கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு கூட்டுறவு கடன் சங்கம்
கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும் பல்நோக்கு கூட்டுறவு விற்பனைச் சங்கம், தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சி மாவட்டம், கல்வராயன்மலை வட்டம், சேராப்பட்டில் செயல்படுகிறது. கல்வராயன் மலைகளில் வாழும் மலைவாழ் பழங்குடி மக்களுக்கான பெரும் பல்நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் 4382 ஏ வகுப்பு உறுப்பினர்கள் உள்ளனர்.
சங்க நிர்வாகம்
[தொகு]1983 தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் சட்டம் மற்றும் 1988 தமிழ்நாடு கூட்டுறவுச் சங்கங்களின் விதிகளின்படி, சங்க உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகக்குழு உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகக் குழு தலைவரால் சங்க நிர்வாகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சங்கத்தின் நோக்கங்கள்
[தொகு]- மலைவாழ் மக்களுக்கு வேளாண்மை உற்பத்திகளுக்காக குறுகிய மற்றும் மத்திய காலக் கடன்கள் வழங்குதல். வேளாண் இடுபொருட்களான உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் , விவசாய கருவிகள் ஆகியவற்றை கொள்முதல் செய்து சங்க உறுப்பினர்களுக்கு வழங்குதல்.
- மலைப்பகுதிகளில் உற்பததியாகும் சிறு வனப்பொருட்கள், பால் பொருட்கள், விவசாய விளை பொருட்கள் ஆகியவற்றை கொள்முதல் செய்து கூட்டுறவு விற்பனை சங்கங்கள் மற்றும் இதர கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்தல்.
- பதனிடும் அலகுகள் நிறுவப்பட்டு, அதன்மூலம் வேளாண் விளை பொருட்கள் மற்றும் சிறுவனப் பொருட்களை மதிப்பு கூட்டி, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்தல்.
- வேளாண் சேவை மையங்கள் மூலம் விவசாய இயந்திரங்களை உறுப்பினர்களுக்கு வாடகைக்கு வழங்குதல், விவசாய இயந்திரங்களை கொள்முதல் செய்து உறுப்பினர்களுக்கு விற்பனை செய்தல் மூலம் விவசாயப் பணிகளை ஒருங்கிணைத்து சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு உதவிகள் செய்தல்.
- சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் பால் பண்ணைகள் அமைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்திக் கொடுத்தல்.
- சங்கத்தின் அங்கத்தினர்களுக்கு விவசாய விளைபொருட்கள் மற்றும் தானியங்களை சேமித்து வைப்பதற்கான கிடங்குகளைஅமைத்து தருதல்.
- மலைவாழ் மக்களிடையே சிக்கனம், சுயஉதவி மற்றும் கூட்டுறவு ஆகியவற்றை ஏற்படுத்துதல்.
- சிறு பல்பொருள் அங்காடிகள் ஏற்படுத்தி, கூட்டுறவு நிறுவனங்களிலிருந்து கொள்முதல் செய்து, விற்பனை செய்வதன் மூலம் அவர்களது தேவைகளை பூர்த்தி செய்தல்.
- உறுப்பினர்களிடமிருந்து நுழைவுக் கட்டணம், பங்குத் தொகை, வைப்புத் தொகைகள் சேகரித்தல், கூட்டுறவு வங்கிகள் மற்றும் அரசிடமிருந்து மானியங்கள், நிதி உதவிகள் பெற்று மலைவாழ் மக்களுக்கு தேவையான கடன் உதவிகள் அளித்தல்.
- தொடக்க கூட்டுறவு வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கிகளில் முகவராக செயல்பட்டு,தங்களது விவகார எல்லையில் உள்ள உறுப்பினர்களுக்கு நீண்டகால கடன்கள் பெற்று வழங்குதல்.
- வேளாண்மை உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கங்களில் முகவராக செயல்பட்டு தங்களது விவகார எல்லையில் விளையும் விளை பொருட்களை விற்பனை செய்தல்.
- இலாபம் ஈட்டக் கூடிய சிறுவனப் பொருட்கள் உற்பத்தியை குத்தகைக்கு எடுத்து, சிறுவனப் பொருட்களை அறுவடை செய்தல், அதனை சேகரித்தல் போன்ற பணிகள் அளிப்பதன் மூலம் வேலை வாய்ப்புகள் அளித்தல், அதனை லாபத்திற்கு விற்றல் போன்றவை.
