கில்பர்ட் கெயித் செஸ்டர்டன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி. கெ. செஸ்டர்டன்

G. K. Chesterton, by E. H. Mills, 1909.
தொழில் பத்திரிகையாளர், எழுத்தாளர், கட்டுரையாளர்
இலக்கிய வகை புனைவு, கிறித்தவ தன்விளக்கம், கிறித்தவ தன்விளக்கம், Mystery, கவிதை
கையொப்பம் GK Chesterson signature.svg

கில்பர்ட் கெயித் செஸ்டர்டன், (ஆங்கில மொழி: Gilbert Keith Chesterton 29 மே 1874 – 14 ஜூன் 1936) என்பவர் ஒரு ஆங்கிலேய எழுத்தாளரும்,[1] பொதுநிலை இறையியலாளரும், கவிஞரும், மெய்யியலாளரும், நாடக ஆசிரியரும், செய்தியாளரும், பேச்சாளரும், கிறித்தவ தன்விளக்க அறிஞரும் ஆவார். முரண்போலியின் இளவரசர் ("prince of paradox") எனப் பலராலும் இவர் அழைக்கப்பட்டார்.[2][3]

கிறித்தவ நெறிக்காகக் காரணத்தை விளக்கிய முறையினாலும், தந்தை பிரௌன்[4] என்னும் புனைவு மாந்தருக்காகவும் இவர் பெரிதும் அறியப்படுகின்றார். இவரோடு ஒத்தக்கருத்தில்லாதவர் கூட இவரின் படைப்புகளின் குறிக்கத்தக்கத்தன்மையினை ஏற்றுள்ளனர்.[3][5] அரசியல் கருத்துரையாளராய் இவர் பழைமைவாதம் மற்றும் முற்போக்குவாதம் ஆகிய இரண்டையும் குறைகூறினார். "தற்கால உலகு பழைமைவாதிகள் மற்றும் முற்போக்குவாதிகள் என இரண்டாகப்பிரிந்துள்ளது. முற்போக்குவாதிகளுக்கு தவறுகள் செய்வதே தொழிலாக உள்ளது. பழமைவாதிகளுக்கு அத்தவறுகளை சரி செய்ய விடாமல் தடுப்பதே தொழிலாக உள்ளது." என்றார்.[6]

தன்னை அடிப்படைவாத கிறித்தவர் என அழைத்துக்கொண்ட இவர், இறுதி நாட்களில் ஆங்கிலிக்கத்திலிருந்து கத்தோலிக்க திருச்சபைக்கு மாறினார். இவரின் நண்பரான ஜார்ஜ் பெர்னாட் ஷா, இவரைப் பெரும் நுண்ணறிவாளர் எனப்புகழ்ந்துள்ளார்.[3] வரலாற்றாளர்கள் பலர் இவரை மேத்யு அர்னால்ட், தாமஸ் கார்லைல், கர்தினால் நியூமன், ஜான் இரஸ்கின் முதலியோரோடு ஒப்பிட்டு, அவர்களின் கலை வாரிசு இவர் எனப் புகழ்ந்துள்ளனர்.[7]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Obituary", Variety, 17 ஜூன் 1936
  2. Douglas, J. D. (24 மே 1974). "G.K. Chesterton, the Eccentric Prince of Paradox". Christianity Today. http://www.christianitytoday.com/ct/2001/augustweb-only/8-27-52.0.html?paging=off#bmb=1. பார்த்த நாள்: 8 ஜூலை 2014. 
  3. 3.0 3.1 3.2 "Orthodoxologist", Time, 11 அக்டோபர் 1943, 2013-05-23 அன்று மூலம் பரணிடப்பட்டது, 2008-10-24 அன்று பார்க்கப்பட்டது.
  4. O'Connor, John. Father Brown on Chesterton, Frederick Muller Ltd., 1937.
  5. Douglas 1974.
  6. "The Blunders of Our Parties", Illustrated London News, 1924-04-19.
  7. Ker, Ian (2011). G. K, Chesterton: A Biography. Oxford University Press, p. 485.