆண்டில் செய்ன்பாம்
மெக்சிகோ அரசத் தலைவர் தேர்வு
பதவியில்
1 அக்டோபர் 2024[1]
Succeedingஆண்ட்ரெஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடார்
மெக்சிகோ நகரத்தின் அரசத் தலைவர்கள் பட்டியல்
பதவியில்
5 திசம்பர் 2018 – 16 சூன் 2023
முன்னையவர்ஜோஸ் ராமோன் அமிய்வா
பின்னவர்மார்டி பாட்ரெஸ்
திலால்பான் நகரத்தந்தை
பதவியில்
1 அக்டோபர் 2015 – 6 திசம்பர் 2017
முன்னையவர்எக்டார் ஹியூகோ எர்மான்டெஸ் ரோட்ரிகியூஸ்
பின்னவர்ஃபெர்னான்டோ எர்னான்டேஸ் பலாசியோஸ்
மெக்சிக்கோ நகர சுற்றுச்சூழல் செயலாளர்
பதவியில்
5 திசம்பர் 2000 – 15 மே 2006
அரசுத் தலைவர்ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபெஸ் ஓப்ரடார்
முன்னையவர்அலேஜான்ட்ரோ என்சினாஸ் ரோட்ரிகியூஸ்
பின்னவர்எடுவார்டோ வேகா லோபெஸ்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு
கிளாடியா செய்ன்பாம் பார்டோ

24 சூன் 1962 (1962-06-24) (அகவை 62)
மெக்சிக்கோ நகரம், மெக்சிகோ
அரசியல் கட்சிமொரீனா (அரசியல் இயக்கம்) (2014-லிருந்து)
பிற அரசியல்
தொடர்புகள்
ஜனநாயகப் புரட்சிக் கட்சி (1989–2014)
துணைவர்கள்
 • கார்லோசு இமாஸ் கிஸ்பெர்ட்
  (தி. 1987; ம.மு. 2016)
 • ஜீசஸ் மரியா தாரிபா (தி. 2023)
பிள்ளைகள்2
பெற்றோர்கார்லோஸ் செய்ன்பாம் யோசெலெவிட்சு (தந்தை)
அன்னி பார்டோ செமோ (தந்தை)
கல்விமெக்சிகோ தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழகம்(இளங்கலை அறிவியல், முதுகலை அறிவியல், முனைவர்)
கையெழுத்து
கிளாடியா செய்ன்பாம் பார்டோ
துறைஆற்றல் சேமிப்பு, ஆற்றல் கொள்கை, வளங்குன்றா வளர்ச்சி
பணியிடங்கள்மெக்சிகோ தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழகம்

கிளாடியா செய்ன்பாம் பார்டோ[a] (Claudia Sheinbaum Pardo) (பிறப்பு 24 சூன் 1962) என்பவர் ஒரு மெக்சிகோ அரசியல்வாதி, அறிவியலாளர் மற்றும் கல்வியாளர், மெக்சிகோவின் தேர்வுக் குடியரசுத் தலைவரும் இப்பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண் அரசுத் தலைவரும் ஆவார்.[3] இவர் இடதுசாரி அரசியல் இயக்கமான மொரெனா தேசிய மறுசீரமைப்பு இயக்கத்தின் உறுப்பினர் ஆவார்.[4]

2000 முதல் 2006 வரை இவர் மெக்சிகோ நகர அரசத் தலைவராக இருந்த பதவிக்காலத்தில் செய்ன்பாம் சுற்றுச்சூழல் பகுதி செயலாளராகவும் ஆண்ட்ரேஸ் மனுவேல் லோபஸ் ஓப்ரடாரின் எதிர்காலத் தலைவராகவும் இருந்தார். இவர் 2015 முதல் 2017 வரை திலால்பான் பாரோவ் நகரத்தந்தையும் ஆவார். 2018 தேர்தலில் மெக்சிகோ நகரத்தின் அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தப் பதவியில் இருந்த போது சட்ட அமலாகத்தின் வலயப்படுத்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.[5]

தொழில்முறை அறிவியலாளராக, செய்ன்பாம் மெக்சிகோ தேசிய தன்னாட்சிப் பல்கலைக்கழகத்தில் ஆற்றல் பொறியியலில் முனைவர் பட்டத்தைப் பெற்றார். இவர் ஆற்றல், சுற்றுச்சூழல், வளங்குன்றா வளர்ச்சி ஆகிய தலைப்புகளில் 100 கட்டுரைகள் மற்றும் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். இவர் 2018-ஆம் ஆண்டில் பருவநிலை மாற்றத்துக்கான பன்னாட்டு அரசுக் குழுவிற்குப் பங்களித்தார். பிபிசியால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 100 பெண்களில் இவரும் ஒருவர் ஆவார்.[6]

2023, சூனில் செய்ன்பாம் அரசுத் தலைவராகப் பணியாற்றிய தனது பதவியிலிருந்து விலகி 2024-ஆம் ஆண்டுத் தேர்தலில் மொரீனா அரசுத் தலைவர் வேட்பாளராக வேட்புமனுத் தாக்கல் செய்தார். செப்டம்பர் 2023-இல், இவர் கட்சியில் தனது நெருங்கிய எதிர்ப்பாளரான மேனாள் வெளியுறவுத் துறை செயலாளர் மார்சிலோ எப்ரார்டு வேட்புமனுவினைத் தோற்கடித்தார்.[7] 2024 ஆம் ஆண்டு சூன் மாதத்தில் செய்ன்பாம் மெக்சிகோ பொதுத்தேர்தலில் மிகப்பெரும் வெற்றி பெற்றார். செய்ன்பாம் அரசப் பொறுப்பேற்ற பிறகு, இவர் தான் முதல் பெண் மெக்சிகோ அரசத்தலைவர் ஆவார். மேலும், முதல் யூதப் பின்னணியிலிருந்து வந்த முதல் பெண் அரசுத் தலைவரும் ஆவார். [b][9][10]

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Por qué junio y octubre son las nuevas fechas clave para las elecciones 2024 de México". CNN en Español. 20 January 2024 இம் மூலத்தில் இருந்து 26 மார்ச்சு 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240326033457/https://cnnespanol.cnn.com/2024/01/20/junio-octubre-nuevas-fechas-clave-elecciones-2024-mexico-orix/. 
 2. "Claudia: El Documental". Claudia Sheinbaum Pardo. 20 December 2023. Archived from the original on 5 June 2024. பார்க்கப்பட்ட நாள் 4 June 2024 – via YouTube.
 3. "Ruling leftist party candidate Sheinbaum elected Mexico's first female president". 3 June 2024. Archived from the original on 3 June 2024. பார்க்கப்பட்ட நாள் 3 June 2024.
 4. "Ruling leftist party candidate Sheinbaum elected Mexico's first female president". 3 June 2024. Archived from the original on 3 June 2024. பார்க்கப்பட்ட நாள் 3 June 2024.
 5. "Mexico City's 1st Elected Female Mayor Takes Office" (in ஆங்கிலம்). VOA. 5 December 2018. Archived from the original on 7 September 2023. பார்க்கப்பட்ட நாள் 7 September 2023.
 6. "BBC 100 Women 2018: Who is on the list?" (in en-GB). BBC News. 19 November 2018 இம் மூலத்தில் இருந்து 7 January 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190107022254/https://www.bbc.com/news/world-46225037%20. 
 7. "Former Mexico City Mayor Claudia Sheinbaum to be the ruling party's presidential candidate" (in ஆங்கிலம்). ABC News. 6 September 2023. Archived from the original on 7 September 2023. பார்க்கப்பட்ட நாள் 7 September 2023.
 8. "Salinas de Gortari obtuvo nacionalidad española por origen judío sefaradí". Enlace Judío (in மெக்ஸிகன் ஸ்பானிஷ்). 30 October 2022. Archived from the original on 5 June 2024. பார்க்கப்பட்ட நாள் 4 June 2024.
 9. Madry, Kylie; Valentine, Hilaire (2 June 2024). "Mexico's Sheinbaum poised to become first woman president". Reuters. https://www.reuters.com/world/americas/mexicans-vote-election-seen-crowning-first-female-president-2024-06-02/. 
 10. "Mexico's likely next president would be its first leader with a Jewish background" (in ஆங்கிலம்). AP News. 22 April 2024. Archived from the original on 28 May 2024. பார்க்கப்பட்ட நாள் 3 June 2024.


பிழை காட்டு: <ref> tags exist for a group named "lower-alpha", but no corresponding <references group="lower-alpha"/> tag was found