- கூட்டுறவு கொள்கைகள் மற்றும் நோக்கங்களுக்கு உட்பட்டு, சங்க விவகார எல்லையில் உள்ளசங்க அங்கத்தினர்களின் பொருளாதார நிலையை உயர்த்துதல்.
வழங்கப்படும் கடன்கள்
[தொகு]- மலைவாழ் மக்களை உறுப்பினர்களாக கொண்ட இச்சங்கம் மூலம் பயிர்க்கடன்கள், நகைக்கடன்கள்,சுய உதவிக்குழுகடன்கள் மற்றும் மத்திய காலக்கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- மலைவாழ் உறுப்பினர்களுக்கு அரசால் வட்டி மானியம், பங்குத் தொகை மானியம் ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன.
- மலைவாழ் மக்களுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடன்களுக்கும், மத்திய காலக் கடன்களுக்கு கெடுதேதி வரையில் வட்டியில்லா கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- மலைவாழ் உறுப்பினர்களுக்கு மத்திய காலக்கடனில் கடன்களின் அடிப்படையில் 50% மற்றும் 75% மானியத்தில் கடன்கள் வழங்கப்படுகின்றன.
- பட்டுப்பூச்சி வளர்ப்புக்கு மலைவாழ் உறுப்பினர்களுக்கு 90% மானியத்தில் கடன்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
- கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் விவசாயக் கடன், நகைக்கடன், மத்தியக் காலக்கடன், சுய உதவிக்குழு கடன் போன்ற கடன்கள் வழங்கப்பட்டுள்ளன.
பொது விநியோகத்திட்டம்
[தொகு]கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் மூலம் 7 முழு நேர நியாய விலைக்கடைகள், 4 பகுதி நேர நியாய விலைக் கடைகள் மற்றும் 1 நகரும் நியாய விலைக் கடையினை நடத்தி வருகிறது.
உர விற்பனை
[தொகு]இச்சங்கம் இலாபத்தினை அதிகரிப்பதற்காக உரவிற்பனை செய்து வருகிறது.
பதனிடும் அலகு
[தொகு]கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் கூட்டுறவு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிதியிலிருந்து ரூ.3.37 இலட்சம் மதிப்பீட்டில் புளி பதனிடும் அலகு நிறுவப்பட்டுள்ளது. இதன் மூலம் மலைவாழ் மக்கள் விளைவிக்கும் புளியினை கொள்முதல் செய்து, மதிப்பு கூட்டி, விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு விற்பனை சங்கம் போன்ற கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது.
பொதுசேவை மையம் மற்றும் மின் ஆளுமைத் திட்டம்
[தொகு]கிளாக்காடு மலைவாழ் மக்கள் பெரும்பல நோக்கு கூட்டுறவு கடன் சங்கத்தில் பொதுசேவை மையம் அமைக்கப்பட்டு, அதன்மூலம் வருவாய்த் துறைச் சான்றுகள், சமூக நலத்துறைச் சான்றுகள் மற்றும் சிட்டா, அ பதிவேடு மற்றும் வில்லங்கச் சான்று ஆகியவ்ற்றை விண்ணப்பித்து வழங்குதல், தொலைபேசி கட்டணம் மற்றும்மின் கட்டணம் செலுத்துதல் போன்ற சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
சிறுவனப் பொருட்கள் கொள்முதல் மற்றும் விற்பனை
[தொகு]மலைப்பகுதிகளில் உற்பத்தியாகும் தேன், கடுக்காய், கறிவேப்பிலை, புளி போன்ற சிறுவனப் பொருட்களை சேகரம் செய்து, விற்பனை செய்து வருகிறது. இச்சங்கத்தின் மூலம் தேன், வரகு, மற்றும் புளி ஆகியவை கொள்முதல் செய்து, விற்பனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வேளாண் விளைபொருட்கள் கொள்முதல் மற்றும் விற்பனை
[தொகு]மலைப்பகுதிகளில் விளையும் வேளாண் விளைபொருட்களை மலைவாழ் பழங்குடி மக்களிடமிருந்து கொள்முதல் செய்து, கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறது.