கிளாங் ஆறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கிளாங் ஆறு
Klang-River-20070218-009.jpg
அமைவு
சிறப்புக்கூறுகள்
முகத்துவாரம்மலாக்கா நீரிணை
நீளம்120 கிமீ

கிளாங் ஆறு (Klang River) மலேசியாவின் சிலாங்கூர் மற்றும் கோலாலம்பூர் பகுதிகளில் பாயும் ஓர் ஆறு ஆகும். இது இறுதியாக மலாக்கா நீரிணையில் கலக்கிறது. இதன் நீளம் 120 கி.மீ ஆகும். இதன் ஆற்றுப்படுகை 1288 சதுர கி,மீ ஆகும். இதில் 11 கிளையாறுகள் இணைகின்றன. இந்த ஆறு முன்னர் சுங்கை செலே என்றும் அழைக்கப்பட்டது.

மிகுந்த மக்கள்தொகை கொண்ட கிளாங் பள்ளத்தாக்கு வழியாகப் பாய்வதால் கிளாங் ஆறு மிகவும் மாசுபடுத்தப்பட்ட ஆறாக விளங்குகிறது. விரைவான கட்டமைப்பு வேலைகளால் சில இடங்களில் குறுக்கப்பட்டு ஓர் வெள்ளநீர் வடிகால் போன்று காட்சியளிக்கிறது. இதனால் கோலாலம்பூரில் மிகுந்த மழைக்காலங்களில் அடிக்கடி வெள்ளம் ஏற்படுகிறது.

கிளாங் ஆற்றின் பராமரிப்பு தனியார்சவசம் விடப்பட்டுள்ளது[1].

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கிளாங்_ஆறு&oldid=2642783" இருந்து மீள்விக்கப்பட்டது